இளைஞர்களே எங்கு செல்கிறீர்?

இளைஞர்களே எங்கு செல்கிறீர்?
அரபி: அஷ்ரஃப் ஷஅபான் அபூஅஹ்மத்-எகிப்து
தமிழாக்கம்: நூ.அப்துல் ஹாதி பாகவி,  M.A, M.Phil.
இளைஞர்கள், ஒரு சமுதாயத் தின் மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிப்பவர்கள். அவர்கள்தாம் நாளைய சமுதாயத்தை வழிநடத்திச் செல்ப வர்கள். எனவே அவர்கள் கல்வியறிவு உடையவர்களாக வும் ஆன்மிக பலம் மற்றும் மனஉறுதி கொண்டவர்களா கவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இருந் தால்தான் அவர்கள் சமுதாய மக்களைச் சீரிய முறையில் வழிநடத்திச் செல்ல முடியும். மேலும், அவர்கள் தலைமைப் பொறுப்பு வகிக்கின்றபோது ஏற்படக்கூடிய சிக்கல்களையும் சவால்களையும் உறுதியுடன் எதிர்கொள்ள முடியும். இலாம் இளைஞர்களை மிக முக்கியமாகக் கருதுகிறது.

அவர்க ளுக்காக உயரிய ஓரிடத்தை ஒதுக்கியுள்ளதை வரலாற்றில் நாம் காண முடிகிறது. புகாரியில் பதிவுசெய்யப்பட் டுள்ள நபிமொழியில் இளைஞர் களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். இளைஞர்கள் பற்றி உங்களுக்கு நான் நன்மையையே அறிவுறுத் துகிறேன். ஏனென்றால், அவர்கள் மென்மையான உள்ளம் உடைய வர்கள். அல்லாஹ் தெளிவான மார்க்கத்தோடு என்னை அனுப்பி யுள்ளான். அவன் எனக்கு இளைஞர்களைப் பிரதிநிதியாக ஆக்கியுள்ளான் என்று கூறி விட்டு, பின்வருகின்ற இறைவசனத்தை ஓதினார்கள்:

இறைநம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு, அவர்களுடைய இதயங்கள் அல்லாஹ் வையும், (அவர்களுக்கு) இறங்கியுள்ள உண்மையான வேதத்தை யும் நினைத்து அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள்-முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப்போல் ஆகிவிட வேண்டாம்; ஏனெனில், அவர்கள்மீது நீண்ட காலம் சென்றபின், அவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டன. மேலும், அவர்களுள் பெரும்பாலோர் பாவிகளாக ஆகிவிட்டனர். (57: 16)
நபி (ஸல்) அவர்கள் நமக்கு உதாரணம் காட்டியதைப் போல வே நாம் வரலாற்றில் இளைஞர்கள் பலரைக் காண்கிறோம். அவர்கள் இலாமிய மார்க்கத் திற்காகவும் நபி (ஸல்) அவர்க ளுக்காகவும் தம் உயிரையும் துச்ச மாகக் கருதிப் போராடியிருக்கின் றார்கள்; துணை நின்றிருக்கின்றார்கள்.
அலீ இப்னு அபீதாலிப் (ரளி) ஓர் இளைஞர். அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா சென்றபோது, எதிரிகள் பற்றிய எந்தப் பயமோ அச்சமோ இன்றி நபியவர்களின் படுக்கையில் நிம்மதியாகத் துயில்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பொறுப்பு ஒப்படைத் திருந்த அடைக்கலப் பொருட் களை உரியவர்களிடம் சமர்ப்பித் தார்கள். பின்னர் மதீனாவை நோக்கித் தன்னந்தனியாக நாடு துறந்துசென்றார்கள். சஅத் இப்னு அபீவக்காஸ்  (ரளி) ஓர் இளைஞர்.   அவர்களின் துணிவையும் ஆற்றலையும் உஹுதுப் போரில் நாம் காணலாம். அப்போரில் முலிம்களின் நிலை மிக மோசமாக மாறிவிட்டது. அவர்களுள் அதிகமானோர் தனித்தனியாகப் பிரிந்து சென்று விட்டார்கள். அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்களின் அருகில் மிகுந்த வீரத்தோடும் துணிவோடும் சஅத் (ரளி) அவர்கள் நின்றுகொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி எய்யப்பட்ட எல்லா அம்புகளையும் ஈட்டிகளையும் தடுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஅத்(ரளி) அவர்களை ஊக்கப்படுத்துமுகமாக, என் தாயும் தந்தையும் உமக்கு அர்ப்பணமாகட்டும்! வீரமிக்க இளைஞரே! (அம்பு) எறிவீராக! என்று கூறினார்கள்.
அலீ (ரளி) அவர்கள் கூறுகின்றார்கள்:  என் தாயும் தந்தையும் உமக்கு அர்ப்பணமாகட்டுமாக! என்று நபி (ஸல்) அவர்கள் சஅதைத் தவிர வேறு யாருக்கும் கூறியதில்லை. நபியவர்களின் இச்சொல்லைச் செவியுற்ற சஅத் (ரளி) அவர்கள்,  ஆயிரம் அம்புகள் வரை எறிந்துகொண்டே யிருந்தார்கள். இறுதியில் ஓர் அம்பை எடுத்து, இறைவா! இது உனது அம்பு. இதன்மூலம் நீ எதிரியை அழிப்பாயாக!  என்று சொல்லி எய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், இறைவா! சஅதுக்குப் பதிலளிப்பாயாக; அவருடைய அம்பெய்தலைச் சீராக்குவாயாக; அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள்.
அல்லாஹ் தன் தூதரின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தான். எனவே சஅத் (ரளி) அவர்கள் சிறந்த குதிரை வீரராகவும் சீராக அம்பெய்பவராகவும் பிரார்த்த னைகளுக்குப் பதிலளிக்கப்படுப வராகவும் விளங்கினார்கள்.
மற்றோர் இளைஞர் உசாமா இப்னு ஸைத் (ரளி) ஆவார்கள். நபி(ஸல்) அவர்கள் உசாமா(ரளி) அவர்களை முலிம்களின் படைக்குத் தளபதியாக்கினார்கள். மேலும் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவீர்); அல்லாஹ்வை நிராகரித்தவனை வெட்டுவீர்.
அப்படையில் மூத்த வயது டைய நபித்தோழர்களும் இருந்த னர். அப்போது உசாமா (ரளி) அவர்களின் வயது 19ஐத் தாண்ட வில்லை.(18 என்றும், 17 என் றும் சொல்லப்படுகிறது.) அச்சமயத்தில், வயதில் மூத்த முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரி களுக்கு இவர் தளபதியாக்கப்பட் டுள்ளாரே! என்று சிலர் குறை கூற ஆரம்பித்தனர். இளவயதில் தளபதியாக்கப்பட் டுள்ளது பற்றிக் குறைகளும் விமர்சனங்களும் நபி (ஸல்)  அவர்களின் காதை எட்டியபோது அவர்கள் மிகுந்த கோபமடைந்தார்கள். உடனே மிம்பரில் ஏறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, பின்னர் கூறினார்கள்: மக்களே! நான் உசாமாவைத் தளபதியாக்கி யுள்ளது பற்றி நீங்கள் குறை கூறியது என் காதுக்கு எட்டியது. நான் உசாமாவைத் தளபதியாக்கி யுள்ளது பற்றி நீங்கள் குறை கூறினால் இதற்கு முன்னர் அவருடைய தந்தையை நான் தளபதியாக்கியதையும் நீங்கள் குறைகூறிவிட்டீர்கள். அல்லாஹ் வின் மீதாணையாக! தலை மைக்கு அவர் தகுதியானவராக இருந்திருந்தால் அவருக்குப்பின் அவருடைய மகனும் தலைமைக் குத் தகுதியானவரே! நிச்சயமாக அவர் மக்களுள் எனக்கு மிகவும் அன்பிற்குரியவராக இருந்தார். மேலும் அவ்விருவரும் எல்லா வித நன்மைக்கும் உரித்தான வர்களே. எனவே இவர் விசயத் தில் நன்மையையே நாடுங்கள். ஏனென்றால், நிச்சயமாக இவர் உங்களுள் உள்ள நல்லோர்களில் ஒருவராவார்.
நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்கள் கலீஃபா ஆக்கப்பட்டார்கள். அப்போது அன்ஸாரிகள் உமர்(ரளி) அவர்களிடம், உசாமாவைவிட வயதில் மூத்த யாரேனும் ஒருவரைத் தங்களுக்குத் தலை வராக நியமிக்குமாறு தாங்கள் வேண்டிக்கொள்வதாக அபூபக்ர் (ரளி) அவர்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள். அதனால் உமர் (ரளி) அவர்களிடம் சென்று இதுபற்றித் தெரிவித்தபோது, உமர் (ரளி) மீது பாய்ந்தார்கள். அமர்ந்த வண்ணம் உமர்(ரளி) அவர்களின் தாடியைப் பிடித்து உலுக்கினார்கள். மேலும் கூறினார்கள்:  உமரே ! உம் தாய் உமக்குக் கடினமாகட்டுமாக! அவள் உம்மை இழக்கட்டுமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் தலைவராக்கியுள்ளார் கள். அவரை அப்பதவியைவிட்டு நீக்க என்னை நீர் ஏவுகிறீரா?
பின்னர் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்கள் உசாமாவின் படையில் சென்றார்கள். அப்போது உசாமா (ரளி) அவர்கள் தம்முடைய குதிரை யில் பயணித்தார்கள். அபூபக்ர் (ரளி) அவர்கள் உசாமா வுடைய குதிரையின் கடிவாளத் தைப் பிடித்தவண்ணம் நடந்து சென்றார்கள். அவ்வேளையில், அபூபக்ர் (ரளி) அவர்களிடம் உசாமா(ரளி) கூறினார்கள்: நான் இறங்கிக் கொள்கிறேன்; தாங்கள் குதிரையில் ஏறிக்கொள்ளுங்கள். அதைக் கேட்ட அபூபக்ர் (ரளி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் இறங்க வேண்டாம்; நான் ஏறிக் கொள்ளவும் வேண்டாம். அல்லாஹ்வின் பாதையில் சற்றுநேரம் என்னிரு கால்கள் புழுதிபடிவது என்மீது கடமையல்லவா? என்று மறுவினாத் தொடுத்தார்கள்.
தற்கால இலாமிய இளை ஞர்கள் இலாமிய மார்க்கத் தைப் பற்றியும் அதன் கலாச் சாரத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அறியாதிருக்கின்றார்கள். இலாமியக் கலாச்சாரச் சீரழிவுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் இருக்கின்றார்கள்.
இளைஞர்களே! உங்கள் உள்ளங்களில் இலாமிய உணர்வில்லையா? நம் முன்னோர்கள் இலாமிய மார்க்கத்திற்காகப் போராடிய போராட்டங்கள் ஞாபகமில் லையா? இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நீங்கள் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றீர்? இன்னுமா நீங்கள் உணர்வு பெறவில்லை? இன் னுமா நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை?   ***
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி 
ஆலங்குடி

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”

இளைஞர்களே எங்கு செல்கிறீர்? அரபி: அஷ்ரஃப் ஷஅபான் அபூஅஹ்மத்-எகிப்து தமிழாக்கம்: நூ.அப்துல் ஹாதி பாகவி,  M.A, M.Phil. இளைஞர்கள், ஒரு சமுதாயத் தின் மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிப்பவர்கள். அவர்கள்தாம் நாளைய சமுதாயத்தை வழிநடத்திச் செல்ப வர்கள். எனவே அவர்கள் கல்வியறிவு உடையவர்களாக வும் ஆன்மிக பலம் மற்றும் மனஉறுதி கொண்டவர்களா கவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இருந் தால்தான் அவர்கள் சமுதாய மக்களைச் சீரிய முறையில் வழிநடத்திச் செல்ல முடியும். மேலும், அவர்கள் தலைமைப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *