Harbor Wall Size Change

Protection Wall size will get increased soon as these is heavy sea wave attack and damages – News

பருவகால சூழலுக்கு ஏற்ப தடுப்புச்சுவரின் உயரம், அகலம் அதிகரிப்பு: தேங்காப்பட்டணம் துறைமுக அதிகாரி தகவல்

 

புதுக்கடை: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் பருவகால சூழ்நிலைக்கு ஏற்ப அலை தடுப்புச்சுவரின் உயரமும், அகலமும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நீர் மற்றும் நீர்சக்தி ஆராய்ச்சி மைய இணை இயக்குநர் தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம் முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம், இரயுமன்துறை, இரவிபுத்தன்துறை, நீரோடி உட்பட 20க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பலர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடலில் எழும் ரட்சஸ அலையினால் குமரி மாவட்ட மீனவமக்கள் மீன்பிடிக்க முடியாமல் அவதிப்படுவர். இந்த மாதங்களில் இவர்கள் கொச்சி, விழிஞ்ஞம், புனே போன்ற தொலைதூர பகுதிகளில் சென்று மீன்பிடி தொழில் செய்வர்.

 

 

அப்பொழுது குமரி மீனவர்களுக்கும், அங்குள்ள மீனவர்களுக்கும் மோதல் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.இதனால் மீனவமக்கள் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்று தேங்காப்பட்டணத்தில் 40 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அனுமதி அளித்தன. இதில் முதல்கட்ட பணிக்கென 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2010ல் எப்ரல் மாதம் 5ம் தேதி துவங்கியது.துறைமுகத்தில் பிரதான அலை தடுப்புச்சுவர் 580 மீட்டர் தூரத்திலும், துணை அலை தடுப்புச்சுவர் 120 மீட்டர் தூரத்திலும் அமைக்க வேண்டும். இதில் பிரதான அலை தடுப்புச்சுவர் 560 மீட்டர் தூரத்திலும், துணை அலை தடுப்புச்சுவர் 110 மீட்டர் தூரத்திலும் போடப்பட்டுள்ளது. பிரதான அலை தடுப்புச்சுவரின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4.5 மீட்டர் உயரத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நாளடைவில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் தடுப்புச்சுவருக்காக போடப்பட்ட கற்கள் இழுத்து செல்லப்பட்டது. இதனால் கடலலையின் வேகத்தை கட்டுப்படுத்த பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய கோர்லாக் கற்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் தடுப்புச்சுவரின் உயரம் 5.35 மீட்டராகவும், அகலம் 9.70 மீட்டராக அதிகரிக்கப்பட்டது.இந்த அளவுகளுடன் பிரதான அலை தடுப்புச்சுவரும், துணை தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்ட பிறகும் கடலலையின் கோர தாக்குதலுக்கு இப்பகுதிகள் தப்பவில்லை. இதனால் இரண்டு ஆண்டில் நிறைவடைய வேண்டி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகப்பணி இதுவரை முதற்கட்ட பணிகளே நிறைவடையாமல் மந்தநிலைக்கு சென்றுள்ளது.இந்நிலையில் நேற்று தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட வந்த மத்திய நீர் மற்றும் நீர்சக்தி ஆராய்ச்சி மைய இணை இயக்குநர் குடலை நிருபர்களிடம் கூறியதாவது:குமரி மாவட்டத்தில் இயற்கை சீற்றம் அதிகமுள்ள பகுதியாக தேங்காப்பட்டணம் கடற்கரை உள்ளது. இதனால் குறித்த நேரத்தில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகப்பணி நிறைவடையவில்லை. இப்பகுதியில் நிலவும் பருவகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிரதான அலை தடுப்புச்சுவர் மற்றும் துணை அலை தடுப்புச்சுவர்களின் உயரம் மற்றும் அகலத்தை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் சூழியல் குறித்து புனே ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து, இத்துறைமுகத்தை உயர்தரத்தில் நவீனப்படுத்தப்படும். இவ்வாறு மத்திய இணை இயக்குனர் குடலை கூறினார்.ஆய்வின் போது தமிழ்நாடு மீன்பிடி துறைமுக தலைமை இன்ஜினியர் தங்கப்பிரகாசம், தென்மண்டல இன்ஜினியர் மலையரசன், மாவட்ட மீனவர் பேரவை தலைவர் ஜோர்தான், தூத்தூர் பஞ்., தலைவர் ஜாண் அலோசியஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

via : http://kanyakumari.com/news/?p=3612

Protection Wall size will get increased soon as these is heavy sea wave attack and damages – News பருவகால சூழலுக்கு ஏற்ப தடுப்புச்சுவரின் உயரம், அகலம் அதிகரிப்பு: தேங்காப்பட்டணம் துறைமுக அதிகாரி தகவல்   புதுக்கடை: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் பருவகால சூழ்நிலைக்கு ஏற்ப அலை தடுப்புச்சுவரின் உயரமும், அகலமும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நீர் மற்றும் நீர்சக்தி ஆராய்ச்சி மைய இணை இயக்குநர் தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *