Why Thengapattanam for Eid Celebration

“பெருநாள் எந்த ஊரில் கொண்டாடினால் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்ரு எந்த தேங்காப்பட்டணத்தாரிடம் கேட்டாலும் ஒரே பதில் தான் வரும் “சொந்த ஊர் தேங்காப்பட்டணத்தில் தான்”.

இதற்கு என்னதான் காரணம் ?.

 

உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

“பெருநாள் எந்த ஊரில் கொண்டாடினால் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்ரு எந்த தேங்காப்பட்டணத்தாரிடம் கேட்டாலும் ஒரே பதில் தான் வரும் “சொந்த ஊர் தேங்காப்பட்டணத்தில் தான்”. இதற்கு என்னதான் காரணம் ?.   உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

0 Comments

  1. பெருநாளுக்கு முந்தினம் இரவு வலியபள்ளி தக்பீர் கெட்டுகோண்டே பஸ் ஸ்டாண்டு செல்வது தனி சுகம்.

    புதிய புதிய இறச்சி கடைகள், ஆடு மாடு கோழி அறுப்பது பார்த்தல்.

    சிறுவர்களின் விளையாட்டு, அங்கே இங்கே ணு ஓடுவார்கள்.

    இரவு ஒரு மணி வரை திறந்திருக்கும் கடைகள்.

    எப்பவும் வெளியில் நிக்கும் நமது நண்பர்கள், மற்றும் சகோதரர்கள்.

  2. மறுநாள் வியாபாரம் செய்ய 1 நாளுக்கு முன்பே வந்து கிடக்கும் விலையாட்டு வியாபாரிகள், முட்டாய் வியாபாரிகள்.

    அடுப்பில் கறியை வைத்து விட்டு மறந்த சாதனத்தை வாங்க மகனையோ, எதாவது சிறுவனையோ கடைக்கு அனுப்பிவிட்டு கதவுக்கு பின்னால் மறைந்து நின்று காத்து நிற்கும் தாய்மார்கள்.

    பட்டணம் முழுவதும் மணக்கும் பரோட்டாகை வாசம்.

  3. பெருனாள் அன்று காலை பள்ளிக்கு ஓடி, இடம் கிடைக்குமோ என்ற பதட்டம். பின்னர் தட்டில் மாடியில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் நண்பன் அருகில் சென்றிருப்பது.

    பள்ளி பிரிந்து நண்பர்களின் அரட்டை.

    KSM Junction-னில் மதியம் வரை நிக்கும் ஐஸ்கிரீம் வண்டி, பலூண் வண்டி பார்பது. பெருநாளுக்கு மட்டும் காணப்படும் கூட்டத்தின் ஒரு பாகமாய் நின்று சேட்டைகளை ரசிப்பது.

  4. நீந்தி குளித்த வலியாறு குளியல்.கூச்சல் இடும் ksm முக்கு,,பழனி பல்லனின்,பால் ஐஸ்,கத்தியும் குத்தியும் சண்டையிட மட்டன் சிக்கன்.கூச்சல் இட,குர்பான் காளை பின்னால் நடநடக்க காத்து வாங்க ஆத்துப்பள்ளி பாறையில் உலா வர இவை அனைத்தும் இல்லாமல் வெளிநாட்டு பெருநாள்,,,,,,,,,துக்கமும் தூக்கமுமாக,,,,,,,,,,,,,,ஈத் முபாரக்,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *