0 Comments

  1. intha paniyai pala varudankalaha sirappaha nadathi varum ARAFA nanbarkaluku VALZ PALZ in eid perunal nalvazthukal

  2. [url]ஒரே சமுதாயம் ஒரே பிறை ஒரே பெருநாள் وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا “மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. (ஆல இம்ரான்:103) ரமளான் நோன்பை ஆரம்பிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயல்படுவது கட்டாயக் கடமையாகும்.இது அல்லாஹ்سبحانه وتعالى முஸ்லிம்களுக்கு விதித்த கட்டளையாகும். இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமைக்குரிய நிரூபணமாகும். ஆனால் தலைப் பிறையை தீர்மானிப்பதில் வட்டார அளவுகோல் பின்பற்றப்படுவதால்முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள். இதனால் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் வெவ்வேறுநாட்களில்(மூன்று நாட்கள் வித்தியாசம்)நிகழ்கிறது. அல்லாஹ்سبحانه وتعالىகுறிப்பிட்ட பகுதிஎன்று எல்லையை பிரிக்காமல் முஸ்லிம்களுக்கு பொதுவாகவே கட்டளையிடுகிறான். يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ “நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது.(இதனால்) நீங்கள் இறையச்ச முடையோர்களாக ஆகலாம்.” (அல் பகரா:183) இங்கு அல்லாஹ்سبحانه وتعالى நம்பிக்கையாளர்களே என்று ஒட்டுமொத்தமாகவே குறிப்பிடுகிறான். எனவே நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், நோன்பை நிறைவு செய்வதும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான கட்டளையாகும். எனவே ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை ஏனைய பகுதியினரை கட்டுப்படுத்தாது என்பது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலாகும். யாரெல்லாம் இப்பிரிவினைக்கு ஊக்கமளிக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்سبحانه وتعالىவிற்கும், அவனுடைய தூதருக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ “(தேய்ந்து வளரும்) பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”. (அல் பகரா:189) இவ்வசனத்தில் பிறைகளை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது முழு மனித சமூகத்திற்கான காலங்காட்டியாக அல்லாஹ்سبحانه وتعالىகுறிப்பிடுகிறான். எனவே பிறையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் சந்திர காலண்டர் இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுவது முரண்பாடானதாகும்.ஆனால் இன்றைய நடைமுறையில் சந்திரமாதத் துவக்கம் பகுதி வாரியாக வேறுபடுவதால் ஹிஜ்ரா காலண்டர் (சந்திர காலண்டர்) நடைமுறைக்கு ஒத்து வரவில்லையே என்பதாக முஸ்லிம்கள் வருந்துகின்றனர். ஆனால் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காலண்டர் (Gregorian Calender) இத்தகைய வேறுபாடின்றி இருப்பதால் அதை முதன்மைப்படுத்த வேண்டிய அவல நிலையிலுள்ளனர். நபி صلى الله عليه وسلمஅவர்கள் நோன்பின் ஆரம்ப நாளையும், பெருநாளையும் எவ்வாறு தீர்மானிக்க வேண்டு மென்பதை மிகத் தெளிவாக நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمِّيَ عَلَيْكُمُ الشَّهْرُ فَعُدُّوا ثَلَاثِينَ பிறையை பார்த்து நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்;பிறையை பார்த்து நோன்பை நிறைவு செய்து கொள்ளுங்கள்.மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். (அபூஹுரைரா(رضي) ,முஸ்லிம் ) لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ “பிறையை பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையை பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (இப்னு உமர் (رضي), புகாரி) இங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவான (عام) தாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம்பெறும் சூமூ (صوموا) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத் (رؤية) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் எந்தப் பகுதியிலும் பார்க்கப்படும் பிறை அனைத்து முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும். நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் முஸ்லிம்கள் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த நிலையிலும், ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியுமுள்ளனர். எனவே நபி صلى الله عليه وسلمஅவர்கள் காட்டித் தராத நடைமுறையை நாம் பின்பற்றக் கூடாது. أَحْصُوا هِلَالَ شَعْبَانَ لِرَمَضَانَ “ரமளானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள் எனநபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்”. (அபூஹூரைரா (رضي), திர்மிதி) எனவே ரமளான் மாதத்தின் துவக்க நாளை சரியாகக் கணக்கிட ஷஅபான் மாதத்தை துல்லியமாக கணக்கிட்டாக வேண்டும். ஷஅபான் சரியாக கணக்கிடப்பட வேண்டுமெனில் ரஜப் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களை சரியாக கணக்கிட்டிருக்க வேண்டும். இவ்வாறு கணக்கிட்டால்தான் ரமளான் மாதத்தின் ஆரம்ப நாளையும் இறுதி நாளையும் முஸ்லிம்கள் தெளிவாக அறிந்துஒரே நாளில் ஒற்றுமையாக நோன்பையும், பெருநாளையும் கடைபிடிக்க இயலும். பிறையை பார்ப்பது என்பதைப் பொறுத்தவரை முஸ்லிமான ஒருவர் பார்த்து விட்டதாக சாட்சி கூறினாலே ஏற்கத்தக்கதாவிடும். நபி صلى الله عليه وسلمஅவர்கள் முஸ்லிமான ஒருவர் பார்த்து சாட்சியமளித்த போது அதை ஏற்று செயல்பட்டுள்ளார்கள். جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي رَأَيْتُ الْهِلَالَ، قَالَ الْحَسَنُ فِي حَدِيثِهِ يَعْنِي رَمَضَانَ، فَقَالَ: «أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ» ، قَالَ: نَعَمْ، قَالَ: «أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ؟» ، قَالَ: نَعَمْ، قَالَ: «يَا بِلَالُ، أَذِّنْ فِي النَّاسِ فَلْيَصُومُوا غَدًا “ நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து பிறையைக் கண்டதாக கூறினார். நபி صلى الله عليه وسلم அவர்கள் அந்த நபரிடம் நீங்கள் முஸ்லிமா என்று வினவினார். அவர் ஆம் என்று பதிலளித்தார். உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் ,அல்லாஹூ அக்பர்! பிலாலே ! நாளை நோன்பு நோற்குமாறு மக்களுக்கு அறிவிப்பு செய்வீராக என்று கூறினார்கள். ” (இப்னு அப்பாஸ் (رضي), அபூதாவூது) இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் நபி صلى الله عليه وسلمஅவர்கள் அந்த நபரிடம் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்கவில்லை. இதே போன்று தகவலை ஏற்று செயல்பட்டதாக கிடைக்கப்பெறும் மற்ற ஹதீஸ்களிலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் தூரத்தை அளவுகோலாக நிர்ணயிக்கவில்லை. எனவே நபி صلى الله عليه وسلم அவர்கள் காட்டித்தராத நடைமுறையை நிர்ணயிக்க யாருக்கும் அதிகாரமில்லை. பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். ஆனால் ஒரு பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடும் போது பிறபகுதியினர்(அந்த பகுதியை ஒட்டி வாழ்ந்தாலும்) நோன்பை தொடர்கின்றனர். இச்செயல் ஹுகும் ஷரியாவிற்கு மாற்றமான பாவமான காரியமாகும். نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمَيْنِ: يَوْمِ الْفِطْرِ، وَيَوْمِ الْأَضْحَى “நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி صلى الله عليه وسلمஅவர்கள் தடை விதித்தார்கள்”. (ஆயிஷா (رضي), முஸ்லிம்) مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ “யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு மாறு செய்விட்டார்”. (அம்மார் (رضي), புகாரி) நபி صلى الله عليه وسلم அவர்களும், முஸ்லிம்களும் நோன்பு நோற்ற நிலையிலிருந்த போது பிற பகுதியிலிருந்து பிறை பார்த்தவர்கள் தகவலை காலதாமதமாக வந்து கூறியபோது நோன்பை தொடர அனுமதிக்காமல் உடனடியாக நோன்பை விட்டுவிட கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இன்று பல பகுதிகளில் பெருநாள் கொண்டாடப்படும் தகவல் நமக்கு உடனுக்குடன் கிடைக்கப்பெற்றாலும் செயல்படுத்த தயங்குகிறோம். இதனால் அறிந்து கொண்டே பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கும் ஹராமான காரியத்தை செய்து வருகிறோம். أَصْبَحَ صَائِمًا لِتَمَامِ الثَّلَاثِينَ مِنْ رَمَضَانَ , فَجَاءَ أَعْرَابِيَّانِ فَشَهِدَا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَإِنَّهُمَا أَهَلَّاهُ بِالْأَمْسِ , فَأَمَرَهُمْ «فَأَفْطَرُوا “நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தை அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்பதாக சாட்சி கூறினார்கள். நபி صلى الله عليه وسلمஅவர்கள் நோன்பை விட்டுவிடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள்”. (அபூமஸ்வூத் அல்அன்ஸாரி (رضي), தாரகுத்னி) أَنَّهُمْ كَانُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ آخِرِ النَّهَارِ , فَجَاءَ رَكْبٌ فَشَهِدُوا أَنَّهُمْ رَأَوُا الْهِلَالَ بِالْأَمْسِ , فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنْ يُفْطِرُوا وَإِذَا أَصْبَحُوا أَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ “மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம். அப்போது பகலின் இறுதிப்பகுதியில் ஒரு வாகனக் கூட்டத்தினர் வந்து,நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினர்.நபி صلى الله عليه وسلم நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுமிடத்திற்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். (அபூஉமைர் (رضي), அபூதாவூது, அஹ்மது, தாரகுத்னி) இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள أَمَرَهُمُ என்ற வார்த்தைக்கு வாகன கூட்டத்திற்குத்தான் நோன்பை விடுமாறு ஏவியதாகவும் ,மேலும் மறுநாள் அவர்களது தொழுகை இடத்திற்கு செல்லுமாறு நபிصلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டதாகவும், நபிصلى الله عليه وسلم அவர்களும் சஹாபாக்களும் நோன்பை விடவில்லை என்றும் சிலர் நவீன விளக்கமளிப்பது அறியாமையின் வெளிப்பாடாகும். வெவ்வேறு நாட்களில் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை முடிவு செய்ய நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்திற்கு பின்னர் இப்னுஅப்பாஸ்رضي الله عنه காலத்தில் நடைபெற்ற பின்வரும் வரலாற்று சம்பவத்தை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர். ، أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ، بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ، قَالَ: فَقَدِمْتُ الشَّامَ، فَقَضَيْتُ حَاجَتَهَا، وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ، فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ، ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ، فَسَأَلَنِي عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ: مَتَى رَأَيْتُمُ الْهِلَالَ؟ فَقُلْتُ: رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ، فَقَالَ: أَنْتَ رَأَيْتَهُ؟ فَقُلْتُ: نَعَمْ، وَرَآهُ النَّاسُ، وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ، فَقَالَ: ” لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ، فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ، أَوْ نَرَاهُ، فَقُلْتُ: أَوَ لَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ؟ فَقَالَ: لَا، هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” “உம்முல் பழ்ல் رضي الله عنها என்னை ஷாமிலிருந்த முஆவியாவிடம் அனுப்பி வைத்தார்கள். நான் ஷாமிற்கு சென்று அவரது வேலையை முடித்தேன். நான் ஷாமிலிருக்கும்போது ரமளானின் முதல் பிறை எனக்கு தெரிந்தது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். இப்னு அப்பாஸ் رضي الله عنه என்னை விசாரித்தார்கள். பிறகு பிறையைக் குறித்து கேட்டார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறையை பார்த்தோம் என்றேன். நீயே பிறையை பார்த்தாயா? என்றார்கள். ஆம். மக்களும் பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள். முஆவியாவும் நோன்பு நோற்றார்கள். நாங்கள் சனிக்கிழமை இரவில் பிறையை பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பதை பூர்த்தியாகும் வரை நோன்பை தொடர்வோம் என்றார்கள். முஆவியா பார்த்ததும் நோன்பு நோற்றதும் போதாதா? என்றேன். அதற்கவர்கள் போதாது நபி صلى الله عليه وسلم அவர்கள் இவ்வாறு தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடை யளித்தார்கள். (குரைப், முஸ்லிம்) இது இப்னு அப்பாஸ்رضي الله عنه அவர்களின் இஜ்திஹாத் ஆகும். பிறை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்ற நபி صلى الله عليه وسلم அவர்களின் கட்டளையை இப்னுஅப்பாஸ்رضي الله عنه வேறுவிதமாக விளங்கியிருந்ததால் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நபி صلى الله عليه وسلمஅவர்களின் ஹதீஸ்களில் பிறபகுதியில் பார்த்த தகவலை ஏற்று செயல்பட்டுள்ளதால் மேற்கண்ட சம்பவத்தை ஏற்கத்தக்க ஆதாரமாக கொள்ள முடியாது. மேலும் தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு இஜ்திஹாது பலவீனமானது என்று நிரூபிக்கப்பட்டால் அதை விட்டுவிட்டு உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த இஜ்திஹாதை பின்பற்றவேன்டும். இதை இமாம் ஸவ்கானி رحمه الله உறுதி செய்கிறார்கள். அவர் தன்னுடைய நைலுல் அவ்த்தார் என்ற நூலில் இதுபற்றி தெளிவுபடுத்தியுள்ளார்கள். وَاعْلَمْ أَنَّ الْحُجَّة إِنَّمَا هِيَ فِي الْمَرْفُوع مِنْ رِوَايَة اِبْن عَبَّاس لَا فِي اِجْتِهَاده الَّذِي فَهِمَ عَنْهُ النَّاس وَالْمُشَار إِلَيْهِ بِقَوْلِهِ ” هَكَذَا أَمَرَنَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ ” هُوَ قَوْله ” فَلَا نَزَال نَصُوم حَتَّى نُكْمِل ثَلَاثِينَ ” وَالْأَمْر الْكَائِن مِنْ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ هُوَ مَا أَخْرَجَهُ الشَّيْخَانِ وَغَيْرهمَا بِلَفْظِ ” لَا تَصُومُوا حَتَّى تَرَوْا الْهِلَال وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّة ثَلَاثِينَ ஏற்றுக் கொள்ளத்தக்க தெளிவானஆதாரம் இப்னுஅப்பாஸ்رضي الله عنه அவர்கள் அறிவித்த நபி صلى الله عليه وسلمஅவர்களின் மற்ற ஹதீஸில் தெளிவாக இருக்கிறது. இத்தகைய தெளிவான ஆதாரத்தை மக்கள் விளங்கிக்கொள்வது போல் அவரது இஜ்திஹாதிலிருந்து பெற முடியவில்லை. எனவே ஷரியாவிற்கு முரணாகவோ அல்லது சந்தேகம் கொள்ளும்படியோ இப்னுஅப்பாஸ்رضي الله عنه அவர்களின் கூற்று இருந்தால் அதை நாம் பின்பற்றத் தேவையில்லை. நபி صلى الله عليه அவர்கள் கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும். “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும்” فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ (அல் பகரா:185) என்ற வசனத்தை திரித்து ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானின் துவக்க நாளை அடைவதாக சமீபகாலமாக தவறாக விளக்கப்பட்டு வருகிறது. இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டவர் மீது நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ்سبحانه وتعالى குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக குறிப்பிடவில்லை. குர்ஆனை விளங்குவதற்கென்ற அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக விளங்கிக் கொண்டால் இத்தகைய ஃபித்னா ஏற்படவே செய்யும். مَنْ قَالَ فِي القُرْآنِ بِغَيْرِ عِلْمٍ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ “யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”. (திர்மிதி, அஹ்மது) என்ற நபி صلى الله عليه وسلمஅவர்களின் எச்சரிக்கையை சமர்ப்பிக்கின்றோம். குர்ஆனில் ஹுகும் மாற்றப்பட்ட வசனங்களான ; நாஸிக் ناسخ (மாற்றக்கூடியது), மன்ஸூக் منسوخ (மாற்றப்பட்டது) என்ற விதிமுறையுடைய வசனங்கள் உள்ளன. அல் பகரா:184 வசனம் மன்ஸூக் منسوخ ஆகும். அல் பகரா:185 வசனம் நாஸிக் ناسخ ஆகும். தப்ஸீர் இப்னு கஸீரில் இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்பது கட்டாயம் என்ற நிலையிலிருந்து விதி சற்று தளர்த்தப்பட்டிருந்தது. அப்போது அல் பகராவின் 184,185 ஆகிய வசனங்கள் அருளப்பட்டிருந்தன. நோன்பு நோற்க சக்தியிருந்தும் நோற்கவில்லையெனில் ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாயிருந்தது. இதனால் விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் (فدية) செய்து வந்தனர். எனவே தான் وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ “நோன்பின் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை அறிந்து கொள்வீர்கள்”) என்பதாக அல்லாஹ்سبحانه وتعالى குறிப்பிடுகிறான்.அதன்பின் இச்சட்டத்தை மாற்றி فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ அந்த மாதத்தை அடைந்து விட்டாலே நோன்பு நோற்றாக வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டால் நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ்سبحانه وتعالى குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக யாராவது இவ்வசனத்தை திரித்துக் கூறினால் அது வழிகேடாகும். وَهَكَذَا رَوَى الْبُخَارِيُّ عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ أَنَّهُ قَالَ لَمَّا نَزَلَتْ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعامُ مِسْكِينٍ: كَانَ مَنْ أَرَادَ أن يفطر يفادي حَتَّى نَزَلَتِ الْآيَةُ التِي بَعْدَهَا فَنَسَخَتْهَا، وَرُوِيَ أَيْضًا مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: هِيَ مَنْسُوخَةٌ، وَقَالَ السُّدِّيُّ عَنْ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعامُ مِسْكِينٍ قَالَ: يَقُولُ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ أَيْ يَتَجَشَّمُونَهُ، قَالَ عَبْدُ اللَّهِ: فَكَانَ مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ وَأَطْعَمَ مسكينا فَمَنْ تَطَوَّعَ يَقُولُ: أَطْعَمَ مِسْكِينًا آخَرَ فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ فَكَانُوا كَذَلِكَ حَتَّى نسختها فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ..البقرة: 185 “நோன்பு நோற்க சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கவில்லையெனில்) அதற்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்ற (அல் பகரா:184) வசனம் அருளப்பட்டபோது விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் செய்து வந்தனர். பின்னர் இச்சட்டத்தை மாற்றி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்ற வசனம் (அல் பகரா :185) அருளப்பட்டது”. (சலமா பின் அக்வா(رضي ,புகாரி ) நாம் இங்கு பகல் நேரத்திலிருக்கும்போது உலகின் மற்ற பகுதியினர் இரவு நேரத்திலிருப்பர். எனவே நோன்பும், பெருநாளும் வெவ்வேறு நாட்களில் (மூன்று நாட்கள் வித்தியாசத்தில்) வந்தே தீரும் என்ற அடிப்படையற்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பின்வரும் வசனத்தை சிந்தித்தாலே தெளிவு பிறக்கும். وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ “இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்னும்) கறுப்பு நூலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். பின்னர் இரவு வரும்வரை நோன்பை நிறைவு செய்யுங்கள்.” (அல் பகரா:187) இவ்வசனத்திலிருந்து நோன்பை ஆரம்பிக்கும் நேரமும் (امساك), நோன்பை நிறைவு செய்யும் நேரமும் (افطار) பூமியெங்கும் மாறுபடக்கூடியது என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே உலகெங்கும் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் நேரமும், அதை நிறைவு செய்யும் நேரமும் பகுதி வாரியாக மாறுபட்டாலும், அந்த நாள் என்பது மாறுபடாது. இதை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஜூம்ஆ தினம் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பதை சிந்தித்தாலே விளங்கும். ஜூம்ஆ தொழுகை என்பது ஒரே நாளில்தான் பூமியெங்கும் நிறைவேற்றப்படுகிறது ஒரே நேரத்திலுமல்ல. ஒரே நாளுக்குள் (24 மணி நேரத்திற்குள்) உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிப்பதை நாம் அறிந்தே வைத்துள்ளோம். வெவ்வேறு நாட்களில் நிறைவேற்றப்படுகிறது என்று யாரும் கூறுவதில்லை. எனவே பெருநாள் தொழுகை என்பது பூமியெங்கும் வெவ்வேறு நேரத்தில் நிறைவேற்றப்பட்டாலும் ஒரு நாளுக்குள் (24 மணி நேரத்துக்குள்) நிகழ்ந்து விட வேண்டும். எனவே இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருப்போர் பிறையைக் கண்டு பெருநாள் கொண்டாடுவார்களாயின் அவர்களைப் பின்பற்றி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருப்போரும் அந்நாளில் பெருநாள் கொண்டாடியாக வேண்டும். ஜகார்தாவில் பார்க்கப்படுவது முழு முஸ்லிம் உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் பிறையைப் பார்க்காமல் வானியலை(astronomy)மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோன்பையும் பெருநாளையும் தீர்மானித்துக்கொள்ளும் நடைமுறையானது ஹுகும் ஷரியாவிற்கு மாற்றமான ஒன்றாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் நமக்கு பிறையைப் பார்த்து தான் நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்கவேண்டும் என்று கடமையாக்கியிருக்க அதற்கு மாற்றமான வானியல் கணிப்பை அடிப்படையாகக் கொள்வது ஹராமாகும். தொழுகைக்குரிய நேரத்தை வானியல் அடிப்படையில் முன்கூட்டியே கணித்து செயல்படுவதுபோல நோன்பையும் பெருநாளையும் கணக்கீட்டு அடிப்படையில் முடிவு செய்யவேண்டும் என்ற வாதத்தை சிலர் முன்னிறுத்துகின்றனர்.சூரிய சுழற்சியானது எல்லா வருடங்களிலும் நிலையாக இருப்பதுபோன்று சந்திர சுழற்சி நிலையாக இருப்பதில்லை.எனினும் சூரியனின் சுழற்சி மாறுபட்டதாக நாம் அறிந்துகொண்டால் கணக்கீட்டு அட்டவனையை புறக்கணிக்கவேண்டும். மக்ரிப் தொழுகைக்கான நேரத்தை சூரிய அஸ்தமனம் மூலமாக அறிந்துவிடுகின்றோம்.சூரியன் மறைந்துவிட்டாலே மக்ரிப் வக்து வந்துவிடுவதாக ஷரியா சட்டம் நமக்கு கூறுகிறது. இங்கு மக்ரிப் நேரத்தை தீர்மானிக்கும் சட்டரீதியான காரணியாக (سبب) சூரிய அஸ்தமனம் உள்ளது.ஆனால் பிறைபார்ப்பது என்பது நோன்பு நோற்பதற்கும்,நோன்பை நிறைவு செய்வதற்கும் உள்ள sabab سبب ஆக உள்ளது.எனவே لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ…. பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்கக்கூடாது என்று நபி صلى الله عليه و سلمஅவர்கள் கூறியுள்ளதால் பிறையைப்பார்ப்பது இந்த உம்மா மீது வாஜிப் ஆக உளளது.பிறையை கணக்கீட்டு அடிப்படையில் தீர்மானிக்கலாம் என்பதற்கு தங்களுக்குரிய ஆதாரமாக கணக்கீட்டாளர்கள் கீழ்க்கண்ட ஹதீஸை முன்மொழிகின்றனர். إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ، الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا» يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ நாம் உம்மி சமுதாயமாவோம்.நமக்கு எழுதவும் தெரியாது; கணக்கிடவும் தெரியாது.மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்.அதாவது 29ஆகவோ 30 ஆகவோ இருக்கும். (இப்னு உமர்(رضي),புகாரி) நபிصلى الله عليه وسلم அவர்கள் தங்களுக்கு கணக்கு தெரியாது என்று கூறிவிட்டார்கள் .அன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் வளர்ச்சி அடையவில்லை . ஆனால் இன்று பிறையை வானியல் கணக்குஅடிப்படையில் துல்லியமாக கணிக்கமுடிகிறது. எனவே வானியல் கணக்கு ஷரியத்தில் அனுமதிக்கப்பட்டதுதான் என்ற தவறான வாதத்தை முன்வைக்கின்றனர்.வெறும் அறிவை (عقل) அடிப்படையாக வைத்து ஷரியா சட்டங்களை தீர்மானிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை.பிறையைப் பார்த்து நோன்பையும் பெருநாளையும் தீர்மானித்தல் கட்டாயக்கடமை (واجب) என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் நமக்கு தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.ஆனால் வானியலை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே மாதங்களைக் கணக்கிட்டு பின்னர் பிறையைப் பார்த்து முடிவு செய்ய தடை இல்லை. மத்ஹபு இமாம்களின் குறிப்புகளிலிருந்து உலகம் முழுவதும் ஒரே நாள்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். ஹனபி மத்ஹபின் இமாம்களில் ஒருவரான கஸானீرحمه اللهகுறிப்பிடுகிறார்கள்:- முழு உம்மத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பிறை பார்த்தலை (பகுதிவாரியாக) பின்பற்றுவது என்பது பித்அத் ஆகும். இதிலிருந்து மற்ற கருத்துக்கள் அனைத்தும் எவ்வளவு பலவீனமானது என்பதை இமாம் அவர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை அறியலாம். இமாம் ஜூஸைரி رحمه اللهஹனபி மத்ஹபில் பிறையை தீர்மானிக்கும் விதத்தை குறிப்பிடும்போது:- ولا فرق في الشاهد بين أن يكون ذكرا أو أنثى، حرا أو عبدا، وإذا رآه واحد ممن تصح شهادته، وأخبر بذلك واحد آخر تصح شهادته، فذهب الثاني إلى القاضي؛ وشهد على شهادة الأول، فللقاضي أن يأخذ بشهادته، ومثل العدل في ذلك مستور الحال على الأصح، ويجب على من رأى الهلال ممن تصح شهادته أن يشهد بذلك في ليلته عند القاضي إذا كان في المصر 1, எந்த ஒரு முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவன், ஆண் அல்லது பெண் ஆகியோர் பிறை பார்த்ததாக கூறினால், அவர் ஃபாஸிக் ஆயினும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 2. அவர் ஃபாஸிக் ஆனவரா? இல்லையா? என்பதை காஜி (இஸ்லாமிய நீதிபதி) முடிவு செய்து கொள்வார். (Fiqh al Madhaahib al Arba’a) إذا ثبتت رؤية الهلال بقُطر من الأقطار وجب الصوم على سائر الأقطار لا فرق بين القريب والبعيد منها، أي لا عبرة لاختلاف المطالع مطلقاً பிறை பார்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் உதய வேறுபாட்டை கணக்கில் கொள்ளாமல் தொலைதூர வித்தியாசம் பாராமல் நோன்பு நோற்றாகவேண்டும். (பிக்ஹுல் இபாதா – ஹனபி மத்ஹப்) يجب الصوم ويعم سائر الأقطار إذا ثبت الهلال بقطر منها، لا فرق بين القريب والبعيد من جهة الثبوت، ولا عبرة باختلاف المطالع مطلقاً மற்ற நாடுகளில் பிறை பார்க்கப்பட்டு நோன்பு ஆரம்பித்துவிடுமானால் உதயவேறுபாட்டை பொருட்படுத்தாமல் தொலைதூர வித்தியாசமின்றி செயல்படுத்தியாக வேண்டும். (பிக்ஹுல் இபாதா -மாலிக் மத்ஹப்) لَا عِبْرَةَ لِاخْتِلَافِ الْمَطَالِعِ فِي ظَاهِرِ الرِّوَايَةِ كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ தெளிவான அறிவிப்புகளின்படி கருத்து வேறுபாட்டிற்கு பிறை உதிக்குமிடத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. (ஃபதாவா ஆலம்கீரி- ஃபதாவா காழிகான்) இமாம் இப்னு தைமிய்யா رحمه الله குறிப்பிடுகிறார்கள்:- “ஒருவர் பிறை பார்த்ததை யார் உரிய நேரத்தில் அறிந்து கொள்கிறாரோ அவர் அதை பின்பற்றி நோன்பை ஆரம்பித்தல், நோன்பை முடித்துக் கொள்ளல், குர்பானி ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதை குறிப்பிட்ட தூரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வரையறைப்படுத்துவது ஷரியாவிற்கு மாற்றமானதாகும் (A1- Fatawa Volume 5, page, 111) தாருல் உலூம் தேவ்பந்த் நிறுவனர் மவ்லானா ரசீத் அஹமது கங்கோஹி رحمه الله :- கல்கத்தா மக்களுக்கு வெள்ளிக்கிழமையன்று ரமளானின் பிறை தெரிந்தது. ஆனால் மக்காவிலோ வியாழக்கிழமை பிறை பார்க்கப்பட்டது.கல்கத்தா மக்களுக்கு இத்தகவல் பின்னர் தெரியவந்தால் மக்காவை பின்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும் பிறகு விடுபட்ட முதல் நோன்பை களா செய்திட வேண்டும். (Sharh Tirmizi, Kaukab un Durri, pge – 336) தமிழகத்தின் தாய்க்கல்லூரியான வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் அஃலா ஹழரத் رحمه الله உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்று செயல்படுவது அவசியமாகும் என்பதாக கூறியுள்ளார்கள்……. (பாகியாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வா தொகுப்பு) தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா:- பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கேனும் உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் எவ்வளவு தொலைவிலிருப்பினும் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திலிருப்பினும் அதை செயல்படுத்தியாக வேண்டும். (Fatawa Darul Uloom Deoband,Vol 6, page – 380) ஓர் ஊரில் இறையச்சமுடைய ஒருவரால் பிறை பார்க்கப்படுமேயானால் அது இவ்வுலகிலுள்ள மற்ற அனைவர் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (ரஹ்மத்துல் உம்மா) ஓர் ஊரார் பிறையைப் பார்த்தால் அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (அல்முஃனி, அன்இன்ஸாப்) பிறையை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். பிறையை பார்த்து நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளதால் ஓர் ஊரார் பிறையைப் பார்த்திடும்போது அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். நபி صلى الله عليه وسلم அவர்களின் கட்டளை முழு உம்மத்தினரையும் முன்னிலைப்படுத்தியே கூறப்பட்டதாகும். எனவே இந்த உம்மத்தினிரில் எந்த இடத்திலாவது பிறையைப் பார்ப்பது முழு உம்மத்தினரும் பிறையைப் பாத்தது போன்றதாகும். (ஃபிக்ஹ் சுன்னாஹ்) சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் வரை இந்தியத் துணைக் கண்டத்தின் முஸ்லிம்கள் கந்தஹாரிலிருந்து கொழும்பு வரை; அதே போன்று ரங்கூனிலிருந்து கராச்சி வரை ஒற்றுமையாக நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியும் மகிழ்ந்தனர். திடீரென்று ஒரு நவீனம் தோன்றி இந்த உம்மா பிளவுபடுத்தப்பட்டு (1947 தேசப் பிரிவினைக்குப் பின்னர்) வேறுபட்ட நாட்களில் நோன்பும், பெருநாளும் என்ற பித்அத் உருவாக்கப்பட்டது. மேலும் 1971 க்குப் பின்னர் வங்க தேச தகவலை (1971 வரை கிழக்கு பாகிஸ்தான்) ஏற்பதில்லை என்ற பித்அத்தை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உருவாக்கினர். அதே போன்று சில வருடங்களுக்கு முன்னர் வரை இலங்கை வானொலியின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்து அந்த தகவலை எற்று பெருநாள் கொண்டாடிய தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தத்தம் பகுதி தனிப்பிறை என்ற பித்அத் உருவாகியது. தமிழக முஸ்லிம்கள் கேரள மாநிலத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றால் அதை ஏற்பதில்லை. ஆனால் அதைவிட தூரமான இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவலை ஏற்றுக் கொள்கிறார்கள். இது எதனால்? கேரளாவின் எல்லையை ஒட்டிய ஊர்களிலுள்ளோர்(கன்னியாகுமரி மாவட்டம்) பெரும்பாலான சமயங்களில் கேரளத்தையும், சில சமயங்களில் தமிழகத்தையும் பின்பற்றி முடிவெடுக்கின்றனர். தேசியம், வட்டாரம், மொழி உணர்வு போன்ற அளவுகோலைக் கொண்டு மனோ இச்சையின்படி முடிவெடுக்க நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்தார்களா? நபி صلى الله عليه وسلمஅவர்கள் இத்தகையதேசியவாத நோய் குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள். لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ “எவர் ஒருவர் عَصَبِيَّةٍ அஸபிய்யாவிற்காக(தேசியவாதம் ,இனவாதம்) மக்களை அழைக்கிறாரோ, அஸபிய்யாவிற்காக போராடுகிறாரோ, அஸபிய்யாவிற்காக மரணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”. (அபூதாவூது). எனவே, முஸ்லிம்களே! ஓர் ஆடவரோ அல்லது மகளிரோ அவர் எந்த பகுதியை சார்ந்தவராயினும், பிறையை பார்த்து கூறிய தகவல் உறுதி செய்யப்பட்டால் அதை ஏற்று செயல்படுங்கள். அத்தகவல் அஸ்ஸாம் மாநிலத்தின் டிக்பாய் பகுதியிலிருந்து அல்லது பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலிருந்து கிடைக்கப் பெற்றாலும் சரியே. எனவே யாருடைய காலதாமதமான அறிவிப்பிற்காகவும் காத்திருக்கவேண்டாம். நீங்கள் நோன்பை நோற்பதும் அதை நிறைவு செய்வதும் அல்லாஹ்سبحانه وتعالىவின் திருப்பொருத்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். அல்லாஹ்سبحانه وتعالىவிற்கும் அவனுடைய தூதர் صلى الله عليه وسلمஅவர்களுக்கும் கட்டுப்பட்டு ஒரே உம்மாவாக செயல்பட அல்லாஹ்سبحانه وتعالى உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் அருள்பாலிப்பானாக. وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ “எவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோர்களுக்கு மகத்தான வேதனை உண்டு”. (ஆல இம்ரான் : 105) http://www.sindhanai.org[/url%5D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *