எலப்பே எலப்பே ஹை – 1

பட்டணம் வலிய பள்ளியில் நீண்ட காலமாக முஅத்தினாக பணியாற்றி வந்தவர்  குளச்சே எலப்பை என்றழைக்கப்பட்ட அப்துல் ஜப்பார்.  அன்னாரின் மறைவுக்குப் பின் சிலர் சிறிது காலம் பணியாற்றி விட்டு விலகி சென்ற வண்ணம் இருந்தனர். அவர்களில் ஒருவரே இந்த பதிவில் கதாநாயகர்.

 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர் கட்டை குரலும், கரிய நிறமும், நெடிய உருவமும் கொண்டவர்.  அறுபது வயதுக்கும் மேலான இவரின் சுந்தர தமிழும் தோற்றமும் அனைவரையும் கவர்ந்தது. ஆனாலும் இவருக்கும் ஜமாஅத்திற்கும் நல்லுறவு நிலவவில்லை. வேறு சிலரும் இவரை விரும்பவில்லை. இவரது சில நடவடிக்கைகள் நிர்வாகத்திற்கு எரிச்சலூட்டியது.  பள்ளியில் நீண்ட நாட்களாக ஓடாமலிருந்த சுவர் கடிகாரத்தில் இந்த கடிகாரம் ஓடவில்லை” என எழுதி ஒட்டினார்.  இதனை நிர்வாகம் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக கருதியது.  இவருக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலுள்ள பனிப்போர் முற்றியதால், இவரிடம் நேரில் விசாரிக்க முடிவு செய்தது.

 

அதன்படி ஒரு நாள் என் முன்னிலையில்’ பகிரங்க விசாரணை நடந்தது.  விவாதம் செய்வதிலும், எதிராளிகளை மடக்குவதிலும் வல்லவரான தலைவர் விசாரணை நட்த்தினார். விசாரணையினை போது பல கேள்விகள் கேட்கப்பட்டது. அனைத்து கேள்விகளுக்கும் – தலைவரேயே மடக்கும் விதம் – பதிலளித்தார்,  இறுதியாக கடிகாரம் ஓடவில்லை என எழுதி ஒட்டி நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி பற்றி கேட்கபட்டது.

 

இந்த கடிகாரம் ஒடுவதாக நினைத்து வக்த் அறியாமல் யாரும் தொழுதுவிடக்கூடாதே என்னும் நல்லெண்ணத்திலேயே அப்படியாக எழுதியதாகவும் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எண்ணவில்லை என முஅத்தின் பதிலளித்தார்.  இப்பதிலை கேட்டதும் அங்கு கூடியிருந்தோர் அனைவரும் சிரித்துவிடதலைவர் அத்துடன் விசாரணையினை முடித்துக்கொண்டு அங்கிருந்து நழுவினார்.

-M.N Hameed

பட்டணம் வலிய பள்ளியில் நீண்ட காலமாக முஅத்தினாக பணியாற்றி வந்தவர்  ’குளச்சே எலப்பை’ என்றழைக்கப்பட்ட அப்துல் ஜப்பார்.  அன்னாரின் மறைவுக்குப் பின் சிலர் சிறிது காலம் பணியாற்றி விட்டு விலகி சென்ற வண்ணம் இருந்தனர். அவர்களில் ஒருவரே இந்த பதிவில் கதாநாயகர்.   திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர் கட்டை குரலும், கரிய நிறமும், நெடிய உருவமும் கொண்டவர்.  அறுபது வயதுக்கும் மேலான இவரின் சுந்தர தமிழும் தோற்றமும் அனைவரையும் கவர்ந்தது. ஆனாலும் இவருக்கும் ஜமாஅத்திற்கும் நல்லுறவு நிலவவில்லை. வேறு சிலரும் இவரை விரும்பவில்லை. இவரது சில நடவடிக்கைகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *