சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்


கல்வி உதவி தொகை பெற சிறுபான்மை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் கூறப்படுவதாவது,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ, மளாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கு கல்வி உதவிதொகை வழங்க தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தமிழக அரசு வரவேற்கிறது.
இந்த மாணவ, மாணவிகள் முதலாம் வகுப்பில் இருந்து 10 ம் வகுப்பு வரை பயில்பவராக இருக்க வேண்டும்.

முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மார்க் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஆண்டிற்கு 1 லட்சத்திற்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வேண்டி பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை வரும் 15 ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை வரும் 30 ம் தேதிக்குள்ளும் அந்தந்த கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உரிய காலத்தில் விண்ணப்பிக்கும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவி தொகை பெறலாம் என அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Best regards
MN HAMEED

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் கல்வி உதவி தொகை பெற சிறுபான்மை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் கூறப்படுவதாவது, தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ, மளாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கு கல்வி உதவிதொகை வழங்க தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தமிழக அரசு வரவேற்கிறது. இந்த மாணவ, மாணவிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *