Poem: வீடியோப் போஸ்..

வெட்கத்தைப்

படம்பிடித்துக் காட்ட;

பெண்கள் கூட்டத்தில்

வெளிச்சம் போட்டுச்

சிரித்துக்கொண்டே

வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே;

வெட்கத்தை

வெளியேற்றிக் கொண்டே;

முகம் காட்டும்

அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம்

மணவாளனுக்காக;

வாசம் வீசுவதற்கு முன்னே;

ரசித்து எடுக்க

வீடியோக்காரன்

மணவாளியின் அறையில்;

குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்;

ஒதுங்கிக் கிடக்கும்

முந்தாணியும் தப்பாமல்

ஓரக்கண்ணின்

ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த உறவுகளை

விழிகளில் அடைக்க;

திருமண வீடியோக்கள்;

வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்;

அனைவரும் கண்டுக்களிக்க;

அடுத்தவன் விழிகளுக்கு

விருந்துக் கொடுக்க;

வெட்கம் கெட்டுப்போன

சமாச்சாரங்களுக்காகச்

சமபந்திப் போஜனம்;

———–யாசர் அரஃபாத்

வெட்கத்தைப் படம்பிடித்துக் காட்ட; பெண்கள் கூட்டத்தில் வெளிச்சம் போட்டுச் சிரித்துக்கொண்டே வீடியோக்காரன்! வெட்கிக்கொண்டே; வெட்கத்தை வெளியேற்றிக் கொண்டே; முகம் காட்டும் அகம் கறுத்த மங்கைகள்! மலறும் முகம் மணவாளனுக்காக; வாசம் வீசுவதற்கு முன்னே; ரசித்து எடுக்க வீடியோக்காரன் மணவாளியின் அறையில்; குடும்ப அனுமதியுடன்! தவறிவிழும் தாவணியும்; ஒதுங்கிக் கிடக்கும் முந்தாணியும் தப்பாமல் ஓரக்கண்ணின் ஓலி ஓளி நாடாவில்! விட்டுப்பிரிந்த உறவுகளை விழிகளில் அடைக்க; திருமண வீடியோக்கள்; வளைகுடா அறைகளில்! அறிந்தவன் அறியாதவன்; அனைவரும் கண்டுக்களிக்க; அடுத்தவன் விழிகளுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *