பட்டணத்து திருமணங்கள்

Incomplete – First Draft

 

பட்டணத்தில் திருமணங்கள் திருவிழாக்கள் போலவே கொண்டாடப்பட்டன..  

 

திருமண வீட்டாருக்கும் அவர்தம் உறவினருக்கும்  திருமணத்திற்கு முன்னும் பின்னுமாக சுமார் மூன்று மாத கால கொண்டாட்டமாகவே பட்டணத்து திருமணங்கள் அமைந்ந்திருந்தன. 

 

திருமணங்கள் அவரவர் வீட்டில் வைத்தே நடந்தேறின.  

வெளியூர் உறவினர்கள் சிலர் திருமண வீட்டிலேயே மாத கணக்கில், ஏற்பாடுகளும் சடங்குகளும் முடியும்வரை, தங்குவதும் உண்டு. நகைகள் செய்வது போன்ற திருமண வேலைகள் திருமணம் பேசி ’அச்சாரம்’ வைத்த உடனேயே, ஆரம்பமாகிவிடும் உறவினர் குடும்பத்தினர் அனைவருமாக கல்யாண வேலைகளை பங்கிட்டு செய்து முடிப்பர்.   திருமண நாளுக்கு சுமார் பல நாட்களுக்கு முன்னரே உறவுமுறை பெண்களும், அண்டைவீட்டுப் பெண்களும் வந்திருந்து மாவு இடித்தல், பலகாரங்கள் செய்வது, பாய், மெத்தை தயார் செய்தல் ஆகிய வீட்டுவேலைகளில் ஈடுபடுவர்.

மணநாள் குறித்த உடனேயே வீட்டில் ரிப்பேர் வேலைகள், அதிகப்படியான கட்டுமான பணிகள், பெயிண்டிங், வெள்ளை அடித்தல், விறகு சேகரிப்பது (மரம் முறித்து அல்லது விலைக்கு வாங்கி) ஆகிய வேலைகள் ஆரம்பாகிவிடும். 

 

மணமக்களுக்கான துணிமணிகள் சேகரிப்பது, உணவு / சமையல்ஏற்பாடு செய்தல், அழைப்பிதழ் அச்சடித்தல், ஊர்விளித்தல் முதலிய பணிகளும் ஆரம்பமாகிவிடும்.

 

உள்ளூரிலோ, பூவார், நம்பாளி, பூத்துறை, புத்தன்துறை, இனயம், மிடாலம், குளச்சல் ஆகிய ஊர்களுடனேயோ பெரும்பாலான திருமண உறவுகள் அமைந்திருந்தது.

திருமணங்கள் பகலிலோ அல்லது இரவிலோ – அவரவர் வசதிபோல – நடைபெறும்.  இரவு திருமணங்களின் போது பெட்ரோமாக்ஸ் விளக்குகள் சுமந்து முன் செல்ல அந்த வெளிச்ச்த்தில் திருமண ஊர்வலம் நடைபெறும். மணமக்களுக்கான உடைகள் அடங்கிய பெட்டகத்தினை இன்னொருவர் சுமந்து வருவார்.

 

மணமகன் தன் சுற்றமும் நட்பும் சூழ மணமகள் வீட்டிற்கு ஊர்வலமாக வந்து நிக்காஹ் செய்து கொள்வான். துவா ஓதி  வீட்டிலிருந்து புறப்படும் மணமகன் ஊர்வலமாக கல்யாணப் பாட்டுகளும், பைத்துகளும்  ஓதி பள்ளிக்கு (பள்ளிபிடாகை மணமகன் வலிய பள்ளிக்கும், தோப்புபிடாகை மணமகன் குளத்துப்பள்ளிக்கும்) வந்து அங்கும் கூட்டமாக துவா ஓதிவிட்டு பின்னர் மணமகள் வீட்டிற்கு (உள்ளூரானால் நடந்தும் / வெளியூரானால் காரில் அல்லது வள்ளத்தில்)  புறப்பட்டு செல்வான். மணமகனின் மச்சான் (சகோதரி கணவர்) மணமகனை கைப்பிடித்து அழைத்துச் செல்வார். பிளைமத், இம்பாலா போன்ற கார்கள் கல்யாண சவாரிக்காக பயன்படுத்தப்பட்ட்ன்.  இவ்வகை கார்களில் 10-15 பேர்கள் ஏற்றப்படும்.

 

மணமகள் வெளியூரானால், அவ்வூரை அடைந்ததும் அங்குள்ள பள்ளிக்கு சென்று துவா செய்துவிட்டு மணமகள் இல்லத்திற்கு சென்று நிக்காஹ் நடத்தப்படும்.

திருமண ஊர்வலம்  வரும் வழியில் ஆங்காங்கே மணமகனுக்கு வரவேற்பு நடைபெறும்.  வரவேற்பின் போது மணமகனுக்கு பாலும் பழமும் கொடுத்து, மாலை அணிவித்து மோதிரமும் பரிசாக வழங்கப்படும்.

நிக்காஹ் முடிந்து விருந்துண்டதும்,  மணமக்கள் மணமகன் வீட்டிற்கு செல்வர்.

அப்போது மணமகளின் உறவினர் சிலரும் மணமக்களுடன் செல்வர். மணமகனின் வீட்டினரை சந்தித்து பரிசுகள் பெற்றுக்கொண்டு  அன்றே மணமகள் வீட்டிற்கு திரும்பிவருவர்.  

அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப திருமண விருந்தும், திருமண ஏற்பாடுகளும் அமையும்.

மண பந்தல், ஆக்குப்புரை என தனித்தனியாக பந்தல்கள் அமைக்கப்படும்.  மணப்பந்தல் ஜரிகைகளாலும், சண ஓலைகளாலும், வாழை, இளநீர் கருக்குகளாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்படும்.  

மணமக்களுக்காக தனியாக ஜரிகைகளால் அலங்கரிக்கப்பட்ட விசிறிகள் செய்யப்படும்.  மௌலவி புக்ஸ்டால் உபைது காக்காவும், ஜவுளிக்கடை செய்துமுகம்மதும் இந்த விசிறிகள் செய்யும் வல்லுனர்கள்.  மணமக்களின் பெயர் பொறித்த தோட்டுப் பாய்களும் முடைவது உண்டு.

பணக்கார வீடுகளில் – மாப்பிள்ளை வெளியூர்காரர் ஆனால் – இரண்டு நாள் விருந்து – உள்ளூர்காரர்களுக்கு தனியாகவும், மாப்பிள்ளை வீட்டருக்கு தனியாகவும் – நடைபெறும்.

விரிஞ்சி சோறும் இறைச்சி கறியும்  என திருமண விருந்து நாலுபேர் சேர்ந்து உண்ணும் ஸாண் எனும் சஹனில் பரிமாறபட்டது.  

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு பாத்திஹா ஓதி உறவினர்களுக்கு மட்டுமாக விரிஞ்சி சோறும் இறைச்சி கறியும் பரிமாறப்படும்.

திருமணத்தன்று காலை உறவினர்களுக்கும் விருந்தினருக்கும் புரோட்டாவும்  இறைச்சி கறியும் பரிமாறப்படும்.

திருமணத்தன்று  மதிய விருந்து பெண்வீட்டார் செலவில் ஆண் வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்குமாக ஏற்பாடு செய்யப்படும்.

அறுபதுகளின் மத்தியில் ‘ஒத்தப் பிளேட்’ புரட்சியும்  ’அடுக்கு பிரியாணி’ புரட்சியும் உண்டானது. பிரியாணியுடன் முட்டை, ஜாம், உள்ளி சம்பல் (ரெய்த்தா), யானைக்கால் பப்படம், வாழைக்காய் சிப்ஸ், செந்துளுவன் பழம் என அடுக்கிக்கொண்டே போவதனால் அடுக்கு பிரியாணி என பெயர்.  பெண்வீட்டாரின் பொருளாதார வசதியினை பொறுத்து அடுக்கும் அயிட்டம் கூடிக்கொண்டே போகும்.  பெண்வீட்டில் மணமக்களின் பெயர் பொறித்த விசிறிகள் வழங்கப்படும், மணமக்களை பாராட்டி நண்பர்களால் பாரட்டு பத்திரங்களும் வினியோகம் செய்யப்படும்.

 

நிக்காஹ் முடிந்து மணமகன் வீட்டிற்கு வருமுன் மணமகள் ஆற்றுப்பள்ளிக்கு சென்று துவாசெய்து நேர்ச்சைகள் வழங்குவதுண்டு.

 

திருமண சடங்குகள் சில:

  1. முகம் மினுக்குதல்

  2. மைலாஞ்சி

 3.பொலிப்பணம்

  4. மொய்ப்பணம்

  5. படிப்பணம்

  6.. கால் கழுவுதல்

  7. மைனி பானை

  8. மச்சான் பானை

  9.  மறுவீடு

10. வீடு காணுதல்

Thanks to : MN Hameed

 

Incomplete – First Draft   பட்டணத்தில் திருமணங்கள் திருவிழாக்கள் போலவே கொண்டாடப்பட்டன..     திருமண வீட்டாருக்கும் அவர்தம் உறவினருக்கும்  திருமணத்திற்கு முன்னும் பின்னுமாக சுமார் மூன்று மாத கால கொண்டாட்டமாகவே பட்டணத்து திருமணங்கள் அமைந்ந்திருந்தன.    திருமணங்கள் அவரவர் வீட்டில் வைத்தே நடந்தேறின.   வெளியூர் உறவினர்கள் சிலர் திருமண வீட்டிலேயே மாத கணக்கில், ஏற்பாடுகளும் சடங்குகளும் முடியும்வரை, தங்குவதும் உண்டு. நகைகள் செய்வது போன்ற திருமண வேலைகள் திருமணம் பேசி ’அச்சாரம்’ வைத்த…

0 Comments

  1. Kalyana Nikkah Tym

    “Mapla Puthuponnu Nethila Gold Coin vepparu, atha Thaai Mama catch pannittu Poyiruvaaru”

  2. மொத்ததில் பெண்வீட்டுச் சிலவில் அத்தனை நிகழ்ச்சிகளும் மங்களகரமாக நடந்தேறும், பெண்வீட்டாரிடமிருந்து மகர் தொகையாக பணமும், சொத்துகளும் ஆண்வீட்டாரால் பறிக்கப்படும்,பெண்வீட்டாரின் அடுக்கு பிரியாணியை மூக்குமுட்ட தின்னுவிட்டு உப்பில்லை,புளியில்லை,பழமில்லை,பப்படமில்லை குறைகூறும் மாப்பிள்ளை வீட்டாரின் சின்னத்தனத்துக்கும் குறைவிருக்காது.சுருங்கக் கூறின் இஸ்லாத்துக்கு கிஞ்சிற்றும் சம்மந்தம் இல்லாத அனாச்சாரங்களும்,ஆச்சாரங்களும்,சடங்கு சம்பிரதாயங்களும் இஸலாத்தின் பெயரால் திருமணச் சடங்குகள் நிகழும்,கூடவே புரோகித முல்லாக்கள் நிக்காஹ் குத்பா,கூட்டுதுவா(நபி வழிக்கு முரணான) பஜனையோடு நிகாஹ் நடத்திவைக்கப்படு. இதெல்லாம் அந்தக் காலம்போல் இன்று இல்லாமல் குறைந்து வருகிறதே என்கிற ஆதங்கம் கட்டுரையாளரின் பட்டணத்துத் திருமணக் கட்டுரையிலிருந்து புரிய முடிகிறது.Those were the wedlock events alien to the islamic tredition stepped in to the arena of brides residence to remind us.

  3. எனக்கு நியாபகம் உள்ள நாட்களில் ( 2000 ‍கு முன்னர் ) பட்டணத்து கல்யாணத்துக்கு முன்னர் தான் ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 5‍ முதல் 6 பெரிய 20 கிலோ RKG Ghee டின் நிறைய மிச்சர், சிப்ஸ், முறுக்கு, கொளல் அப்பம் எல்லாம் நிறைந்து இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *