ஒரு பெண் கணவன் பெயருடன் சேர்த்து தன் பெயரை எழுதலாமா?

—அன்ஸி—

“அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.” (அல்குர்ஆன், 025:054)

ஒன்று: இரத்த சம்பந்தப்பட்ட உறவு.

இரண்டு: திருமண சம்பந்தமான உறவு.

“அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.” (அல்குர்ஆன், 025:054)

ஒன்று: இரத்த சம்பந்தப்பட்ட உறவு.

இரண்டு: திருமண சம்பந்தமான உறவு.

ஆக மனிதர்களிடையே இரண்டு வகையான உறவுகளை ஏற்படுத்தியிருப்பதாக 025:054வது வசனத்தில் இறைவன் கூறுகிறான். திருமண உறவால் ஏற்படும் சந்ததிகளுக்கு தாய், தந்தை வழி உறவுகள் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளாய் மலருகின்றன. தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், சகோதரி சிறிய, பெரிய தந்தைகள், மாமா மாமிகள், சின்னம்மா, பெரியம்மாக்கள், தாய், தந்தை வழிப் பாட்டிகள், தாத்தாக்கள் எனும் உறவுகள் ஏற்படுவது போல திருமண உறவின் மூலமும் மாமனார், மாமியார் மைத்துனர்கள். மைத்துனிகள் எனும் உறவுகள் ஏற்படுகின்றன.

இந்த இரண்டு உறவுகளுக்கும் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவர்களையும் இஸ்லாம் விவரிக்கின்றது. இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளை ஏற்படுத்துவதே இந்தத் திருமண உறவு தான். ஆனாலும் திருமண உறவை முறித்துக்கொள்ள முடியும், இரத்த உறவை முறித்துக் கொள்ள முடியாது, (அதை இஸ்லாம் தடை விதித்திருக்கிறது.)

அவர்களை அவர்களின் தந்தையருடனேயே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது! (அல்குர்ஆன், 033:005)

இன்னாரின் மகன் என்று தந்தையின் பெயர் தெரிந்திருக்க அவரின் தந்தையின் பெயருடனேயே அழைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

ஒரு பெண் தனது பெயரோடு தந்தையின் பெயரைச் சேர்த்து எழுதுவதற்கு எவ்வாறு தடை இல்லையோ, அதுபோல் ஒரு பெண் தனது பெயரோடு கணவனின் பெயரையும் சேர்த்து எழுதிக்கொள்ள இஸ்லாத்தில் தடையில்லை!

அல்குர்ஆனில்…

”இம்ரானின் மனைவி” 003:035

”அஜீஸின் மனைவி” 012:030

”ஃபிர்அவ்னின் மனைவி” 028:009

”நபியுடைய மனைவிகளே!” 033:030

”நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும்” 066:010

மேற்காணும் திருமறை வசனங்கள் பெண்களை இன்னார் மனைவி என்று அடையாளப்படுத்துவது போல் பல்வேறு நபிமொழிகளும் அதற்கான வழியைக் காட்டுகின்றன.

இருந்தாலும், பெண்க‌ள் த‌ன் பெய‌ரோடு த‌ன‌து க‌ண‌வ‌ரின் பெய‌ரை எழுதுவ‌தினால் த‌வ‌றும் இல்லை அத‌னால் ந‌ன்மையும் இல்லை.இது ஒரு அன்பின் வெழிபாடுதான். ஆனால் சில‌ர் திரும‌ண‌ம் ஆன‌ பிற‌கு அர‌சு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ஆவ‌ண‌ங்க‌ளில் த‌ன‌து பெய‌ருட‌ன் க‌ண‌வ‌ருடைய‌ பெய‌ரை சேர்ப‌தை பார்க்கிறோம்.இது சில‌ ச‌ம‌ய‌ம் பிற்கால‌த்தில் ப‌ல‌ பிர‌ச்சினைக‌ள் வ‌ர‌ வாய்ப்பு உண்டு.

ஏனென்ற்றால் இது திரும‌ண‌ ச‌ம்ப‌ந்த்த‌ப் ப‌ட்ட‌ உற‌வுதான். இந்த‌ உற‌வு நீடிக்காம‌ல் கூட‌
இருக்க‌லாம். விவாக‌ ர‌த்து, க‌ண‌வ‌ர் இற‌ந்து விட‌ல், இந்த‌ த‌ருன‌த்தில் பெண் இன்னொரு
ஆணுட‌ன் திரும‌ண‌ம் செய்ய‌ வேண்டிய‌  நிற்ப‌ந்த‌ம் வ‌ரும் அப‌பொழுது அந்த‌ பெண்ணின்
பெய‌ர் மீண்டும் மாற்ற‌ வேண்டிய‌ ப‌ரிதாப‌ நிலை நேரிடும். இர‌த்த‌ உற‌வான‌ த‌ந்தையின் பெய‌ரை
த‌ன‌து பெய‌ருக்கு பின்னால் போடுவ‌தினால் தான் வாழும் கால‌ம் வ‌ரை ஒரே பெய‌ருட‌ன்
இருக்க‌லாம். த‌ந்தை இற‌ந்துவிட்டாலும் அந்த‌ உற‌வு மாறுவ‌தில்லை.

(இது என‌து க‌ருத்து தான். த‌வ‌று இருந்தால் உங்க‌ள் க‌ருத்து எழுத‌வும்).

ப்ரிய‌முட‌ன்
அன்ஸி

—அன்ஸி— “அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.” (அல்குர்ஆன், 025:054) ஒன்று: இரத்த சம்பந்தப்பட்ட உறவு. இரண்டு: திருமண சம்பந்தமான உறவு. “அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.” (அல்குர்ஆன், 025:054) ஒன்று: இரத்த சம்பந்தப்பட்ட உறவு. இரண்டு: திருமண சம்பந்தமான உறவு. ஆக மனிதர்களிடையே இரண்டு வகையான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *