பத்மநாபசுவாமி கோவிலில் புதையலில் இருந்து குமரி மாவட்டதின் பங்கை மீட்க தமிழக முதல்வருக்கு மனு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் கண்டெடுத்த புதையலில் இருந்து குமரி மாவட்டதின் பங்கை மீட்க கோரி தமிழக முதல்வருக்கு தேங்கை நவாஸ் ஈமெயில் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்

From: Navas Shahul
To:[email protected]
Cc:[email protected]” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]””
Sent: Saturday, September 3, 2011 2:39 PM
Subject: கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் கண்டெடுத்த புதையலில் இருந்து குமரி மாவட்டதின் பங்கை மீட்க கோரி

அனுப்புநர்
தேங்கை எஸ். நவாஸ்,
முன்னாள் பொதுசெயலாளர் குமரி மாவட்ட தமிழ் மாநில இளை. காங்கிரஸ் (1995-1996),
தபால் பெட்டி எண் 12269 ,
துபாய் , யு.ஏ.இ,
தொலைபேசி 00971505340698.
இந்திய முகவரி
நஜ்மா காட்டேஜ், தோப்பு,
தேங்காப்பட்டண்ம், குமரிமாவட்டம்.
பெறுநர்
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள்,
புனித ஜார்ஜ் கோட்டை ,
சென்னை.
பொருள் ; கேரள மாநிலம் திருவனந்தபுரம்  பத்மநாபசுவாமி கோவிலில் கண்டெடுத்த புதையலில் இருந்து குமரி மாவட்டதின் பங்கை மீட்க கோரி
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு,
நீதிமன்ற உத்தரவின் பேரில் சோதனை செய்யப்பட்ட கேரள மாநிலம் திருவனந்தபுரம்  பத்மநாபசுவாமி கோவிலில்  5 பாதாள அறைகளில் மட்டும் கண்டெடுத்த  புதையலின் மதிப்பு  ரூபாய் 1லட்சம் கோடியை தாண்டியுள்ளது மேலும் ஒரு பாதாள அறை சோதனை செய்யப்பட வேண்டியுள்ளது இந்நிலையில் கேரளாவில் மேற்படி புதையலை  பொதுநலனுக்காக செலவு செய்யவேண்டும் என்றும் ஹிந்துக்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் கோரிகைகள் எழுந்துள்ளன
இந்த புதையல் திருவிதாங்கூர் சமஸ்தான அரசுக்கு சொந்தமானது என்று   அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்கின்றனர்   திருவிதாங்கூர் சமஸ்தான அரசு மக்களிடமிருந்து  வசூலித்த வரி மற்றும் நாடார் மற்றும் தாழ்த்தப்பட்ட இன பெண்கள் தங்கள் மார்புகளை மறைத்தால் விதிக்கப்படும்  அபராதம் , மற்றும் சாதி சம்பிரதயங்களை மீறுபவர்களிடமிருந்தும் ,தண்டனையிலிருந்து  விடுதலையடைய விரும்பும் குற்றவாளிகளிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட அபராதம்  போன்றவைதான் இந்த புதையல் என்று பெரும்பன்மையான வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பாதி நிலப்பகுதி இன்றைய குமரிமாவட்டம் ஆகும்.  வரி மற்றும் அபராதம் போன்றவைகள் குமரி மாவட்ட மக்களும் திருவாங்கூர் அரசுக்கு செலுத்தியுள்ளனர்  எனவே மேற்படி புதையலில் குமரி மாவட்ட மக்களுக்கும்  சம உரிமை உண்டு  இந்த புதையல் ஹிந்துகளுக்கு சொந்தமானதாக இருந்தால் புதையலில் குமரி மாவட்ட ஹிந்துக்களுக்கு சம உரிமை உண்டு  அல்லது திருவிதாங்கூர் சமஸ்தான மக்களுகு சொந்தமானதென்றால்  குமரிமாவட்டத்தை சார்ந்த அனைத்து  மக்களுக்கும் சம உரிமை உண்டு அது போன்று புதையலை பாதுகாக்கும் பொறுப்பிலும் கேரள அரசு போன்று தமிழக அரசுக்கும் சமஉரிமை உண்டு .
எனவே மாண்புமிகு அம்மா அவர்கள்  கருணைகூர்ந்து நீதிமன்றம் வாயிலாகவோ அல்லது கேரள அரசிடம் பேச்சு வார்தை நடத்தியோ  குமரிமாவட்ட மக்களின் உரிமையை பெற்று தருமாறு குமரிமாவட்ட மக்களின்  சார்பாக தாழ்மையுடன் வேன்டுகிறேன்.
அன்புடன்,
தேங்கை எஸ். நவாஸ்
03/09/2011
துபாய்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் கண்டெடுத்த புதையலில் இருந்து குமரி மாவட்டதின் பங்கை மீட்க கோரி தமிழக முதல்வருக்கு தேங்கை நவாஸ் ஈமெயில் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார் From: Navas Shahul To: “[email protected]” Cc: “[email protected]” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”[email protected]”” ; “”mlacolachel@tn.gov.in”” ; “”[email protected]”” ; “”[email protected]”” Sent: Saturday, September 3, 2011 2:39 PMSubject: கேரள மாநிலம்…

0 Comments

  1. [s][quote]நவாஸ் காக்கா விற்கு famous ஆகணும்னு ஆசை. அதற்காகத்தான் இந்த வேலையே செய்துள்ளார். இது என்ன பெரிய great work ஆ? சில்லறை வேலை ……….[/quote][/s]

  2. [img][quote]நவாஸ் காக்கா விற்கு famous ஆகணும்னு ஆசை. அதற்காகத்தான் இந்த வேலையே செய்துள்ளார். இது என்ன பெரிய great work ஆ? சில்லறை வேலை ……….[/quote][/img]

  3. தம்பி மலைநாடன்(மலையாள விஸ்வாசத்தால் வைத்த பெயரோ?) famous என்கிற வார்தையை உபயோகித்து விமர்சனம் செய்யமுடியாத ஏதாவது செயல்கத்தில் உலகத்தில் உண்டா? அப்படி உண்டு என்றால் கூறுங்கள் நான் famous என்கிற வார்தையை வைத்து விமர்சனம் செய்கிறேன்
    உதாரணமாக ;
    1, தாங்கள் பாம்பை அடித்து கொன்றால் அந்த செயல் மற்றவர்களின் முன் வீரனாக காட்டுவதற்க்காக அல்லது famous காக செய்ததாக விமர்சிக்கலாம்
    2, தாங்களின் comment பதிவு கூட famous காக செய்ததாக விமர்சிக்கலாம்
    3, ரசீத் நடத்தும் இணைய தளம் கூட famous காக செய்ததாக விமர்சிக்கலாம்
    4, தோப்பில் மாகீன்,தாடி ஜிஸ்தி,பாரூக்,இவர்களின் தாடியை கூட தனிதன்மையை உருவாக்க அல்லது famous காக வைத்திருப்பதாக விமர்சிக்கலாம்
    இப்படி கருவறை முதல் கல்லறை வரையிலான அனைத்து செயல்களையும் famous என்கிற வார்தையை வைத்து விமர்சிக்க முடியும்
    ஜமாத் பிரச்சனையில் பழைய ஜமாஅத்தை முழுமூச்சாக எதிர்தபோது அந்த நிர்வாகிகளுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் உண்டு என்றும் அதனால் தான் ஜ்மாஅத்தை எதிர்கிறேன் என்றெல்லாம் இதே வெப்சைட்டிலும் பட்டணத்திலும்,பகரைன், மற்றும் துபாயிலும் சிலர் அவதூறு விமர்சனம் செய்தார்கள்
    அதுபோன்று பத்மநாபசுவாமிக்கும் நவாஸுக்கும் தனிப்பட்ட விரோதம் அதற்காக இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை உருவாக்குகிறான் என்று விமர்சனம் வந்தாலும் வரலாம்

    அடுத்து சில்லரையின் சில வினோதங்கள்
    1,தேங்காய்பட்டணம் அரசு பள்ளிகூடத்துக்கு முதன்முறையாக கட்டிடம் கட்ட அரசு பணம் ஒதுக்கியது எனது சில்லரை தனமான செயலில் தான்
    2,காலம் காலமாக தேங்காய்பட்டணத்தில் ஒரு டிரான்ஸ்பர்மர் மட்டும் இயங்கி ஊரே பரம்பரை பரம்பரையாக இருளில் கிடந்தபோது பட்டணம் பஸ்டாண்டில் நான் சில்லறை தனமான உண்ணாவிரதம் இருந்த காரண்த்தால் அடுத்த நாள் டிரான்ஸ்பார்மர் வந்தது என்றால் சில்லறை வேலையின் மதிப்பு எப்படி?
    3, தேங்காய்பட்டணம் அரசு பள்ளிகூடத்தை
    மேல்நிலை பள்ளியாக்க வேண்டும் என்று அரசுக்கு முதன்முறையாக கோரிக்கை விடுத்தது நான் தான் அதன் பின்னர் அன்றைய தலைமை அசிரியர், வி. மதீன்,டவர் நூகு ஆகியோரின் முயற்ச்சியாலும் மேல்நிலைபள்ளியானது
    4,ராபி கொலைசெய்யபட்ட போது நமது ஊரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் வேட்டி உடுத்த அரவாணிகளாக பயந்து இருந்தபோது மீசை முளைக்காத நான் புதுக்கடையில் கண்டன போதுக்கூட்டம் நாகர்கோவிலில் பஸ் மறியல் ஆகியவற்றை நடத்தினேன்
    முதல் மூன்றும் சதக்கத்துல் ஜாரியா வை சார்ந்தது அந்த நன்மையை எதிர்பார்த்து தான் செய்தேன் இதற்க்கும் மேல் எனது சில்லறைகளை பட்டியல்லிட வேண்டாம் நினைக்கிறேன் நான்கு வருட அரசியல் வாழ்வில் நான் இவ்வளவு சில்லறைகளை செய்தேன் என்றால் சில்லரை வேலையின் மதிப்பை மலைநாடன் நீங்களே முடிவு செய்யுங்கள்!

  4. பத்மநாபசுவாமி கோவிலை பாதுகாத்தவர்கள் முஸ்லிம்கள்- கெளரி லட்சுமிபாய் தம்புராட்டி தகவல்
    திருவனந்தபுரம் பூந்துறையில்(பீமா பள்ளி அருகில்) நடை பெற்ற ஈத்(பெருநாள்)- ஓண விருந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருவிதாங்கூர் ராணி கெளரி லட்சுமிபாய் தம்புராட்டி பேசியதாவது

    திருவிதாங்கூர் ராஜ ஆட்சிகாலத்தில் பத்மநாபசுவாமி கோவிலில் பாதாள அறைகளில் பாதுகாத்து வைத்திருக்கும் ரத்தினங்கள் ,தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை கொள்ளையடிக்கும் நோக்கில் முகிலனின் தலைமையில் பெரும் கொள்ளை படை பத்மநாபசுவாமி கோவிலை தகர்க்க முயன்றபோது தங்கள் உயிரைபற்றி கூட கவலைப்படாமல் கொள்ளை கூட்டத்துடன் போராடி முகிலனையும் முகிலனின் படையினரையும் ஓடஓட விரட்டி பத்மநாபசுவாமி கோவிலை பாதுகாத்தவர்கள் திருவனந்தபுரம் முஸ்லிம்கள் என்று கூறினார் இந்த விழாவில் கேரள தேவசம்போர்டு(இந்து அறநிலைய துறை) அமைச்சர் சிவகுமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

    [b]தேங்காய்பட்டணமும் திருவிதாங்கூர் அரச குடும்பமும்[/b]

    தேங்காய்பட்டணம் நாடு சுதந்திரம் வரை 1000 ஆண்டுக்கு மேல் திருவிதாங்கூர் அரசாட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது பல போர்களையும் தேங்காய்பட்டணம் சந்நதித்திருக்கிறது கடைசிவரை தேங்காய்பட்டணம் மக்கள் தேச சினேகிகளாக இருந்திருக்கிறார்கள் நமது ஊரை சர்ந்தவர்கள் பலர் போர் படைவீரர்களாகவும் அரண்மணை காவலர்களாகவும் கடமையாற்றியிருக்கிறார்கள் இத்தகைய வீரர்களின் குடும்ப திருமணவிழாக்களுகு மாப்பிளையை ஏற்றி செல்ல ராஜ கொட்டாரத்திலிருந்து யானை , குதிரையோடு பரிசு பொருட்களும் அனுப்பி வைப்பது 1956 வரை வழக்கமாக இருந்தது கடைசியாக பேப்பர் குடும்பத்தை சார்ந்த திருமணத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்

    ஆனப்பாறை,உண்டைடான் பாறை , கொச்சத்துமூலை ஆகியவை ஆங்கில படை , டச்சு படை ஆகியவற்றோடு நடைபெற்ற பல போருக்கு சாட்சியம் வகிக்கிறது

    17ஆம் நூற்றாண்டில் டச்சு படையோடு தேங்காய்பட்டணத்தில் நடந்த போரில் 80 தேங்காய்பட்டணம் முஸ்லிம்கள் வீரமரண்மடைந்தார்கள்

    இதேகால கட்டத்தில் பூவாறை சார்ந்த ரசாக்முதலாளி என்ற மிளகு( நல்ல மிளகு) ஏற்றுமதி வியாபாரி திருவிதாங்கூர் அரசருக்கு 5000 போர் குதிரையும் தேர்ச்சி பெற்ற வீரர்களையும் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார் அந்த வீரர்களில் பலர் தேங்காய்பட்டணம் முஸ்லிம்கள்

    அரசரை கொல்ல சதிகாரர்கள் விரட்டியபோது வீட்டில் தஞ்சம் புகுந்த அரசரை வீட்டில் தங்கவைத்து காப்பாற்றியவர்கள் பூவாறு கல்லறைக்கல் குடும்பத்தினர் அதற்கான நன்றிக்கடனாக அரசர் கல்லறைக்கல் குடும்பத்தினருக்கு பூவாறு முதல் பட்டணம் வரை நிலங்களை அன்பளிப்பாக வழங்கினார் PAP வீடு இருக்கும் பகுதி இந்த இணைய தளம் நடத்தும் ரசீதின் வீட்டுபகுதி உட்பட்ட தேங்காய்பட்டணத்தின் பகுதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு கல்லறைக்கல் குடும்பத்தினருக்கு அரசரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பகுதியாகும் பொன்னன் லத்திப் குடும்பம் , சுக்கு குடும்பம் ஆகியவைதான் கல்லறைக்கல் குடும்பம்

    எனவே [b]பத்மநாபசுவாமி கோவிலை மட்டுமல்ல பத்மநாபசுவாமி தாசனின்[/b] ( திருவிதாங்கூர்அரசர் தங்களை அப்படி தான் அறிமுகம் செய்வார் ஏன்? எதற்க்காக? என்பது வேறு கதை) [b]உயிரையும் காப்பாற்றியது முஸ்லிம்கள்[/b] என்பதில் பெருமிதம் கொள்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *