பெற்றோர்களே கவனம் – உஷார்

Got from Mail.

 

அஸ்ஸலாமுஅலைக்கும்,,,

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை கவனம் உஷார்.

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,.

தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம் பாசம்ஃபேஷன்என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள்.

இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக சினிமாமுதல் காரணமாக இருக்கிறது.

சினிமாஎன்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது.

அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)

கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.

வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>>   DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>

லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்

பெற்றோர்களே கவனம்:-


பெற்றோர்களின் எதிர்ப்பு பயந்து காதல் ஜோடிகள் போலீஸ் ஸ்டேஷன்களில்
தஞ்சம் புகுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நாகரீகத்தில் வளர்ச்சி காணும் போதெல்லாம் ஆனந்தம் கண்ட நாம், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சில நேரங்களில் வருந்த வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு சினிமா,”டிவிபோன்றவை இளம் பெண்கள், இளைஞர்களை

சீரழித்து வருகின்றன. படிக்கும் வயதில் காதல் என்ற பெயரில் கல்வியை கோட்டை விடும் சிறிசுகளின் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலைபார்ப்போர் அதிகம் உள்ளனர். அம்மாவின் அரவணைப்பு கிடைக்கும் அளவுக்கு அப்பாவின் கண்டிப்பு கிடைப்பதில்லை. இதனாலேயே மாணவிகள் சிலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். இன்னும் சில இடங்களில் பெற்றோரின் பொறுப்பின்மை குழந்தைகளை சீரழிவுக்கு அழைத்து செல்கிறது. “டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களை தங்கள் மகளுடன் உட்கார்ந்து பார்க்கும் தாய்மார்களுக்கு, அதனால ஏற்படும் விபரீதம் புரிவதில்லை. இன்று சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காமமும், குரோதமும் தொடர்களில் தான் ஒளிபரப்பாகிறது. இதனால் மாணவிகளின் மனம் திசை மாறி ,காதல் வலையில் சிக்கிவிடுகின்றனர். அதன் பின் பெற்றோரை உதாசினப்படுத்தி வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகளும் சினிமா மற்றும்டிவிகளில் கண்முன்னே காட்டிவிடுகின்றனர். இதற்காக சட்டரீதியாக செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைக்கின்றனர். இதையை தங்களின் காதலுக்கு போதனையாக எடுத்துக்கொண்டு மாணவிகள் பலரும் காதலனுடன் படி தாண்டுகின்றனர். எல்லாம் அறிந்த பெற்றோரும் வேறு வழியின்றி தனது பெண்ணை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்கின்றனர். பெண்ணே, தன்னை விரும்பியவரை திருமணம் செய்து கொண்டு கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்துவிடுகிறார். அதன் பின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுதுபுலம்புகின்றனர். இது தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்ட பிறகே, அதை தடுக்க பெற்றோர் முன்வருகின்றனர். அதே அக்கறையை தங்கள் குழந்தைகளின் கண்காணிப்பிலும், வளர்ப்பிலும் காட்டினால்இது போன்ற கசப்பான சம்பவங்களை தடுக்கலாமே. கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, “டிவிபோன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் இது போன்ற கசப்பான அனுபவங்களையும் தவிர்க்கலாம்.

பெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக கருதப்படுகின்றாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.

ஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரியவிடயமாகும்.

முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலைய நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்கு காரணங்கள் பல இருந்தேபாதும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம்.

* முதலாவதாக, தொடர்புசாதனங்கள் முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, கலாசார, பண்பாட்டு விடயங்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. தொலைக் காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சினிமாக்களும், தொடர்நாடகங்களும் வானொலிகளில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களும் இதில் முதன்மை பெறுகின்றன.

* ஒரு காலத்தில் முஸ்லிம் பெண்கள் திரையரங்குகளுக்கு செல்வது மிக அரிதாகேவ காணப்பட்டது. ஆனால், இன்று ஹிஜாப் அணிந்த நிலையில் குடும்பத்தவர்களுடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்கின்ற பெண்களை காண்கின்றோம். கிராமப்புற வீடுகளில் திரையரங்குகளின் இடத்தை தொலைக்காட்சி வகித்து வருகின்றது.

*மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்கள் இன்று வெட்க உணர்வற்று, பண்பாடற்று, ஒன்றாக அமர்ந்து சினிமாக்கைளயும் ஆபாச பாடல்கைளயும், நாடகங்களையும் பார்த்து ரசிப்பதை பரவலாக காண முடிகின்றது.

* வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என எந்த ஊடகத்தை எடுத்தாலும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர். வானொலியை செவிவிமடுத்தால் ஹலோ என ஒரு முஸ்லிம் பெண்தான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பாள். தொலைக்காட்சியிலும் இதே நிலைதான்.

* இஸ்லாமிய நூல்கைளயும், சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் மிகவேகமாக குறைந்து வருகின்றது. பாடசாளைகளில் உள்ள நூலகங்களில் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய நூல்கைள விடவும் காதல் கதைகைளக் கொண்ட நாவல்களும் கவிதைத் தொகுதிகளும்தான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.

*முன்தினம் பார்த்த சினிமாக்களினதும் நாடகங்களினதும் விமர்சனம் அடுத்தநாள் பாடசாலை வகுப்புகளில் நடைபற்று வருகின்றது. சில பெண்கள் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக சினிமா நடிக, நடிகைகளின் புகைப்படங்கைள வைத்துக்கொண்டு அதை ரசிப்பதிலேய கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வேடிக்கைத்தனமாக வகுப்பைறகளில் சிகையலங்காரம், முக அலங்காரம் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

எமது முஸ்லிம் பெண்களின் ஒழுக்கவீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக அமைவது ஆடைகளாகும். இன்று ஒரு ஆணுக்கு நிம்மதியாக பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

* அந்நிய பெண்கள் எவ்வாறு இருந்த போதிலும் அவர்கைள ஒத்தவர்களாக எமது முஸ்லிம் பெண்களும் மாறிவிட்டனர். சாதாரணமாக டீ-சேர்ட், காற்சட்டை, போன்றவற்றை அணிகின்றனர்.

*இன்னும் சிலர் தாம் அணிகின்ற ஹபாயாவையும் கூட நாகரிகம் என்றபெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மிக இறுக்கமாக அணிந்துவருவதோடு அதன் நோக்கத்தை அறியாதவர்களாகவும் செயற்படுகின்றனர்.

* முஸ்லிம் பெண்களின் கலாசார சீரழிவிற்கு இன்னொரு காரணமாக மேலதிக வகுப்புக்கைளயும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. நகர்ப்புறங்களுக்குச் செல்லும் சில முஸ்லிம் மாணவிகள் பஸ்களிலும் பஸ்நிலையங்களிலும் வகுப்புக்களிலும் வரம்புமீறி நடந்துகொள்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளிலும் இத்தகைய வகுப்புகளுக்கு தனியாக சென்றுவருகின்றனர். இது பாரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதை அனைவரும் அறிவர்.
எனேவ, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான்கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் தமது ஈமானை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கின்றது. றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருகின்றது. இது பெண்களுக்கு மட்டுமேயான விடயமல்ல அவர்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற பெற்றோர்கள், பாதுகாவலர்களும் இவ் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள்.

எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்
என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.

நன்றி : மீள்பார்வை

Examples 01 :-

மேல்புறம்,

பழனியை சேர்ந்தவர் ராஜன் திருப்பரங்குறி (வயது32). கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். ராஜன் திருப்பரங்குறி திருச்சியில் உள்ள ஒரு பள்ளிக்கு தொழில் விஷயமாக சென்று இருந்தார். அப்போது அங்கு தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்த ரஷித்பானு(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்பு இருவரும் அடிக்கடி செல் போனில் பேசிக் கொண்டனர். இதில் காதல் மலர்ந்தது.

இந்த தகவல் ராஜன் திருப் பரங்குறியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராஜன் திருப்பரங்குறி தனது காதலி ரஷித் பானுவை அழைத்து கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். இங்கிருந்தபடி ராஜன் தனது தாயாருக்கு போன் செய்தார். அதில் காதலியுடன் மார்த்தாண்டத்தில் இருப்பதாக கூறினார்.

உடனே ராஜனின் உறவினர்கள் பழனியில் இருந்து இன்று மார்த்தாண்டம் வந்தனர். அவர்கள் ராஜனை தங்க ளுடன் வரும்படி கூறினர். அவர் காதலி இல்லாமல் வரமாட்டேன் என்று அடம் பிடிக்க அங்கு தகராறு மூண்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடி வந்தனர். அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து காதல் ஜோடியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கும் காதல் ஜோடி திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தனர். இதனால் காதலனின் தாய் அவர்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து போலீசார் காதல் ஜோடிகளை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Thanks : Malaimalar http://www.maalaimalar.com/2010/09/03174157/marthandam-police-station-love.html

Examples 02 :-

பெற்றோர்களே கவனம்:-

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்

இந்தியப் பெருநகரங்களில் மேனிலை பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதத்தினருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்கான காரணம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து கிடைக்கும் பாக்கெட் மணியும், மோசமான நண்பர்களின் பழக்கமும்தான் என தெரிய வந்துள்ளது. இந்திய பெருநகரங்களில் உள்ள 12-ம் வகுப்பு மாணவர்களில் 45 சதவிகிதத்தினர் அதிகமாக மது அருந்துகிறார்கள். ஒரு மாதத்தில் 5 அல்லது 6 முறை மது அருந்துவதாக அசோசேம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் டெல்லி, மும்பை, கோவா, சென்னை, ஹைதராபாத், பூனே, சன்டிகர், டேராடூன் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள 2,000 மாணவ, மாணவியர்கள் பங்குபெற்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் குடிப்பழக்கம் 100 சதவிகிதம் அதிகரி்த்திருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பள்ளி மாணவர்களுக்கு தாராளமாய் கிடைக்கும் பாக்கெட் மணியாகும்.

வெளிநாட்டு மது வகைகள் இந்தியாவில் சுலபமாக கிடைக்கிறது. மேலும், பெற்றோர்களின் கவனிப்பின்மையால் மாணவர்கள் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

From dinamalar News Paper :-

போலீசாருக்கு தீராத தலைவலி

மதுரை: வீட்டை விட்டு ஓடும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களால், போலீசாருக்கு தீராத தலைவலி ஏற்படுகிறது. இவர்கள் பற்றி கவனம் திசை திரும்புவதால் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றங்களை கண்டறியும் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் சமீபகாலமாக இளம்பெண்கள், வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது. காதல், சித்ரவதை, வீட்டில் கோபித்து கொள்வது, சினிமா மோகம் போன்ற காரணங்களால்டீன் ஏஜ்பெண்கள், வீட்டின் பாதுகாப்பான சூழலை விட்டு, வெளியேறுகின்றனர். இச்சமயங்களில் சிலர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதோடு கொலையாகின்றனர்.

இன்னும் சில பெண்கள், பிரச்னைகளை சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், சராசரியாக பத்து வழக்குகள் இப்படி வருகின்றன. வழக்கு பதிந்தால், இளம்பெண்ணுக்கு பிரச்னை ஏற்படும் என்பதால், உடனடியாக வழக்கு பதிவு செய்வதில்லை. பெண் கிடைக்கவில்லை என்றாலோ, பெற்றோர் வற்புறுத்தினாலோ வழக்கு பதிகின்றனர். ஐகோர்ட்களில் பதிவு செய்யப்படும் ஆட்கொணர்வு மனுக்களில், பெரும்பாலும் இளம்பெண் கடத்தப்பட்டதாகவே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

ஓடிச்செல்லும் இளம்பெண்களை விசாரிக்கும் போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. ஏனென்றால் ஆண்டுகணக்கில் காதலித்து பழகியவர்களாக இவர்கள் இருக்கவில்லை. வெறும் பத்து நாட்கள், 20 நாட்கள் பழக்கத்தில், தைரியமாக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பக்கத்து வீட்டு பையன், மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்யும் இடத்தில் உள்ள வாலிபர், எதேச்சையாக வரும்ராங் கால்‘, பஸ் டிரைவர் என வெகு சமீபத்தில் பழகியவர்களிடம், எளிதாக ஏமாந்து விடுகின்றனர். சமீபகாலமாக ஷேர் ஆட்டோ டிரைவர்களுடன் பழகுவதும் அதிகரித்துள்ளது.

பெற்றோர்களே கண்காணிப்பில்லை:

பெற்றோர் முறையாக கண்காணித்தாலே, இவர்களின் தவறுகளை எளிதாக கண்டுபிடிக்கலாம். ஆனால் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், பெண்குழந்தைகளுக்கு மொபைல் போன் வாங்கி கொடுக்கின்றனர். பையன்களுக்கு டூவீலர் தருகின்றனர். பழகும் ஆண்களுக்கு அடிக்கடிமிஸ்டு கால்கொடுப்பது, “கால் மீஎன எஸ்.எம்.எஸ்., செய்யும் பழக்கம் அதிகமாக உள்ளது. பத்து நாட்கள் பழக்கத்தில், வீட்டில் உள்ள நகை, பணத்துடன் வெளியேறும் இளம்பெண்கள், வெளியூரில் சென்று நான்கைந்து தங்குகின்றனர். பணமும், நகையும் கரைந்ததும் போக்கிடம் தெரியாமல், மீண்டும் பெற்றோரிடம் வருகின்றனர். சில பெற்றோர் மீண்டும் ஏற்றுக் கொள்வதில்லை. அல்லது பெற்றோர் கண்டுபிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தால், அந்தப் பையனுடன் செல்வதாக தெரிவிக்கின்றனர். பெற்றோர் அழைத்தாலும் மறுத்து விடுகின்றனர்.

பெற்றோரின் கண்ணீரும், வேதனையும் இவர்களுக்கு புரிவதில்லை. வேலையில்லாமல் சுற்றித் திரியும் வாலிபனால்,பயன் இல்லை என்ற நிலையில், தற்கொலை செய்கின்றனர். ஆசை, ஆசையாக வளர்த்த பெற்றோரை ஏமாற்றி, தெரியாத ஒருவனுடன் சென்று, மீண்டு வருவது பெரிய வேதனையாக இருப்பதாக, இன்ஸ்பெக்டர்கள் தெரிவித்தனர். குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு மாணவி முதல் கல்லூரி மாணவி வரை, இத்தவறை செய்கின்றனர். ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு வழக்குக்குச் செல்லும் போது, போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எஸ்.., உடன் செல்ல வேண்டியுள்ளது. பெண்ணையும், பையனையும் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அவர்களின் வழக்குகளை விசாரிக்க கூடுதல் நேரம் செலவிட வேண்டியுள்ளது. இப்படி ஒவ்வொரு வழக்கிற்கும் மெனக்கெட வேண்டியிருப்பதால், சட்டம், ஒழுங்கு தொடர்பான பணிகளை முழுமையாக கவனிக்க முடியவில்லை.

என்ன தீர்வு : இந்த வயதில் மொபைல் போன் வாங்கித் தரவேண்டியதில்லை. அப்படியே வாங்கி தந்தாலும், அவர்களை அறியாமல் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இரவில் பெற்றோருக்கு தெரியாமல் போன் செய்தாலோ, எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலோ உடனடியாக கண்காணித்து அறிவுரை கூற வேண்டும். பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச வேண்டும். பள்ளிகளில் வாழ்க்கை முறைகளை கற்றுத் தரவேண்டும். என்றோ ஒருநாள் சொல்லித் தருவதோடு கடமை முடிந்துவிடாது. மாதத்தில் ஒருநாள் வீதம், கவுன்சிலிங் செய்தாலே, இளம்பெண்கள் திருந்தி விடுவர். பெற்றோருக்கும், போலீசாருக்கும் தலைவலி குறைந்து விடும்.

Thanks : dinamalar

பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.

இவ்வுலகில் – நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.

அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

உங்கள் மார்க்க சகோதரன்,

thanks to brother

Got from Mail.   அஸ்ஸலாமுஅலைக்கும்,,, முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார். மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,. தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள். ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும்.…

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *