பிறைப் பார்க்கும் ந‌ம் ஊர் விஞ்ஞானிகள்

–அன்ஸி–

நம்மில் பெரும்பான்மையினருக்கு ஷஃபான் 29 வது நாள் அல்லது ரமழான் 29ல் தான் பிறைகளை பற்றிய சிந்தனை வருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் பிறைபற்றிய அடிப்படை தகவல்களைக்கூட அறிய முற்படாதவர்கள் ரமழான் காலங்களில் பெரும் விஞ்ஞானிகளைப்போல பேசி திரிவதையும்,மேற்குறிப்பிட்ட நாட்களில் மஃரிபுக்குப்பின்னர் பிறை தெரிகிறதா? என்று மேற்கு நோக்கி பார்ப்பதையும் வருடம்தோரும் நாம் பார்த்தே வருகிறோம்.

 

பின்னர் ரமழான் 2 வது,3 வது நாட்களில் மஃரிபுக்கு பின்னர் தெரியும் வளர்பிறையை பார்த்துவிட்டு பிறை பெரிதாக அல்லவா தெரிகிறது,

நாம் ஒரு நோன்பை விட்டுவிட்டோமே என்று அவர்கள் பரிதாபப்படுவது ஒவ்வொரு வருடமும் நாம் காணும் தொடர் காட்சியாகும்

.

 

 

அவர்களிடம் இன்று ஷஃபான் / ரமழான் 29ம் நாள் என்று எதை வைத்து நீங்கள் முடிவு செய்தீர்கள்?

இன்று 29வது நாள் என்றால் முந்தைய 28 நாட்களின் பிறைகளை நீங்கள் பார்த்து கணக்கிட்டு வந்தீர்களா? ஷஃபான் அல்லது ரமழான் 29ம் தினத்தில் மட்டும் பிறையை பார்க்கச் சொல்லி கட்டளையிட்டது யார்? அதுவும் 29 அல்லது 30 அன்று மேற்கு திசையில் பிறை தெரியும் என உங்களுக்கு யார் சொன்னது? என்று கேட்டுபாருங்கள். ஒன்று அவர்கள் மௌனமாக இருப்பார்கள் அல்லது உங்கள் மீது கோபப்படுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் இறுதி நாட்களான 25 முதல் 29 வரை அதிகாலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு கிழக்கு நோக்கி பிறையை கவனிக்க வேண்டியவர்கள்,தெரியாத பிறையை தேடிக்கொண்டு 29 அன்று மஃரிபு வேளையில் மேற்கு திசையை பார்த்துக்கொண்டு நிற்பதை கண்டு நாம் என்ன சொல்வது?. இதை சுட்டிக்காட்டுவது அவர்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல.

மாறாக நம் சமுதாயத்தில் அறிஞர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் பிறை விஷயத்தில் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளாததும்,தன் சுய கருத்தை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு,விருப்பு வெறுப்பின்றி குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் பிறை விஷயத்தை ஆய்வு செய்யாததின் விளைவுதான் என்பதை அறியத்தருகிறோம்.

முஸ்லிம்கள் மூன்று வெவ்வேறான நாட்களில் முதல் நோன்பை ஆரம்பிப்பதும்,மூன்று வெவ்வேறான நாட்களில் பெருநாளை கொண்டாடுவதும் நம் சமுதாயத்தில் ஜீரணிக்கப்பட்டுவிட்ட ஒரு சம்பவமாக ஆகிவிட்டது. மார்க்க அறிஞர்கள் எனப்படுவோரிடம் இவ்வாறு தமிழக முஸ்லிம்கள் மூன்று நாட்களில் நோன்பையும்,பெருநாட்களையும் அனுசரித்து வேறுபட்டு பிரிந்து கிடக்கின்றனரே என்று எவரும் கேட்டால் இதில் என்ன இருக்கின்றது? என்று துவங்கி தன்னுடைய சுய நிலைபாட்டை நியாயப்படுத்தி பேச ஆரம்பித்து விடுகின்றனர்.

இன்னும் ஒருபடி மேலேபோய் இவ்வாறு மூன்று வெவ்வேறான நாட்களில் தலைநோன்பை ஆரம்பிப்பதால் லைலத்துல் கத்ரு இரவும் மூன்று நாட்களில் வரும் சாத்தியம் உண்டோ என்று கேட்டால் ஆம் உண்டு,லைலத்துல் கத்ரு இரவு என்பது இறைவன் நமக்கு அளிக்கும் ஒரு பரிசுதான் என்றுகூட பதில் வருகிறது. எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைச் செய்யத் தொடரவேண்டாம் (17:36) போன்ற இறைவசனங்களை பற்றி இன்று யார்தான் கவலை படுகிறார்கள்? இத்தகையவர்கள் பிறை விஷயத்தில் தங்களுடைய தற்பெருமையையும்,சுயகருத்துகளை திணிப்பதையும் விட்டுவிட்டு,அல்லாஹ்விற்காக திறந்த உள்ளத்தோடு சிந்தித்தே நம் சமுதாயத்திற்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும்.

ரமழான் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை,திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை என்று மூன்று நாட்களில் மக்கள் ஆரம்பிப்பதை முக்கிய பிரச்சனையாக கருதாமல் அதில் அலட்சியம் காட்டுபவர்கள் ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமை தொழும் ஜும்ஆ தொழுகையையும் வெள்ளி,சனி,ஞாயிறு என்று மூன்று வெவ்வேறான நாட்களில் முஸ்லிம்கள் தொழலாம் என்று தீர்ப்பளிப்பார்களா?

ப்ரிய‌முட‌ன்
அன்ஸி

 

–அன்ஸி– நம்மில் பெரும்பான்மையினருக்கு ஷஃபான் 29 வது நாள் அல்லது ரமழான் 29ல் தான் பிறைகளை பற்றிய சிந்தனை வருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் பிறைபற்றிய அடிப்படை தகவல்களைக்கூட அறிய முற்படாதவர்கள் ரமழான் காலங்களில் பெரும் விஞ்ஞானிகளைப்போல பேசி திரிவதையும்,மேற்குறிப்பிட்ட நாட்களில் மஃரிபுக்குப்பின்னர் பிறை தெரிகிறதா? என்று மேற்கு நோக்கி பார்ப்பதையும் வருடம்தோரும் நாம் பார்த்தே வருகிறோம்.   பின்னர் ரமழான் 2 வது,3 வது நாட்களில் மஃரிபுக்கு பின்னர் தெரியும் வளர்பிறையை பார்த்துவிட்டு பிறை பெரிதாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *