பத்மநாபசுவாமி கோவிலை பாதுகாத்தவர்கள் முஸ்லிம்கள்- கெளரி லட்சுமிபாய் தம்புராட்டி தகவல்

திருவனந்தபுரம் பூந்துறையில்(பீமா பள்ளி அருகில்) நடை பெற்ற ஈத்(பெருநாள்)- ஓண விருந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருவிதாங்கூர் ராணி கெளரி லட்சுமிபாய் தம்புராட்டி பேசியதாவது

திருவிதாங்கூர் ராஜ ஆட்சிகாலத்தில்   பத்மநாபசுவாமி கோவிலில் பாதாள அறைகளில் பாதுகாத்து வைத்திருக்கும்  ரத்தினங்கள் ,தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை கொள்ளையடிக்கும் நோக்கில் முகிலனின்  தலைமையில் பெரும் கொள்ளை படை பத்மநாபசுவாமி கோவிலை தகர்க்க முயன்றபோது தங்கள் உயிரைபற்றி கூட கவலைப்படாமல் கொள்ளை கூட்டத்துடன் போராடி முகிலனையும் முகிலனின் படையினரையும் ஓடஓட விரட்டி பத்மநாபசுவாமி கோவிலை பாதுகாத்தவர்கள் திருவனந்தபுரம் முஸ்லிம்கள்  என்று கூறினார் இந்த விழாவில் கேரள தேவசம்போர்டு(இந்து அறநிலைய துறை) அமைச்சர் சிவகுமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

தேங்காய்பட்டணமும்  திருவிதாங்கூர் அரச குடும்பமும்

தேங்காய்பட்டணம் நாடு சுதந்திரம் வரை 1000 ஆண்டுக்கு மேல்  திருவிதாங்கூர் அரசாட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது   பல போர்களையும் தேங்காய்பட்டணம் சந்நதித்திருக்கிறது   கடைசிவரை தேங்காய்பட்டணம் மக்கள்  தேச சினேகிகளாக இருந்திருக்கிறார்கள் நமது ஊரை சர்ந்தவர்கள் பலர் போர் படைவீரர்களாகவும் அரண்மணை காவலர்களாகவும் கடமையாற்றியிருக்கிறார்கள்  இத்தகைய வீரர்களின் குடும்ப திருமணவிழாக்களுகு மாப்பிளையை ஏற்றி செல்ல ராஜ கொட்டாரத்திலிருந்து யானை , குதிரையோடு பரிசு பொருட்களும்  அனுப்பி வைப்பது 1956 வரை  வழக்கமாக இருந்தது கடைசியாக பேப்பர் குடும்பத்தை சார்ந்த திருமணத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்

ஆனப்பாறை,உண்டைடான் பாறை , கொச்சத்துமூலை ஆகியவை ஆங்கில படை , டச்சு படை ஆகியவற்றோடு  நடைபெற்ற பல போருக்கு சாட்சியம் வகிக்கிறது

17ஆம் நூற்றாண்டில் டச்சு படையோடு தேங்காய்பட்டணத்தில் நடந்த போரில் 80 தேங்காய்பட்டணம் முஸ்லிம்கள் வீரமரண்மடைந்தார்கள்

இதேகால கட்டத்தில்  பூவாறை சார்ந்த ரசாக்முதலாளி என்ற மிளகு( நல்ல மிளகு) ஏற்றுமதி வியாபாரி திருவிதாங்கூர் அரசருக்கு 5000 போர் குதிரையும் தேர்ச்சி பெற்ற வீரர்களையும் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார் அந்த வீரர்களில் பலர் தேங்காய்பட்டணம் முஸ்லிம்கள்

அரசரை கொல்ல சதிகாரர்கள் விரட்டியபோது  வீட்டில் தஞ்சம் புகுந்த அரசரை வீட்டில் தங்கவைத்து காப்பாற்றியவர்கள் பூவாறு கல்லறைக்கல் குடும்பத்தினர்  அதற்கான  நன்றிக்கடனாக அரசர் கல்லறைக்கல் குடும்பத்தினருக்கு பூவாறு முதல் பட்டணம் வரை நிலங்களை அன்பளிப்பாக வழங்கினார்  PAP வீடு இருக்கும் பகுதி இந்த இணைய தளம் நடத்தும் ரசீதின் வீட்டுபகுதி உட்பட்ட தேங்காய்பட்டணத்தின் பகுதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு கல்லறைக்கல் குடும்பத்தினருக்கு அரசரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பகுதியாகும்  பொன்னன் லத்திப் குடும்பம் , சுக்கு குடும்பம் ஆகியவைதான் கல்லறைக்கல் குடும்பம்

எனவே பத்மநாபசுவாமி கோவிலை மட்டுமல்ல பத்மநாபசுவாமி தாசனின் ( திருவிதாங்கூர்அரசர் தங்களை அப்படி தான் அறிமுகம் செய்வார்  ஏன்? எதற்க்காக? என்பது வேறு கதை) உயிரையும் காப்பாற்றியது முஸ்லிம்கள்  என்பதில் பெருமிதம் கொள்வோம்


திருவனந்தபுரம் பூந்துறையில்(பீமா பள்ளி அருகில்) நடை பெற்ற ஈத்(பெருநாள்)- ஓண விருந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருவிதாங்கூர் ராணி கெளரி லட்சுமிபாய் தம்புராட்டி பேசியதாவது திருவிதாங்கூர் ராஜ ஆட்சிகாலத்தில்   பத்மநாபசுவாமி கோவிலில் பாதாள அறைகளில் பாதுகாத்து வைத்திருக்கும்  ரத்தினங்கள் ,தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை கொள்ளையடிக்கும் நோக்கில் முகிலனின்  தலைமையில் பெரும் கொள்ளை படை பத்மநாபசுவாமி கோவிலை தகர்க்க முயன்றபோது தங்கள் உயிரைபற்றி கூட கவலைப்படாமல் கொள்ளை கூட்டத்துடன் போராடி முகிலனையும் முகிலனின்…

0 Comments

  1. tHANKS GREAT INFO nAVAS KAKKA/..

    i felt like gone beyond a 100 years when reading this article.

    most of the info are very new and unbeleivable.

    thanks for this .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *