பஹ்ரைன்: போராட்டங்கள் வலுக்கின்றன

—அன்ஸி—

பஹ்ரைன் நாட்டு சிறுபான்மை மக்கள் அரசுக்கு எதிராகப் போராடும் விதம் சற்றே வித்தியாசமானது. நள்ளிரவில் அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த பகல்களில், முக்கியமான சாலைகளின் நடுவில் டயர்களை அடுக்கி தீப்பற்ற வைத்து விடுவர். பல மணி நேரங்கள் எரியும் இந்த டயர்களால், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுப்புற மாசு ஏற்படுகிறது.
பஹ்ரைனில் தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில் ஆர்பாட்டக்காரகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் ஷியா முஸ்லிம்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

இணையதளங்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்பு ஊடகங்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

பஹ்ரைன் சுன்னி இனத்தவர்களான அல் கலீஃபா குடும்பத்தினரால் ஆட்சி செய்யப்படுகிறது. மன்னர் ஹமாத் அரசராக இருக்கிறார்.

அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, சிறு ஈயக் குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டக்களை கொண்டு சுட்டும், கண்ணீர்புகை குண்டுகளையும் வீசியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு போராட்டாக்காரர் கொல்லப்பட்டார்.

அவரது இறுதி நிகழ்வுகளின் போது காவல்துறையினர் சுட்டதில் மேலும் ஒரு இளைஞர் கொல்லப்பட்டதாக எதிர்கட்சியினர் கூறுகிறார்கள்.

பஹ்ரையினில் இடம்பெற்றுள்ள இந்தப் போராட்டங்களுக்கும், துனீஷியா மற்றும் எகிப்தில் இடம்பெற்ற போராட்டங்களுக்கும் பொதுவான சில இழைகள் உள்ளன.

குறிப்பாக ஜனநாயக வழிமுறைகளுக்கு வாய்ப்புகள் இல்லாதிருத்தல், ஏழ்மை போன்றவை இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றுக்குமே பொதுவான காரணமாக இருந்துள்ளன.

ந‌ன்றி
கோவை சித்தீக்
ப‌ஹ்ரைன்

ப்ரிய‌முட‌ன்
அன்ஸி.

—அன்ஸி— பஹ்ரைன் நாட்டு சிறுபான்மை மக்கள் அரசுக்கு எதிராகப் போராடும் விதம் சற்றே வித்தியாசமானது. நள்ளிரவில் அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த பகல்களில், முக்கியமான சாலைகளின் நடுவில் டயர்களை அடுக்கி தீப்பற்ற வைத்து விடுவர். பல மணி நேரங்கள் எரியும் இந்த டயர்களால், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுப்புற மாசு ஏற்படுகிறது.பஹ்ரைனில் தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில் ஆர்பாட்டக்காரகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் ஷியா முஸ்லிம்கள் இருவர் பலியாகியுள்ளனர். இணையதளங்கள், ஃபேஸ்புக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *