இஸ்லாமியதொலைக்காட்சி கன்னியகுமரிமாவட்டம் மார்தாண்டம்

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி

கன்னியாகுமரிமாவட்டம் மார்தாண்டம், கிறிஸ்தவர்களும் இந்து சமுதாய மக்களும் அதிகமாக வாழும் பகுதியாகும். இங்கு முஸ்லிம்கள் மிக குறைவு என்பதால் இந்த பகுதியிலுள்ளவர்களுக்கு இஸ்லாமை எடுத்துச் செல்லும் வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இந்த பகுதியில் இஸ்லாமை கொண்டு செல்லவேண்டும் என்ற கவலை உணர்வுடன் பலயோசனைகளை ஆராய்ந்தபோது அந்த பகுதியில் உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றை தொடங்கி அதன் வழியாக மக்களுக்கு தாவா செய்யலாம் என்று தீர்மானித்து மார்தாண்டம் பகுதியில் இஸ்லாமிய தொலைக்காட்சிஒன்று தனியாக ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் கருணயால் நான்காவது மாதத்தில் அடிஎடுத்து வைத்து சிறப்பாக தனது பணியை வீரியத்தோடு செய்துவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பை துவக்கிய குறுகிய காலத்திலேயே நாம் எதிர்பார்த்த படி மாற்று மத சகோதர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல மாற்று மத சகோதரர்கள் குறிப்பாக கிறிஸ்தவ பாஸ்டர்கள் நம்மை தொடர்புகொண்டு இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிய தங்களின் விருப்பங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் இஸ்லாம் குறித்த சில ஐயங்களை நம்மிடம் கேட்கும்போது சரியான முறையில் அவர்களுக்கு விளக்கங்கள்கொடுத்துவருகிறோம். இன்னும் பல நல்ல பயனுள்ள விசயங்களை அவர்களுக்கு நாம் மேலும் தொடர்ந்து ஒளிபரப்பியாகவேண்டும். அதற்காக நமது அன்புசகோதர்கள் தாங்களது மேலான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் தருமாறு கேட்டுகொள்கிறோம். அவர்களுக்கு பயன்பெறும் வகையிலான தமிழ் மற்றும் மலையாள குறுந்தகடுகள் தங்களிடம் இருந்தால் நமக்கு அனுப்பி தாருங்கள்.

இந்த பகுதியில் கிறிஸ்தவர்களின் தாக்கம்தான் அதிகமாக உள்ளது. அவர்களை மையப்படுத்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு தங்குதடையின்றி சென்றால்தான் நம்முடைய இலக்கை நாம் அடைய முடியும். வீடுவீடாகவும் பொதுக்கூட்டங்கள் வழியாகவும் அவர்களை சந்திக்க முடியாத நிலையில் தொலைகாட்சி வழியாக நாம் இஸ்லாத்தை துணிச்சலாக எளிதாக செய்ய முடியுமல்லவா? அந்த பணியை தான் நமது இஸ்லாமிய தொலைக்காட்சி செய்துவருகிறது.

இது லாப நோக்கின்றி தூய்மையான பணிக்காக நல்லெண்ணத்துடன் நடத்தப்படுகிறது. இதில் நமது சகோதரர்களின் விளம்பரங்களை வாங்கி தொடர்ந்து நடத்தலாம் என்று எண்ணி அந்த பகுதியில் வாழும் நமது இஸ்லாமிய செல்வந்தர்களையம் முதலாளிகளையும் தொடர்புகொண்டபோது யாரும் இதற்கு எந்த ஒத்துழைப்பையும் தரவில்லை. காரணம், அவர்களுக்கு தாவாவின் அவசியம் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் மாற்றுமத சகோதரர்கள் ஒருசிலர் நமது தொலைக்காட்சிக்காக விளம்பரம் தருகிறார்கள். இந்த ஒருசில விளம்பரங்களுடன் மாதம் தோறும கடன் பட்டுத்தான் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பப் படுகிறது.

மாதம் ருபாய் இருபதாயிரம் இணைப்புக்காகவும் கட்டிடவாடகை மின்கட்டணம் ஊழியர் ஊதியம் என மாதம்தோறும்பதினைந்தாயிரம் செலவு செய்யப்படுகிறது. இப்போது குளச்சல் பகுதிக்கும் இது விரிவு படுத்தப்படிருப்பதால் கூடுதலாகபத்தாயிரம் செலுத்த வேண்டியுள்ளது. ஆக ஆகமொத்தம் ரூபாய் நாற்பத்து ஐந்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் இருந்தால்தான் நம்மால் இந்த தொலைக்கட்சியை தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய இயலும். இப்போது நமக்கு விளம்பரம் வகையில் ருபாய் இருபதாயிரம் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. மீதமுள்ள தொகை கடனாக பெற்று கடும் சிரமத்துக்கிடையில் நடத்திவருகிறோம்.

பிரதி மாதம் பத்தாம் ஆம் தேதிக்குள் பணம் கொடுக்கவில்லை எனில் இணைப்பை துண்டித்து விடுவார்கள். மீண்டும் இந்த ஒளிபரப்பை நாம் தொடர முடியாது. காரணம் ஒருமுறை துண்டித்து விட்டால் மீண்டும் நமக்கு இணைப்பு தரமாட்டார்கள். இஸ்லாமியர்களுக்கு சானல் தரமுடியாது என்று கூறியவர்களை அரும்பாடுபட்டு மிகுந்த சிரமம் எடுத்து இந்த இணைப்பை வாங்கி இருக்கிறோம். இது தாவா செய்ய கிடைத்த அரியவாய்ப்பு இது நம்மைவிட்டு கைநழுவி போய்விடாமல் நாம் பார்த்து கொள்ளவேண்டியது நமது கடமையாகும்.

எனவே நல்லுள்ளம்கொண்ட சகோதரர்கள் ஒவ்வொருவரும் நமது இந்த தாவா பணிக்காக மாதம்தோறும் உங்கள் பொருளாதாரத்தில் ஒரு சிறு பகுதியை தந்து மார்க்க பணி தொடர்ந்து நடைபெற உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களின் இந்த உதவிக்கு மகத்தான நற்கூலி வழங்க துஆ செய்கிறோம். நன்றி ! ஜசாகுமுல்லாஹு ஹைரன் !!

தொடர்புக்கு:

B.தாஸிம் , நாகர்கோவில் 9442076269.

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி கன்னியாகுமரிமாவட்டம் மார்தாண்டம், கிறிஸ்தவர்களும் இந்து சமுதாய மக்களும் அதிகமாக வாழும் பகுதியாகும். இங்கு முஸ்லிம்கள் மிக குறைவு என்பதால் இந்த பகுதியிலுள்ளவர்களுக்கு இஸ்லாமை எடுத்துச் செல்லும் வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இந்த பகுதியில் இஸ்லாமை கொண்டு செல்லவேண்டும் என்ற கவலை உணர்வுடன் பலயோசனைகளை ஆராய்ந்தபோது அந்த பகுதியில் உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றை தொடங்கி அதன் வழியாக மக்களுக்கு தாவா செய்யலாம் என்று தீர்மானித்து மார்தாண்டம் பகுதியில் ‘இஸ்லாமிய தொலைக்காட்சி‘…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *