பட்டணத்தில் நடந்தேறியவை

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

 

வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா செய்யிதின முஹம்மதின் வலா ஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்.

 

அல்லாவின் பள்ளியினை நிர்வகிக்க நடத்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகக்குழு தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக நடந்தேறிய கோஷ்டி பூசல்கள், குடுமிச் சண்டைகள், குற்றசாட்டுகள், கேலிபேச்சுகள், சாதனை பட்டியல்கள், தன்னிலை விளக்கங்கள், திரைமறைவு செயல்கள், ஜும்மாவிற்கு பின் வலிய பள்ளியில் நடந்தேறிய தள்ளு முள்ளு, வக்பு வாரிய நடவடிக்கை, துண்டு பிரசுரங்கள், சமரச பேச்சுவார்த்தைகள், FACEBOOK WAR  அனைத்தையும் கண்டு பட்டணத்தை நேசிப்போர் அனைவரும் மனம் நொந்து போயுள்ளனர்.

 

சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் 1400 வருட பாரம்பரியமிக்க ஒரு அமைப்பினை சந்தி சிரிக்க செய்வது வேதனையானது.

 

பல ஆண்டுகளுக்கு முன் இது போன்ற அரசியல் காரணங்களுக்காக ஜமாஅத் நிர்வாகம் அலைக்கழிக்கப்பட்டபோது, கட்டுகோப்பான பட்டணம் சமுதாயம் சிதறுண்டதனை இப்போதைய புதிய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜமாஅத் நிர்வாகம் நீதிமன்றம் நியமித்த ரிசீவரால் நிர்வகிக்கப்பட்டு, அன்றாட செயல்பாடுகளை கூட ஒரு மாற்று மத ரிசீவரிடம் ஒப்புதல் பெற்றே செய்யவேண்டிய அவல நிலை ஏற்பட்டது. பாரம்பரிய ஒசாக்களுக்கு பதிலாக புதிய ஒசாக்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.

 

கடலரிப்பு கேன்சர் போல தினமும் பட்டணத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க, பல தலைமுறைகளை கண்ட பொட்டக்குளம் காணாமல் போக, வாலியாறு தனது கரைகளை சுருக்கி வற்றிப்போக, ஒசையின்றி பட்டணம் நாற்புறமும் ஆக்கிரமிக்கப்பட, பல குடும்பங்கள் பட்டணத்தைவிட்டு நிரந்தரமாக குடிபெயர, வெளியூர்களில் வசிக்கும் பட்டணத்து இளைய தலைமுறை தங்களின் பெருமைமிக்க வரலாறு தெரியாமல் வாழ,   மீதியுள்ளோர் பல இயக்கங்கள் – அரசியல் கட்சிகள் என பிளவுப்பட்டுள்ள நிற்க- இனியொரு பிளவினை பட்டணம் தாங்குமா என அச்சமாக உள்ளது.

 

பள்ளி நிர்வாகம் மீண்டும் நீதிமன்ற கண்காணிப்பில் சென்றுவிட்டால் – அது நாம் பிறந்த மண்ணுக்கு நாமே தேடித்தரும் அவமானம் என்பதை உணர்ந்து-

 

இதுநாள் வரையிலான பிணக்குகளை மறப்போம். இத்துடன் நமது சண்டையினை நிறுத்திக்கொள்வோம். ஓன்றுபடுவோம்.  அல்லாவின் அருளால் இழந்த பெருமையினை மீண்டெடுப்போம்.

 

அல்லா றப்பில் ஆலமீன் தேங்காய்ப்பட்டணத்தையும் அதன் மக்களையும் அழிவிலிருந்தும், இழிவிருந்தும் காத்தருள்வானாக! ஆமீன்.

– M.N Hameed

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்   வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா செய்யிதின முஹம்மதின் வலா ஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்.   அல்லாவின் பள்ளியினை நிர்வகிக்க நடத்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகக்குழு தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக நடந்தேறிய கோஷ்டி பூசல்கள், குடுமிச் சண்டைகள், குற்றசாட்டுகள், கேலிபேச்சுகள், சாதனை பட்டியல்கள், தன்னிலை விளக்கங்கள், திரைமறைவு செயல்கள், ஜும்மாவிற்கு பின் வலிய பள்ளியில் நடந்தேறிய தள்ளு முள்ளு, வக்பு வாரிய நடவடிக்கை, துண்டு பிரசுரங்கள், சமரச பேச்சுவார்த்தைகள், FACEBOOK WAR  அனைத்தையும் கண்டு பட்டணத்தை…

0 Comments

  1. அல்லாஹ்வின் பள்ளியை நிர்வகிக்கக்கூடியவர்களுககு அல்லாஹ் தனது திருமறையில் கூறக்கூடிய குறைந்த பட்ச தகுதி இருந்திருந்தால் அண்ணன் எம் என். ஹமீது அவர்கள் மேல் குறிப்பிட்ட விஷயங்கள் நடந்திருக்காது. பாரம்பரிய மிகுந்த பட்டணத்தில் அன்று முதல் இன்றுவரை ஜமாத் நிர்வாகத்தில் பல குழப்பங்களும் முறைகேடுகளும் வாடிக்கையாகிவிட்டது. அல்லாஹ்வின் ஆலயத்தில் அரஙகேற்றப்பட்டுக் கொண்டிருககும அனாச்சாரங்கள், அவனுக்கு இணை கற்பிக்கும் ஆச்சாரங்கள் அகற்றப்பட்டு, ஏகத்துவம் மேலோங்கி அதனடிப்படையில் ஜமாத் நிர்வகிப்படாதது வரை இழிவும் அழிவும் தொடர்ந்துகொண்டுதானிருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *