பஹ்ரைனில் அவசர நிலை பிரகடனம்

மன்னருக்கு எதிரான போராட்டம் காரணமாக பஹ்ரைனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பஹ்ரைன் நாட்டில் மன்னர் ஹமாத் பதவி விலக வலியுறுத்தி, அவருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், மன்னர் ஆதரவாளர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மனாமா நகரம் முழுவதும் மோதல்கள் வெடித்துள்ளன. போராட்டத்தை அடக்க இராணுவம் வர வழைக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பஹ்ரைனில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னருக்கு எதிரான போராட்டம் காரணமாக பஹ்ரைனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டில் மன்னர் ஹமாத் பதவி விலக வலியுறுத்தி, அவருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், மன்னர் ஆதரவாளர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. மனாமா நகரம் முழுவதும் மோதல்கள் வெடித்துள்ளன. போராட்டத்தை அடக்க இராணுவம் வர வழைக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *