BTMJ General Meeting (பொதுக்குழு) 2015

எல்லாம் வால்லா அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) 33வது பொதுக்குழு 30/01/2015 (Centurry Anarath Hall-Bahrain)ல் வைத்து சிறப்பாக நடந்தது.   அல்ஹம்துலில்லாஹ்…

சென்ற வருடம் தேர்ந்தெடுக்கபபட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வில் ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முதலில் Irfan Koya Thangal S/o Najumudeen Koya கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது.

BTMJ President, S. Mohamed Maheen அவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் சென்ற வருடம் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். அதற்கு உறுதுணையாக செயல்பட்ட செயற்குழு உறுப்பினர்களையும், அதற்காக வேண்டி பண உதவியும், பொருளுதவியும் ஏற்பாடு செய்து தந்த எல்லா உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

 

 

தொடர்ந்து வந்த பொருளாளர் (Treasurer) Janab. Mohamed Jaleel அவர்கள் பைத்துல் மால் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

 

முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரும், தற்போதைய BTMJன் ஆலோசகரும், மார்க்க அறிஞருமான ஜனாப் ஹாஜி பக்ருதீன் கோயா தங்கள் (Janab. Fakrudeen Koya Tangal) அவர்கள் தனது சிறப்புரையில், நமது முன்னோர்கள் தேங்காப்பட்டணத்தில் வறுமையில் வாழ்ந்த வரலாற்றினையும், பக்கத்துக்கு ஊர்களுக்கு சென்று வாழ்வாதரங்களை தேடிக்கொண்டதுடன், சிறு தொழில் துவங்கிய நிலைமைகளையும், கொழும்பு பயண துவக்கமும் எடுத்துரைத்த விதம் நமது கண்கள் முன்னே படமாக ஓடியது.

பின்னர் அராபிய பாலை வனங்களில் குடியேறிய நமது முன்னோர்கள் பட்ட        கஷ்டங்களும், நமதூர் மக்களை கொண்டு வந்த தகவல்களையும் அழகாக விளக்கினார்கள்.

பின்னர், சென்ற வருட BTMJ–Secretary பொறுப்பில் இருந்த Janab.Nabeel Arabath, மேலும் Treasurer பொறுப்பில் இருந்த Janab. Jaleel இவர்கள் இருவரும் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால் பதவி விலகல் கோரிக்கை விடுத்திருந்தனர். கடிதத்தை படித்து காரணத்தை விளக்கினார். மேலும் தற்காலிகமாக இந்த கோரிக்கை அங்ககீகரிக்கபட்டது, இருந்தாலும் அவர்கள் அதே பதவியில் (Senior Position)ல் தொடரவும் கேட்டுக் கொள்ளப்பட்டது

இந்த இரு பொறுப்புகளிலும், Janab. Yahya Hydorse அவர்கள் BTMJ–Secretary ஆகவும், மற்றும் Janab. Althaaf அவர்கள் BTMJ–Treasurer ஆகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பஹ்ரைனில் நமதூர் ஜமாஅத் துவக்கி மறைந்த மர்ஹூம் ஹாஜி Janab. Jamaludeen சாகிப் அவர்களின் மறுமைக்காகவும், மேலும் மறைந்த மர்ஹூம் Janab. Mujeeb Rahman அவர்கள் காலத்தில் நமது ஊருக்கு Higher Secondary Schoolக்காக BTMJ இடம் வாங்கிக் கொடுத்ததையும் நினைவூட்டி துஆ செய்ததுடன், இதற்கு முன் செயற்பட்ட நிர்வாகிகள் அனைவரையும் நினைவூட்டி, மேலும் ஆதரவினை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

 

மேலும் நாம் நமதூருக்கு என்னென்ன நலத்திட்டங்கள் செய்ய வேண்டுமென பொதுமக்களின் கருத்தினை கேட்டுக் கொண்டார். நமது உறுப்பினர்கள் ஆலோசனையின் படி பல நல்ல திட்டங்கள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

 

  • தொடர்ந்து செயலாளர் Janab. Nabeel Arabath நன்றியுரை ஆற்றினார்.
  • நிகழ்ச்சியினை செயற்குழு உறுப்பினர் Janab. Muthalif சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இறுதியாக மதிய விருந்துடன் இனிதே நிறைவுற்றது.

 

 

கலந்து கொண்டவர்கள் சந்தோஷமாக மீண்டும் சந்திப்போம் இன் ஷா அல்லாஹ் எனக் கூறி விடைபெற்றனர்.

அன்புடன் – BTMJ

 

எல்லாம் வால்லா அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) 33வது பொதுக்குழு 30/01/2015 (Centurry Anarath Hall-Bahrain)ல் வைத்து சிறப்பாக நடந்தது.   அல்ஹம்துலில்லாஹ்… சென்ற வருடம் தேர்ந்தெடுக்கபபட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வில் ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முதலில் Irfan Koya Thangal S/o Najumudeen Koya கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது. BTMJ President, S. Mohamed Maheen அவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *