ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இல்வாழ்கையை சுவர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் இல் லத் தலைவியில் கைகளில் ள்ளது

*  இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெ ரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து வி டாதீர்கள்.

*  நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப் பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளு ங்கள்.

*  கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வா ழப் பழகுங்கள்.

*  உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

* பிற ந் வீட்டாரைப் போல், புகுந்த வீட்டாரையும் மதித்து, பணிந் து நடக்கத் தவறாதீர்கள்.

*  கணவனுக்கு விருப்பமில்லாத எதையும் செய்யத் துணியாதீர் கள்.

*  கணவனுக்கு பிடித்தமான உணவுகளை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் சமைத்து பரிமாறத் தவறாதீர் கள்.

*  கணவனுக்கு விருப்பம் இல்லாதவிடத்து அடம்பிடித்து வேலைக் குப் போக துணியாதீர்கள்.

* கிழமையில் ஒருநாளைக்காவது அப்பா, அம்மா, மாமா, மாமியைக் கண்டு சுகதுக்கம் கேட்கத் தவறாதீர்கள்.

*  எதுவித காரணம் கொண்டும், புகுந்த வீட்டு குறை குற்றங்களை உற்ற நண்பிகளிடத்தோ, அல்லது உங்கள் பெற்றோரிடத்தோ அல் லது, உறவுகளிடத்தோ கூறாதீர்கள்.

*  கணவன் வீட்டாரை பெருமையாக பேசிக் கொள்ளுங்கள். நீங்கள் அங்கு விவாகம் செய் ததால் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடிவிட்டதாக பெரு மைப் பட்டுக் கொள்ளுங்கள்.

*  உங்கள் கணவரை விட நீங்கள் கல்வித் தகமை கூடியவராக அல் லது பதவியில் உயர்ந்தவராக இருந்தா லும்கூட உங்கள் தகமை யைப் பற்றி எந்த ஒரு காரணம் கொண்டும் யாரிடமும் கூ றாதீர்கள்.

*  உங்கள் கணவனிடத்து உங்கள் அன்பை யோ, அழகையோ மறைக் காதீர்கள்.

*  உங்கள் கணவனிடத்து, எதையும் மறை க்காதீர்கள். பொய் சொல் லுவதையோ, உண்மையை மறைப்பதையோ, திருடுவ தையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

*  உங்கள் கணவனுக்கு ஆலோசனை கூறு வதில் நல்ல மந்திரியாகவும், உணவு தயா ரிப்பதில் அன்னையைப் போலவும், உபச ரி ப்பதில் நல்ல சேவகியாகவும், தாம்பத்திய உறவில் தாசிப் பெண் போலவும் நடக்க பழகிக் கொள்ளுங்கள்

* ணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற் கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுட ன் வரவேற்று உபசரியுங்கள்.

*  முகமலர்ச்சியுடன் கணவரை எதிர் கொள்ளுங்கள்.

*சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

*  அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிட த்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியி லோ ஏதாவது பிரச்சினைக ளைச் சந்தித்திருக்கலாம்).

*  கணவருக்காக அக்கறையுட ன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமா றுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற் படுத்திக் கொள்ளுங்கள்).

*  உங்கள் கணவரிடம் மென் மை யான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மற்ற ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக்கூடாது என்பதை மறந்து விடாதீகள்.

*  உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!! என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தா தீர்கள்.

*  வீட்டிற்கு கணவன் வருவத ற்கு முன்னால் உங்களை அழ குபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந் திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல் லாதீர்கள்)

*  கணவனின் துணிவகைகளை துவைத்து அவரை அழகான ஆடை அணிந்து அழகு பாருங்கள்.

*  எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலு ம், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில் லாத எந்தப் போக்கையும் மே ற்கொள்ள மாட்டாளோ அத்த கையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்”.

*  உங்களுடைய கணவன் ஏழை யாகவோ அல்லது சாதாரண வே லையிலோ இருந்தால் அத ற்காக வாழ்க்கையை வெறுத்து விடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உரு வாக்கும்).

*  ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர் கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

*  தன்னம்பிக்கையும் மற்றும் கணவ ருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தா ன் உங்கள் வாழ்க்கையின் முன்னே ற்றம் என்பதை மறந்து விடாதீர்கள். உலக விஷயத்திலேயே மூழ்கிவிடா தீகள்.

*  உங்கள் செலவை குறைத்து அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு கொடுக் கவும் ஆர்வம் காட்டு ங்கள்.

*  அவசியம் இல்லாத பொருள்களை வாங்கித் தரும்படி கேட்டு கண வனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதி க்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).

*  செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் உங்கள் சொத்துக்களாகும். அவ ற்றைப் பேணி நல்லமுறையில் வளர்த் தெடுக்க உங்கள் முழு முயற்சிகளையும் முன்னெடுங்கள்.

*  உங்கள் கணவர் உங்களுக்கு செய்யும் உதவிகளுக்கு உடனுக்குடன் நன்றி செலு த்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பல வழிகளில் சந்தோஷப் படுத்துபவ ராகவும் காண்பீர்கள்.

*  உங்கள் கணவரின் நன்றியை நீங்கள் மற க்கும்போது, உங்கள் கணவர் “ஏன் இவளு க்கு நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத் தானே நொந்து கொள்வார்”.

*  உங்கள் கணவர் ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டு விட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் உங் கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு ‘தோள்” கொடுங்கள்.

*  உங்கள் கணவரை எது கோ பப்படுத்துமோ அதை தவி ர்த்து விடுங்கள். அப்படி தவி ர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத் துங்கள்.

*  நீங்கள் பிழை செய்திருந் தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொ ள்ளும் ‘உப்பு சப்பு” பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).

*  கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறை யும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

*  வெளி விஷயத்தின் காரண மாக கோபம் இருந்தால், கோ பம் குறையும் வரை காத்திரு ந்து பிறகு அவரை சமாதான ப்படுத்த முயற்சி செய்யுங்க ள். (உதாரணமாக வேலையி ல் பிரச்சினை, மற்றவர்களா ல் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)

*  அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந் த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொ ந்தரவு செய்யாதீர்கள்.

*”என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லி த்தான் ஆகவேண்டும்;” என்றோ அல்ல து எது உங்களை கோபப்படுத்தியது? என் று எனக்கு தெரிந்துதான் ஆகவே ண்டும்! என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள் வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கி ன்றது! என்றோ கேள்வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள்.

*  நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவு ம், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கண வர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப் பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்).

*  தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களை காத்துக் கொள்ளுங் கள்.

*  குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். முக்கியமாக தாம்பத்தி யம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்)

*  வீட்டில் உள்ள பொருள்களையும் குழந் தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

*  கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.

*  கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீ ர்கள்

*  உங்கள் கணவருக்குப் பிடிக்காதவ ர்களை வீட்டிற்குள் வர அனுமதிக் காதீர்கள்.

*  கணவர் வீட்டில் இருக்கும் நேரத் திலும், இல்லாத நேரத்திலும் அவ ருடைய பெற்றோர்களுடனும் உற வினர்களுடனும் நல்ல படியாக நட ந்து கொள்ளுங்கள்.

*  கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.

*  வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக் கு…) ஏற்படும்போதும் இறைவனின் வேண்டிக் கொள்ளுங்கள்.

*  உங்களிடம் உங்கள் கண வர் மோசமாக நடந்து கொ ண்டால்கூட அவரிடம் நீங் கள் நல்ல முறையாக நட ந்து பாடம் புகட்டுங்கள். (இ வள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந் தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).

*  உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உப ரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.

*  உங்களுடைய அன்புக் கணவருக் கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவை யான நல்ல கருத்துகளைச் சொல் லி அவரின் துன்பங்களில் பங்கெ டுத்துக் கொள்ளுங்கள்.

*  வீட்டை சுத்தமாகவும், அழகாகவு ம் நேர்த்தியாகவும் வைத்துக் கொ ள் ளுங்கள்.

*  பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகு படு த்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).

*  தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந் தைகளுக்கும் கொடுங்கள்.

*  அனைத்து வீட்டு வேலைக ளையும் நேர்த்தியாகச் செய் ய கற்றுக் கொள்ளுங்கள்.

*  பணத்தை கணவனுடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர் கள். (அது தர்மமாக இருந் தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் இதற்கு உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்)

*  வீடு, வாகனம் போன்றவற் ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங் கள்.

*  குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளு டைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷ யங்களில் பேணி நடந்து நல்ல பண்புகளை புகட்டுங்கள்.

*  கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் த விர்த்துக் கொள்ளுங்கள்.

*  கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையான போது சொல் லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள் ளுங்கள்)

*  கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.

*  ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மர ணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள். தீர்க்க சுமங்க லியாவாள்

நல்ல மனைவி இல்லத்தையும் சுவர்க்கமாக்குவாள்

க‌ணவன்மார்களே! இதில் பெரும்பாலவை உங்களுக்கும் பொருந்தும்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

நன்றி http://vidhai2virutcham.wordpress.com/2011/10/22/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8/

குறிப்பு- கணவனே கண்கண்ட தெய்வம் என்ற கருத்தில் எமக்கு உடன்பாடு இல்லை  மற்றவர்களின் ஆக்கங்களை வெளியிடும்போது அதில் கூட்டல் கழித்தல் செய்வது அநாகரிகம் எனவே அப்படியே வெளியிடுகிறோம் ஆனால் மனிதன் மனிதனின் காலில் விழுவதற்க்கு கண்டிப்பாக அனுமதி இல்லை அப்படி அனுமதி அளிப்பதாக இருந்தால் மனைவி கணவனின் காலில் விழ அனுமதித்திருப்பேன் என்ற கருத்தில் வரும் நபி மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெண்கள் தங்களது கணவன்மார்களை மதித்து வாழவேண்டும் ஒரு பெண் எவ்வளவு வணக்க வழிபாடுகள் தான தருமங்கள், நற்செயல் செய்தாலும் கணவனின் பொருத்தம் (அனைத்து வகையான திருப்தி) இல்லையேல் சுவர்கம் செல்ல முடியாது என்ற கருத்தில் வரும் நபி மொழியையும் நினைவில் கொள்ளவேண்டும் அதாவது பெண்கள் சுவர்க்கம் செல்வதற்கான விசாவுக்கன மெடிக்கல் சர்ட்டிபிகட் தரவேண்டியது  கணவன்மார்கள் அன்றாட வாழ்வில் வரும் சிறு மனஸ்தாபங்கள்  கூட கணவன் மனதை பாதித்திருந்தால் மெடிக்கல் அன்பிட்டாகி சுவர்க்க பயணம் தடைபெற்று  நரகபயணத்துக்கு வழிவகுத்துவிடும் ஆனால் மார்கத்துக்கு முரணான செயல்பாடுகளுக்கு கணவன் வற்புறுத்தினால் அந்த செயல்பாடுகளில் கணவனுக்கு கட்டுப்பட கூடாது




இல்வாழ்கையை சுவர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் இல் லத் தலைவியில் கைகளில் உள்ளது *  இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெ ரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து வி டாதீர்கள். *  நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப் பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளு ங்கள். *  கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வா ழப் பழகுங்கள். *  உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *