ஒரு பேரரசின் பெருங்கனவு நீ.

மங்களூரையும் கன்னியாகுமரியையும் நீர்வழி போக்குவரத்திற்காக இணைக்க திருவிதாங்கூர் மாமன்னர் கனவு கண்டார்.

பெருங்கனவு பொய்த்துப்போய் பெருமூச்சாய் முடிந்துவிட்ட போதும் மாமன்னரின் கனவினை நனவாக்க ஒரு சாம்ராஜ்யத்தின் மானங்காத்து பெருமையுடன் இன்றும் வாழும் பட்டணத்து மகள் நீ.

 

நீர்வழி போக்குவரத்திற்கான மாமன்னரின் கனவினை நனவாக்க நதிநீர் போக்குவரத்தினை பெருமையுடன் நடத்தி காட்டியவள் நீ.  எத்தனை வள்ளங்கள் உன் மீது வரிசையாக சென்றது. பட்டணம் முதல் பூவார் வரை நதிநீர் போக்குவரத்தினை பெருமையுடன் நடத்தி காட்டினாய். பட்டணம் உட்பட பல கிரமாங்களின் பொருளாதர வளர்ச்சியில் பெரும் பங்காற்றினாய்.  உன்னால் வாழ்வாதரம் பெற்றோர் பலர். உன்மீது அமைந்த பட்டணத்து பாலம் ஒரு சிறு துறைமுகமாக அல்லவா விளங்கியது?  இரயும்மன்துறையில் பஸ் போக்குவரத்து தொடங்கும் வரை  இரயும்மன்துறை, பூத்துறை, காஞ்சாம்புறம், நித்திரவிளை, நம்பாளி, தூத்தூர் என எத்தனையோ ஊர்கள் உன்னால் பயனடைந்தன.

எங்களைப்போலன்றி நீ பட்டணத்தை அகநக நட்பதால் பட்டணத்து எல்லையினை கடக்க மறுத்து, பிறந்தவீட்டை பிரிய மறுத்து கல்லடித்தோப்போடு உன் பயண எல்லையினை முடித்துவிட்ட பட்டணத்து செல்ல மகள் நீ. அதனால் தானோ நாங்களும் உனக்கு பல பெயர் சூட்டி மகிழ்கின்றோம். கல்லாம்பொத்தை ஆறு, எலப்பைவீட்டு கடவு, சாப்புக்கடை ஆறு, பாலத்தடி, மஞ்சக்குளிச்சா ஆறு, சுடுகாட்டு ஆறு – 2 கிலோ மீட்டர் கடக்கும் முன்னரே உனக்கு முந்நூறு பெயர்கள்.  உன் தாய் வலியாற்றுக்கூட இத்தனை பெயர்களில்லை. உன் தாயினை போல நீயும் பலி கேட்பதில் மட்டும் குறைவில்லை. ஆனாலும் ஒன்று – என் வகுப்பு தோழன் ஷாபி நிலைகுலைந்து பாலத்தில் விழுந்தபோது சிறு காயங்கோளோடு அவனை பாதுகாத்தாய்.

புதிய பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் மீன் குஞ்சுகளை பிடித்து விளையாடிதுண்டு. பருவ நாட்களில் நண்பர்களுடன் துள்ளி குதித்து விளையாடியதுண்டு.   தங்களை சுத்தப்டுத்தவருவொரின் அசுத்தங்களையெல்லாம் நீங்கி அவர்களையும் உன்னையும் தூய்மையாக்கி கொள்பவள் நீ.

 

பெயர்பெற்ற உன்னால் பெயர் பெற்றவர்களும் உண்டு.  பாலத்துவாதை, ஆத்து இப்ரகீம், ஆத்துக்கடை, ஆத்துக்கடை முஸ்தபா, ஆத்துக்கடை அப்துல்லா, ஆத்துக்கடை அனீபா – ஆத்துக்கடை சகோதரர்கள் …. என அப்பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.  உன்னால் தான் மஞ்ச குளிச்சா கூட இத்தனை அழகு பெற்றளாம்.  மஞ்சக்குளிச்சாவின் பெரும் நிதி புதையல் ரகசியமும் உனக்கு தெரியுமாமே?  மஞ்சக்குளிச்சா கொலைவழக்கில் நீ ஒரு மவுன சாட்சி.

 

மாமன்னரின் கனவை விரைவில் நனவாக்குவோம் என மாவட்ட ஆட்சியாளர்கள் பலரும் அறிக்கைவிட்டபோதும், நீ மட்டும் அவ்வறிக்கைகளில் மயங்காது பட்டணம் மக்களுக்காய் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றாய்.

 

நமக்கோரே மோகம்………… நமக்கோரே தாகம்………………………..

பின் குறிப்பு:  அப்துல் ரஷீதின் வேண்டுகோளுங்கிணங்க www.thengapattanam.net க்காக எழுதப்பட்டது.

 

அன்புடன்

M.N. HAMEED – BAHRAIN

மங்களூரையும் கன்னியாகுமரியையும் நீர்வழி போக்குவரத்திற்காக இணைக்க திருவிதாங்கூர் மாமன்னர் கனவு கண்டார். பெருங்கனவு பொய்த்துப்போய் பெருமூச்சாய் முடிந்துவிட்ட போதும் மாமன்னரின் கனவினை நனவாக்க ஒரு சாம்ராஜ்யத்தின் மானங்காத்து பெருமையுடன் இன்றும் வாழும் பட்டணத்து மகள் நீ.   நீர்வழி போக்குவரத்திற்கான மாமன்னரின் கனவினை நனவாக்க நதிநீர் போக்குவரத்தினை பெருமையுடன் நடத்தி காட்டியவள் நீ.  எத்தனை வள்ளங்கள் உன் மீது வரிசையாக சென்றது. பட்டணம் முதல் பூவார் வரை நதிநீர் போக்குவரத்தினை பெருமையுடன் நடத்தி காட்டினாய். பட்டணம் உட்பட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *