Al Ameen School

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மதிப்பிற்குரிய அல் அமீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்தினருக்கு,

கடந்த சில வருடங்களாக நமதூரின் கடலோர பகுதிகள் இயற்கை அழிவுக்கு ஆளாவது நாம் எல்லோரும் அறிந்ததே. இறுதியாக இரண்டு நாட்களுக்கு முன்பும் கடல் வெள்ளம் ஊருக்குள் புகுந்ததும், கடலோரம் அமைந்துள்ள நமது பள்ளிக் கூடமும் தண்ணீரால் சூழப்பட்டதாகவும் கேள்விப் பட்டோம்.
அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் அந்த நாள் வார விடுமுறை

நாளானதால் நமதூர் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். 
சுனாமியிலிருந்தும் அல்லாஹ் நம்மை காப்பாற்றினான். (அல்ஹம்துலில்லாஹ்)

அல் அமீன் பள்ளிக்கூடம், புதிய நிர்வாகத்தினரின் கைக்கு வந்த பின் ஊருக்குள் சில இடங்களை விலைக்கு வாங்கியது. ஆனால் அவ்விடங்களில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமே… சுனாமிக்கு பின்னரும், இவ்வாறான கடலடி சூழ்நிலைகளும் இந்நிர்வாகதினரை கவலை பட வைக்கவில்லை என்பதாகவே நாம் உணர்கிறோம்.

ஆகவே பள்ளி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் கழகமும் உடனடியாக கூடி பள்ளி குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பிற்கான தீர்க்கமான ஒரு முடிவெடுக்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பலமுறை நமதூர் அழிவின் முனைவரை சென்று வந்துள்ளது. அழிவுகள் வருவதற்கு முன், நமதூருக்கு தேவையான உடனடி அல்லது நிரந்தர பாதுகாப்பு அமைத்துக்கொடுப்பது ஊர் ஜமாஅத்தின் மிக முக்கிய பொறுப்பாகும்…



Thanks & Regards,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)மதிப்பிற்குரிய அல் அமீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்தினருக்கு,கடந்த சில வருடங்களாக நமதூரின் கடலோர பகுதிகள் இயற்கை அழிவுக்கு ஆளாவது நாம் எல்லோரும் அறிந்ததே. இறுதியாக இரண்டு நாட்களுக்கு முன்பும் கடல் வெள்ளம் ஊருக்குள் புகுந்ததும், கடலோரம் அமைந்துள்ள நமது பள்ளிக் கூடமும் தண்ணீரால் சூழப்பட்டதாகவும் கேள்விப் பட்டோம். அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் அந்த நாள் வார விடுமுறை நாளானதால் நமதூர் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். சுனாமியிலிருந்தும் அல்லாஹ் நம்மை காப்பாற்றினான். (அல்ஹம்துலில்லாஹ்) அல் அமீன் பள்ளிக்கூடம், புதிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *