இளைஞனே! த‌லைவ‌னே!

 ---அன்ஸி---

 

(

ஒரு சஹோதரர் எனக்கு ஈமெயில் அனுப்பியதில் இருந்து உங்களுக்கும் )

இளைஞர்களுக்கு:

கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே…செத்த நாயிலும்
கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத
இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை
வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் எப்போதாவது உங்களை நோக்கி கேள்விக்
கேட்டிருக்கின்றீர்களா. அல்லது உங்கள் தலைர்களை நோக்கி இந்த கேள்விகளை
கேட்டு இருக்கின்றீர்களா. இந்த வாழ்கையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்.
எப்போதாவது ஒற்றுமையைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா. செத்த பிணம் போல,
ஆட்டு மந்தைகளைப் போல சுயமாக சிந்திக்காமல் எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின்
பின்னால் ஓடி உழைக்கப் போகிறீர்கள். எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால்
கொடி பிடித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள். சுயமாக
சிந்தியுங்கள், உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், தலைவர்களையும்
கேள்வி கேளுங்கள். நாளை நம் சமுதாயம் ஒற்றுமையாய் ஓரே அணியின் கீழ் ஒரே
குடையின் கீழ் நிற்க பாடுபடும் தலைவரை இனம் காணும் வரை எந்த தலைவரின்
பின்னாலும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

தலைவர்களுக்கு:

அரசியலையும் மதத்தையும் போட்டு மக்களை குழப்பாதீர்கள், அரசில் பிரிவு, மதம்
சார்ந்த பிரிவுகளை ஏற்படுத்தி அந்தந்த பிரச்னைகளை அந்தந்த துறைகளில்
நிபுணத்துவம், முதிர்ச்சியும் பெற்ற நம் பெரியார்களை, அறிஞர்களை கொண்டு
தீர்வுகாண முயலுங்கள், எல்லாம் எனக்கு தெரியும், நான்தான் தலைவர் என்ற
அகந்தையில், தலைவர்கள் தான் என்ற கர்வத்தில், சுயமாக மமதையில் உழலாதீர்கள்.

தலைவர்களே நாங்கள் நன்றாக உங்கள் முகம் நோக்கி கேள்வி கேட்போம்தான். பொது
வாழ்க்கைக்கு வந்து விட்டால். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மக்களின்
உழைத்த பணங்களில் சந்தா, நன்கொடை, புத்தக விற்பனை செய்து உங்கள் கழகத்தை
மட்டும் பலப்படுத்த அல்ல எங்கள் சமுதாயத்திற்கும் பாதுகாப்பும், சமூக
உரிமையையும் பெற்றுத் தரத்தான். நம்மிடையே ஒற்றுமையை வளர்க்கத்தான்.
இதையெல்லாம் செய்ய இயலாது என்றால் நல்ல ஒரு பர்தாவை போர்த்திக் கொண்டு உங்கள்
வீட்டிலேயே முடங்கிப்போங்கள், உங்களை எவனும் கேள்வி கேட்க மாட்டான். நீங்கள்
முடங்கிப் போவதால் எம் சமுதாயம் ஒன்றும் அழிந்து விடாது. ஒரு புரட்சியையும்,
ஒற்றுமையையும் எங்களுக்குள் கொண்டு வர எம்மில் ஒருவன் பிறந்திருப்பான் அல்லது
இறைவன் பிறக்க வைப்பான் இன்ஷா அல்லாஹ்…

ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள், எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் இல்லையேல்
புதியவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி ஓடிப்போய் வீட்டோடு ஒளிந்து கொள்ளுங்கள்.

எம் சமுதாயத்தில் எல்லோரும் ஓற்றுமையாக ஒரே குடையின் கீழ் ஓரே அணியாக எல்லோரும்
சகோதரர்களாக நின்று குரல் கொடுக்கும் நாளை (இன்ஷா அல்லாஹ்) மிக ஆதங்கத்துடன்,
ஆவலுடன் எதிர் பார்த்தவனாக இறைவனிடம் கையேந்தியவனாய்.

ப்ரிய‌முட‌ன்
அன்ஸி

 —அன்ஸி— ( ஒரு சஹோதரர் எனக்கு ஈமெயில் அனுப்பியதில் இருந்து உங்களுக்கும் ) இளைஞர்களுக்கு: கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே…செத்த நாயிலும் கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் எப்போதாவது உங்களை நோக்கி கேள்விக் கேட்டிருக்கின்றீர்களா. அல்லது உங்கள் தலைர்களை நோக்கி இந்த கேள்விகளை கேட்டு இருக்கின்றீர்களா. இந்த வாழ்கையை எப்போது மாற்றிக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *