மேல்நிலை கல்வியை இலவசம்

இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள்.

சமச்சீர் கல்வியை ரத்து செய்ததால் பழைய பாடத்திட்டம்தான் அமலுக்கு வரவிருக்கிறது. புத்தகங்கள் அச்சிட்டு வெளிவர தாமதம் ஆவதால், அவைகளை இணையதளத்தில் இருந்து எடுத்து கொள்ளும் வசதியை தமிழக அரசு செய்திருக்கிறது. கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.



சாதனை மாணவர் சிறந்த உணவுமுறையை கொண்டிருப்பார்!


மாணவர் பருவத்தில் உடல்நலன் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் நல்ல ஆரோக்கியம் உள்ள மாணவர்தான் சிறப்பாக சாதிக்கிறார்.

நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை காரணியாக விளங்குவது நமது உணவுமுறை. எனவே, எப்படிப்பட்ட உணவுமுறை இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக அமையும் என்பதை மாணவர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.

சிலவகை உணவுகள் சிறப்பான உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்தவகை உணவுகள் உங்களுக்கு சாப்பிட்டவுடன் ஒரு பொலிவை தருகின்றன. மேலும் அந்தவகை உணவுகள் நம்மை சிறப்பாக சிந்திக்க தூண்டுகின்றன. நீர் மற்றும் சமைக்கப்படாத காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கியமானவை.

பச்சையான பழங்கள் மற்றும் காய்கறிகள், அஜீரணக் கோளாறுகளை தீர்க்கின்றன. இவை சிறந்த சக்தியை உடலுக்கு வழங்குகின்றன. வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது சிறந்த பயனைத் தரும். ஏனெனில் பழங்கள், உடனடியாக ஜீரணிக்கப்பட்டு சிறந்த ஆற்றலை உடலுக்கு தருகின்றன. ஒரு வாழைப்பழமானது, 5 செட் டென்னிஸ் விளையாடுவதற்கான சக்தியை தருகிறது. மேலும் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும், பச்சை காய்கறிகளைக் கொண்ட “சாலட்” இருப்பது மிகவும் சிறந்தது.

கொட்டை வகைகளை எடுத்துக்கொண்டால், முந்திரி பருப்பு மற்றும் நிலக்கடலை பருப்பு மிகவும் சிறந்த உணவுகள். இவற்றில் ஏராளமான சத்துப் பொருட்கள் இருக்கின்றன. உங்களின் மூளை புரோட்டீனால் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் பயறு வகைகளும் சிறந்த உணவு. இவற்றின் மத்தியில் இன்னுமொரு முக்கிய உணவு என்னவெனில் முட்டை. மாணவர்கள் முட்டையை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய உணவு வகை என்னவெனில், ஊற வைத்த கொட்டைகள் மற்றும் தானியங்கள். இந்த வகை உணவுகள், எப்போதுமே துடிப்புடன் இருப்பதற்கான சக்தியையும் தருகின்றன. நீங்கள் படிக்கும்போது, அவ்வப்போது சிறிய அளவிலான உணவை உட்கொள்ளவும். இதனால், தூக்கத்திலிருந்து தப்புவதுடன், உடலுக்கும் தொடர்ந்து உணவு கொடுத்ததுபோல் இருக்கும்.

மேற்சொன்ன உணவு முறைகளை முடிந்தளவு சிறப்பாக கடைபிடித்தால், உடல் ஆரோக்கியம் பேணப்பட்டு, நல்ல மாணவராக உங்களால் திகழ முடியும்.

மாணவிகளுக்கான மேல்நிலை கல்வியை இலவசமாக வழங்கும் மனிதநேய அறக்கட்டளை

சென்னை: “பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புற ஏழை மாணவிகள் மத்தியில், ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். பற்றிய விழிப்புணர்வு வேண்டும். அண்ணா பல்கலை, அரசு மருத்துவக் கல்லூரிகளில்,உயர்கல்வி பயில அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும். இவற்றை கருத்தில்கொண்டு, பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் வழியில் பயின்று, 360 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய மாணவிகளில், கணினி மற்றும் வணிகவியல் பாடப்பிரிவில் பயில உள்ள அனைவருக்கும், மேல்நிலைப் பள்ளிக்கல்வி இலவசமாக வழங்கப்படும்.

ஆங்கில வழியில் பயின்று, 460 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய மாணவிகளில், உயிரியல், கணிதப் பாடப்பிரிவில் பயில உள்ள 50 பேருக்கு, உணவு, தங்குமிட வசதியுடன் இலவசக்கல்வி வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து பகுதி மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், மதுரை, மேலூரில் உள்ள சைதை துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்படுவர்.

மேலும் விவரங்களை, முதல்வர், சைதை துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 7/1, பைபாஸ் சாலை,மேலூர், மதுரை, என்ற முகவரியிலும், 0452- 320545, 94430 49599, 94875 19599 ஆகிய எண்களிலும் பெறலாம். இவ்வாறு மல்லிகா துரைசாமி தெரிவித்துள்ளார்.

 

இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள். சமச்சீர் கல்வியை ரத்து செய்ததால் பழைய பாடத்திட்டம்தான் அமலுக்கு வரவிருக்கிறது. புத்தகங்கள் அச்சிட்டு வெளிவர தாமதம் ஆவதால், அவைகளை இணையதளத்தில் இருந்து எடுத்து கொள்ளும் வசதியை தமிழக அரசு செய்திருக்கிறது. கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம். http://www.textbooksonline.tn.nic.in சாதனை மாணவர் சிறந்த உணவுமுறையை கொண்டிருப்பார்! மாணவர் பருவத்தில் உடல்நலன் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் நல்ல ஆரோக்கியம் உள்ள மாணவர்தான் சிறப்பாக சாதிக்கிறார். நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை காரணியாக விளங்குவது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *