பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி

 

—அன்ஸி—

புதிதாக ஒரு வைரஸை பேஸ்புக்கில் அனுப்பி சோதித்துள்ளனர்
ஹக்கர் இதிலிருந்து நம் பேஸ்புக் கணக்கை எப்படி பாதுக்காப்பது.

 

பேஸ்புக் எப்போதுமே செக்யூரிட்டிக்கு கொஞ்சம் அதிகமாகவே முக்கியத்துவம்
கொடுத்து இருந்தும் இந்த வைரஸ் வந்துள்ளது. எப்படி இந்த வைரஸ்
பரவுகிறது என்று பார்ப்போம். நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் நம்
பேஸ்புக் அக்கவுண்டுக்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்துள்ளார் நீங்கள்
அவரை நண்பர் என உறுதுபடுத்துங்கள் என்று அறிவிக்கும் அப்போது
கூடவே அவர் அவர் அனுப்பிய செய்தி ஒன்றும் உங்களுக்கு கிடைக்கும்
அந்த செய்தி இது தான்.

“My Ex-Girlfriend Cheated on me…
Here is my revenge!”

உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது
இந்த மாதிரி நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை
நிராகரித்துவிடவும்.

நமக்கு கொஞ்சம் குழப்பம் வருகிறதெல்லவா எப்படி இதிலிருந்து நம்
அக்கவுண்டை ஹக் செய்ய முடியும் என்று சற்று விரிவாக
பார்ப்போம்.

உங்கள் நண்பராக இணைந்த பின் இவர்கள் கொடுக்கும்
ஒரு CSS Code மூலம் தான் நம் Account – பாஸ்வேர்டிலிருந்து
அனைத்தையும் இவர்கள்  நொடியில் எடுத்து விடுகின்றனர்.ஆனால்
புத்திசாலித்தனமாக ஒன்று செய்கின்றனர் நம் Face book Account
இவர்கள் திருடினாலும் அதை முடக்கவில்லை அதனால் நம்
கணக்கு ஹக் செய்யப்பட்டதா இல்லையா என்று கூட நமக்குத்
தெரியாது.

அவர்கள் CSS code வைத்து Face Book-ஐ கூட ஹக்
செய்யலாம் என்றால் நம் Account டை திருடுவது ஒன்றும் பெரிய
காரியம் இல்லை.ஒருவரின் Face Book Account மூலம் அவர்களின்
E-mail லையும் ஹக் செய்து விடுகின்றனர் அதனால் முகம்
தெரியாத நபர் உங்களுக்கு அனுப்பும் Friend Request டில்
எப்போதுமே ஒருமுறைக்கு இருமுறை சோதனை செய்தபின்
ஏற்றுக்கொள்ளுங்கள். Short url Address ஏதாவது
வந்தால் கூடுமானவரை அதை Click செய்வதை தவிர்க்கப்பாருங்கள்.
இப்போது தான் CSS-ன் மகத்துவம் புரோகிராமருக்கு புரிந்திருக்கும்.

(இந்த‌ வைர‌ஸ் என‌து Face Book கையும் ப‌த‌ம் பார்த்த‌து த‌ப்பித்தேன்.)

 

ப்ரிய‌முட‌ன்
அன்ஸி

 

  —அன்ஸி— புதிதாக ஒரு வைரஸை பேஸ்புக்கில் அனுப்பி சோதித்துள்ளனர் ஹக்கர் இதிலிருந்து நம் பேஸ்புக் கணக்கை எப்படி பாதுக்காப்பது.   பேஸ்புக் எப்போதுமே செக்யூரிட்டிக்கு கொஞ்சம் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்து இருந்தும் இந்த வைரஸ் வந்துள்ளது. எப்படி இந்த வைரஸ் பரவுகிறது என்று பார்ப்போம். நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் நம் பேஸ்புக் அக்கவுண்டுக்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்துள்ளார் நீங்கள் அவரை நண்பர் என உறுதுபடுத்துங்கள் என்று அறிவிக்கும் அப்போது கூடவே அவர் அவர் அனுப்பிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *