BTMJ annual general body meeting 2017

BTMJ பொதுக்குழு 2017

 

எல்லாம் வால்லா  அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ)35 வது பொதுக்குழு 17/02/2017(Bahrain, Century Anarath Hall) இல்வைய்த்து  சிறப்பாக நடந்து முடிந்தது.   அல்ஹம்துலில்லாஹ்…

      ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முதலில்Adnan Abdul Salam S/o M.A.M. Abdul Salam  கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது.

       BTMJ President, S. Mohamed Maheenஅவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் சென்ற வருடம் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். இந்த நிர்வாகம் பதவி ஏற்று மூன்று வருடங்கள் கடந்து ஓடிவிட்டனஅதாவது இந்த 36 மாத காலகட்டத்தில்  முடிந்த அளவு பல  நல்லா விசயங்கள் செய்ய முயற்சித்து உள்ளோம். அதில் இயன்ற அளவு நீங்கள் கொடுத்த ஆதரவுடான் ஒரு சில  விசயங்கள் செய்யமுடிந்தன. பஹ்ரைன்ல் வாழும் நாம் ஒன்றாகவும், ஒற்றுமையாக இருந்தது கொண்டுதான்,  இதனை செய்ய முடிந்ததுஇனியும் அதிகமாக நம்மால் இயன்ற உதவிகள் செய்ய அல்லாஹ் உதவி செய்யட்டும்.

இந்த நிர்வாகத்துக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி, வழிநடத்திக்கொண்டிருக்கும் ஜனாப். பாக்ருதீன் கோய தங்கள்நமுக்கு  நல்ல ஒரு இம்மமாகவும்குடும்ப தலைவராகவும் இருப்பதால், நம்மிடம் வேற்றுமை இல்லாமல், ஒற்றுமையோடு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம்.  தொடர்ந்து இதுபோல் நாம் எப்போதும் இருக்க அல்லாஹ் அருள் செய்யட்டும். ஆமீன்..  

 

 

மேலும்  நமது நிர்வாகத்துக்கு புதிய உறுப்பினர்கள் வரவேண்டும், திறமையானவர்கள் வந்தால் இன்னும் திறமையாகவும், வேகமாகவும் செயல்படும், மற்றும்மின்றி நமது ஊர் மக்களுக்கு நன்மைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட கிடைத்த இந்த அறிய வாய்ப்பை உபயோக  படுத்திகொள்ளலாம் என்று கூறி  தனது உரையை முடித்துக் கொண்டார்.

தொடர்ந்து வந்த BTMJ Secretary Janab. Mohamed Saboor அவர்கள் பைத்துல்மால் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

முன்னாள் தலைவர் ஜனாப். குறிஞ்ஜீயார் அவர்கள் பேசும்போது நமது ஊரில், பஹ்ரைன் வாழ் மக்களுடன் கூட்டு முயற்சியில் ஒரு Business தொடங்க அறிவுரை வழங்கினார்.அதற்கான பல விபரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

          முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரும், தற்போதைய BTMJ-ன் ஆலோசகரும், மார்க்க அறிஞருமான ஜனாப். ஹாஜி பாக்ருதீன் கோயா தங்கள்  அவர்கள் தனது சிறப்புரையில்,இங்கே திரளாக கூடியிருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருப்பதாகவும், இந்த committeeயில்  ஏற்றவும் சந்தோசப்படுகிறது நான்தான், இதனை தொடங்கிவைய்ச்ச நிறைய நபர்கள் உண்டு இருந்தாலும் அவர்களில் ஒரு சிலநபர்களே இங்கு இருக்கிறார்கள், இருந்தாலும் இதனை தொடங்கிய அனைவருக்கும் அல்லாஹ் பரஹத் செய்யட்டும்.

   


 



தேங்கை உறவுகள் என்ற WhatsApp குரூப் நல்லபடி இயங்குவதாகவும், அதே போல ஒரு “வேலைவாய்ப்பு குழு” Employeement cell பஹ்ரைனில் தொடங்கவும் கேட்டுக்கொண்டார்கள்.  வேலை தேடி வருபவர்கள் விவரங்களை தெரிந்துகொள்ள வசதியாகவும் இருக்கும்.இங்கே உள்ள வேலை விபரங்களை Whatsapp group Adminதொடர்புகொண்டுதெரிவிக்குமாறு   அனைவரையும்கேட்டுக்கொண்டார்கள். நாம் எங்கே போனாலும், நம் சொந்த ஊரில்தான்  நமுக்கு மதிப்பு அதிகம்.நமது ஊர்ருக்கு  எற்றார் போல் பழகவேன்டும், அப்படி பழகினால்தான் நாம் உண்மையான வாழ்க்கையை ரசிக்க முடியும். ஒண்ணுமே நடக்கவில்லை என்றாலும், நமது ஊர் முகங்களை பார்த்தாலே பெரிய சந்தோசம் என்றும்  கூறினார்கள்.

இங்கு நாம் வேலைக்கு தகுந்தது போல் நாம் adjust செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.  

நாம் ஊரில் இருக்கும் போது  Work  to Live, இங்கே இருக்கும்போது  Live to Work  தொடக்கத்தில் கிடைக்க கூடிய  வேலையில் ஏறி நின்று கொண்டு, பிறகு திறமையே வெளிப்படுத்த வேன்டும்     என்று கூறி  தனது உரையை முடித்துக் கொண்டார்.

 

BTMJவின்செய்ற்குழுவை கலைத்துவிட்டு 16  புதிய செய்ற்குழு உறுப்பினர்களையும் தேர்ந்து எடுக்கப்பட்டது.மேலும் நமதூருக்கு இன்னும் அதிகமான  நலத்திட்டங்கள் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

புதிய செயற்குழு உறுப்பினர்கள் பெயர்கள்:-

 

1.     Mr. Zubin

2.     Mr. Abdul Rashid

3.     Mr. Brasmudeen Koya

4.     Mr. M.A.M. Khader

5.     Mr. Rafi (Sport land)

6.     Mr. Kabeer

7.     Mr. Sadiq (Sitra)

8.     Mr. M.N. Hameed

9.     Mr. Thaha Hussain

10.Mr. Jiyavudeen

11.Mr. Mazid

12.Mr. Thaseen

13.Mr. Jaleel

14.Mr. Fakhrudeen Koya S/o. Jaffer Koya Thangal

15.Mr. Muthalif

16.Mr. Khamil Kani

 

நிகழ்ச்சியினை செயற்குழு உறுப்பினர் Janab. Muthalif  சிறப்பாக தொகுத்து வழங்கினார்.  இறுதியாக மதிய விருந்துடன் இனிதே நிறைவுற்றது.

அல்ஹம்துலில்லாஹ்..கலந்து கொண்டவர்கள் சந்தோஷமாக மீண்டும் சந்திப்போம் என கூறி விடைபெற்றனர்.

 

 

BTMJ

BTMJ பொதுக்குழு 2017   எல்லாம் வால்லா  அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ)35 வது பொதுக்குழு 17/02/2017(Bahrain, Century Anarath Hall) இல்வைய்த்து  சிறப்பாக நடந்து முடிந்தது.   அல்ஹம்துலில்லாஹ்…       ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முதலில்Adnan Abdul Salam S/o M.A.M. Abdul Salam  கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது.        BTMJ President, S. Mohamed Maheenஅவர்கள் வரவேற்புடன் கூடிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *