குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்!

 

குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்!

தூத்துக்குடி அருகே குவார்ட்டர் மதுவை அருந்தி விட்டு, சலங்கை ஒலியில் கமல்ஹாசன் கிணற்றின் மீது ஏறி நின்று ஆடுவது போல அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்லும் நபரால் அங்கு கும்பல் அலைமோதியது.

தூத்துக்குடி அருகே உள்ளது முத்தையாபுரம். இங்கு மாளிகைபாறை கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கொடை விழா நடைபறும். அப்போது, முருகன் (30) என்பவர் சாமியாடி குறி சொல்வது வழக்கம்.

வழக்கம் போலவே, இந்த ஆண்டும் கொடை விழா நடைபெற்றது. அப்போது, அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த பொது மக்கள் பொங்கலிட்டு கிடா வெட்டி சாமிக்கு படைத்தனர்.

ஒரே கடி-ஒரே மடக்

மேலும், மது பாட்டில்களை திறந்து பெரிய பானையில் ஊற்றி, அதை குடித்துவிட்டு முருகன் அருள் வந்து ஆடத் துவங்கினார். இதனைச் தொடர்ந்து அவரிடம் பக்தர்கள் மதுபாட்டில்களை வாரி வழங்கினர். அவற்றை பல்லால் ஒரே கடித்து திறந்து ஒரே மடக்கில் குடித்த சுவாமி சைடு டிஷ்ஷாக முட்டை, கோழி, ஆட்டு ஈரல் என எடுத்துக் கொண்டார்.

2 மணி நேரத்தில் மொத்தம் 59 மதுபாட்டில்களை குடித்து முடித்து நீண்ட அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். அதை கேட்க பொது மக்கள் பலர் கால்கடுக்க காத்திருந்தனர் என்பது தான் விஷேசம

சாமியார்களுக்கு ரொம்பத்தான் மப்பு போங்கோ…!

நன்றி தட்ஸ்தமிழ்

 

  குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! தூத்துக்குடி அருகே குவார்ட்டர் மதுவை அருந்தி விட்டு, சலங்கை ஒலியில் கமல்ஹாசன் கிணற்றின் மீது ஏறி நின்று ஆடுவது போல அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்லும் நபரால் அங்கு கும்பல் அலைமோதியது. தூத்துக்குடி அருகே உள்ளது முத்தையாபுரம். இங்கு மாளிகைபாறை கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கொடை விழா நடைபறும். அப்போது, முருகன் (30) என்பவர் சாமியாடி குறி சொல்வது வழக்கம். வழக்கம்…

0 Comments

  1. குவாட்டர் அடிச்சிட்டு அவருக்கு குப்புற படுத்த தூங்கவேண்டியதுதானே…எதுக்கு அருள்வாக்கு?? இது தேவையா அவருக்கு ???

Leave a Reply to Shuhaib-Bahrain Cancel reply

Your email address will not be published. Required fields are marked *