மோடி மீதான கொலை வழக்கு: கீழ் கோர்ட் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டின் விசித்திர தீர்ப்பு

புதுடில்லி: குஜராத்தில் முஸ்லிம் சமூகத்தினர் படுகொலை சம்பவம் தொடர்பாக முதல்வர் மீதான நரேந்திரமோடியை விசாரிக்க கோரிய மனு மீது சிறப்பு விசாரணைக்குழு இறுதி அறிக்கையினை கீழ் கோர்டில் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் , சிறப்பு விசாரணை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி கலவரம் நடந்தது. இதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இதில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜஃப்ரி என்பவரும் கொல்லப்பட்டார். இது தொடர்பாக , முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு ஆமதாபாத் கீழ் கோர்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யி்ன் மனைவி ஜாக்கியா ஜஃபரி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் , இந்த கொலை வழக்கில் முதல்வர் நரேந்திரமோடி உள்ளிட்ட 63 பேருக்கு தொடர்புள்ளது அவர்களை விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை இன்று நடந்தது நீதிபதிகள் டி.கே. ஜெயின், சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகிய மூவர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசா‌ரணைக்கு வந்தது.. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தற்போது விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு அதன் இறுதி அறிக்கையினை , ஆமதாபாத் கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டுள்ளனர். விசாரணை கோர்டில் செய்யப்படும் அறிக்கையின் படி வழங்கப்படும் தீர்ப்பிற்கு பின்னரே சுப்ரீம் கோர்ட் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என கூறினர்..

இது குறித்து ஜாக்கியா ஜஃப்ரி கூறுகையில், சுப்ரீம் கோர்டின் இந்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சிறப்பு விசாரணைக்குழு முறையாக விசாரணை நடத்தவில்லை. கடைசியில் நீதி வெல்லும் என கூறினார். இந்த வழக்கில் முதல்வர் நரேந்திரமோடிக்கு எதிராக தவறானபிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதிலிருந்து அவர் தற்போது விடுபட்டுள்ளார் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.

எனது கருத்து
நல்ல வேளை குஜராத் நீதிமன்றம்  தீர்மானிக்கட்டும் என்பதற்கு பதிலாக நரேந்திர மோடியே தீர்ப்பளிக்கட்டும் என்று கூறவில்லையே என்று சந்தோசபடுவோம்
மறைந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான ஈ எம் எஸ் நம்பூதிரிபாடு நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து  கூறியது நினைவு வருகிறது (அவர் கூறியதை பதிவு செய்தால் அவர் மீது பாய்ந்தது போன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்து விடும்)
இரண்டு நாட்களுக்குமுன் குஜராத் ஐ பி எஸ் அதிகாரி மோடியின் காம லீலைகளும் மோசடிகளும் , மதவெறி பயங்கரவாத  படுகொலைகளின் ஆதாரங்கள் அடங்கிய மனுவை சுப்ரீம் கோர்ட்டில்  அளித்தார் இதே நீதிபதிகள் அவரது மனுவை ஏற்று கொள்ளாமல் மோடியின் காமலீலை குறித்த தகவல்களை நீக்கிய பின்பே விசாரணைக்கு ஏற்றுகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது,

புதுடில்லி: குஜராத்தில் முஸ்லிம் சமூகத்தினர் படுகொலை சம்பவம் தொடர்பாக முதல்வர் மீதான நரேந்திரமோடியை விசாரிக்க கோரிய மனு மீது சிறப்பு விசாரணைக்குழு இறுதி அறிக்கையினை கீழ் கோர்டில் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் , சிறப்பு விசாரணை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி கலவரம் நடந்தது. இதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இதில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜஃப்ரி என்பவரும் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *