Remembering MN Hameed

This is a special post remembering Mr. MN Hameed.

Summarized post from various messages in groups



நினைவுகளில் மர்ஹும் MN ஹமீது சாஹிப் அவர்கள்.

ஆம்! கடல் கடந்து திரவியம் தேடிய தேங்கையின் நூற்றில் ஏன் ஆயிரத்தில் ஒருவர்…!

அவரது பெயரே பஹ்ரைனில் தேங்காய்பட்டணம் என அறியப்பட்டது.

பஹ்ரைன் ஜமாஅத்…
பட்டணம் மீட்டிங்க்…
பட்டணம் இப்தார்… அனைத்திலும் MN ஹமீது அவர்களின் பெயரே ஒலித்தன.

எங்கும்…எதிலும்…எப்பொழுதும்… நிறைந்து காணப்பட்டவர்…!

நேற்று நமது இப்தாரில் பார்க்க முடியவில்லை…!

மனம் வெதும்பி அழுகின்றோம்… நீங்கள் இல்லாமல் இரு ஒன்றுகூடல் எங்களை கடந்து விட்டது…

கடந்த வருட இப்தாரை நடத்த முடியவில்லையே…எனும் ஏக்கத்துடனே அவரது இறுதி மூச்சும் நின்று போனது…(ஊரில் இருந்தும் எண்ணங்கள் நம்முடனே) அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்

பஹ்ரைன் ஜமாஅத்தின் ஆரம்பம் முதல் அவரது இறுதி மூச்சு வரை சொன்ன ஒரே வார்த்தை பட்டணம்…பட்டணம்…!
ஊருக்கு நல்லது செய்யனும்… ஊருல உள்ள பாவங்களுக்கு ஏதாவது செய்யணும்… செய்யணும்னு அடம் பிடித்த அந்த வள்ளலை காணமுடியவில்லையே..!

வேறு கமிட்டிகள் வந்தாலும் அவரது ஆலோசனைகள் இல்லாமல் செயல்பட்டதில்லை…

மறப்பது நன்றன்று; நன்றல்லேல் அன்றே மறப்பது நன்று.
எப்படி மறக்க முடியும்…!!!

நாடும் வீடும் விட்டு தனித்தீவில் கரை ஒதுங்கி அங்கும் இங்குமாக பிரிந்திருந்த என்னையும் உங்களையும் ஒன்று சேர்த்த ஒரே உள்ளம்…!

எனது நினைவில் நான் வந்த 2004 முதல் பட்டணம் ஜமாஅத் அவர் மட்டுமே நிறைந்து காணப்பட்டார்…

BTMJ வின் துவக்கம் 1982 முதலே நிறைந்திருப்பவர்…

பஹ்ரைன் நாட்டில் ஒரு குட்டிப்பட்டணத்தை உருவாக்கியவர்…
தீனார் ஹவுஸில் ஒளி வீசியவர்…

ஊருக்காக, மக்களுக்காக, நன்மைகளுக்காக அவர் போல் இனியாரோ???

நாம் இந்த புனித ரமலானில் கண்ணியப்டுத்த வேண்டிய ஒரே உள்ளம் மர்ஹும் MN Hameed அவர்கள்…

நான் சொல்வேன் அவர் புகழினை… என்னுடன் அவரது நெருக்கம் அளவில்லாதது… நம் அனைவரிடமும், பட்டணம் எனும் சொந்தங்கள் அனைவரிடமும் பாசமுடையவர்… பாசத்திற்குரியவர் …

நினைவினில் ஏன் தெரியுமா? பட்டணத்திற்கான..அவரது ஆசைகளை, பட்டணம் குறித்த..அவரது எண்ணங்களை, நன்மைக்கான..அவரது ஏக்கங்களை நிறைவேற்ற வேண்டுமெனில் தன்னலம் பாராமல் அவர் உழைத்ததைப் போன்று நாமும் பயணிக்க வேண்டும்.
அடுத்த தலைமுறைக்கு, வருகின்ற தலைவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்…

பஹ்ரைனில் இனி நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்விலும் மறக்காமல் நினைவு படுத்தப்பட வேண்டும்.

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக!????
மண்ணறை வாழ்கையை லேசாக்கி கொடுப்பானாக!????
நம்மையும் அவரையும் சுவர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானாக!????

இந்த புனித ரமலானில் நாம் ஒவ்வொருவரும் அவருக்காக துஆ செய்ய வேண்டுகிறேன்.

அல்லாஹும்ம ஃபிர்லஹு.. வர்ஹம்ஹு.. வ ஆஃபிஹி வஃபு அன்ஹு… வ அத்கில்ஹுல் ஜனனத்த… ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்

மர்ஹூம் எம். என் ஹமீது!
====================

எம் மண்ணின் மைந்தர்
எம். என். ஹமீது
என் நெஞ்சத்து 'அகலில்
கண்ணீர் சுடரில்
நினைவில் உயிரில்
நிறைந்தவர் என்றும்!

பணம் காசுக்காகப் 
பல்லிளித்து நிற்காமல் 
பட்டணம் BTMJ - யின்
இனம் காக்க எப்போதும்
இவர்பாடு பட்டதினால்
மரணத்தில் உண்டியலில்
சில்லறையாய் அல்ல,
சீதனமாய்ப் போய்சேர்ந்தார்!

எல்லாம் வல்லவனே!
ஏந்துகிறோம் கைகளை 
இவர் பிழைகள் பொறுத்திடுவாய்!
எழில் சுவனப் பேறருள்வாய்! (ஆமீன் )

--- துஆவுடன்
(தேங்கை - தாஹா ஹுசைன் )

This is a special post remembering Mr. MN Hameed. Summarized post from various messages in groups நினைவுகளில் மர்ஹும் MN ஹமீது சாஹிப் அவர்கள். ஆம்! கடல் கடந்து திரவியம் தேடிய தேங்கையின் நூற்றில் ஏன் ஆயிரத்தில் ஒருவர்…! அவரது பெயரே பஹ்ரைனில் தேங்காய்பட்டணம் என அறியப்பட்டது. பஹ்ரைன் ஜமாஅத்…பட்டணம் மீட்டிங்க்…பட்டணம் இப்தார்… அனைத்திலும் MN ஹமீது அவர்களின் பெயரே ஒலித்தன. எங்கும்…எதிலும்…எப்பொழுதும்… நிறைந்து காணப்பட்டவர்…! நேற்று நமது இப்தாரில் பார்க்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *