MUHARRAM FASTING 15th & 16th

MUHARRAM FASTING 15th & 16th Dec 2010 (Wednesday & Thursday) in UAE

 

 

இந்த நோன்பு ஏற்படுத்தப் பட்டதற்குரிய காரணம்

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு சென்ற நேரம் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டு இது என்ன நோன்பு என வினவினார்கள். அதற்கு அவர்கள் இது நல்ல நாள் , இந்த நாளில்தான் பனூ இஸ்ராயீல்களை அவர்களின் பகைவ (ஃபிர்அவ்) னிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்தான் , அந்த நாளில் மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள் , அதற்கு நபி (ஸல்) அவர்கள் , உங்களைவிட மூஸா (அலை) அவர்களை (மதிப்பதற்கு) நான் தகுதியுடையவன் என்று கூறி அந்த (முஹர்ரம் பத்தாம் நாள்) நோன்பை நோற்றார்கள் , அந்த நோன்பை நோற்பதற்கு (மக்களையும்) ஏவினார்கள். (புகாரி)

ஆஷூரா நோன்பைப் பற்றியுள்ள ஹதீதுகள்

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது , சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) அவர்கள். ஆதாரம்: முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்று (மற்ற மக்களையும்) நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். ஆதாரம் புகாரி, முஸ்லிம்.

ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். ஆதாரம்: முஸ்லிம்.

எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். ஆதாரம்: முஸ்லிம்.

பொதுவாக இந்த முஹர்ரம் மாதத்தில் செய்யக்கூடிய பித் அத்கள்

முஹர்ரம் எனும் போது அது முஸ்லிம்களின் ஒரு விஷேச நாள் , அல்லது ஒரு சோக நாள் போன்ற

கருத்துக்கள் நிலவுகின்றது இந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பேரனும் , புதல்வி பாத்திமா(ரலி) அவர்களின் மகனுமாகிய ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டதையொட்டி துக்கம் அனுஷ்டிப்பதும் , நெஞ்சிலும் கன்னத்திலும் அடித்துக்கொண்டு உடலை கீரி காயப்படுத்திக்கொண்டு ஊர்வலம் வரும் காட்சி கண்முன் வருகின்றது. மார்க்க அளவில் இதற்கு ஆதாரமோ , அடிப்படையோ இல்லையென்பதும் இது இஸ்லாத்தைபற்றி ஒரு தவறான சித்திரத்தையே ஏற்படுத்துகின்றது என்று இவர்கள் ஏனோ சிந்திக்க தவறுகின்றனர்.

இது போன்ற ஊர்வலங்களில் பெரும்பாலும் இளைஞர்கள் அதிகமாக கலந்து கொண்டு பல

கோஷங்கள் எழுப்புவதும் , அல்லாஹு அக்பர் , என்றும், லாயிலாஹா இல்லல்லாஹ் என்று

உரத்தக் குரலில் கூறுவதும் , வாள், ஈட்டி, கத்தி, போன்ற ஆயுதங்களுடன் பல்வேறு விளையாட்டுகள் என்று உடலை கீறி கிழித்துக் கொள்வதும் , பெரிய ஊசிகளால் கன்னத்திலும் , கைகள், கால்கள், தாடைகள் , நாக்கு, மூக்கு , காதுகளிலும் , வயிற்றிலும் குத்திக்கொள்வதும் , யாஅலி , யா ஹஸன் ,யா ஹுஸைன் , ஹஸன் ஹுஸைன் என்று பெருங்குரலில் மேளதாளங்களுடன் கூச்சலிட்டு தலைவிரி கோலமாக ஆடுவதும் நபி முஹம்மது(ஸல்) அவர்கள் காட்டிய வழியா ? அவர்கள் இதை விரும்பியிருப்பார்களா ?

என்று சிந்திக்க மறுக்கின்றனர். இஸ்லாம் எனும் உன்னதமான வாழ்க்கை நெறியை எத்திவைத்து

மக்களை அதன் பால் அழைக்க கடமை பட்டவர்கள் இஸ்லாம் எனும் மார்கத்தையும் ஒட்டு

மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் மக்கள் வெறுத்து ஒதுங்க வழி வகுக்கின்றனர்.

 

இறுதி தூதரின் மரணத்திற்கும் 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஹிஜ்ரி 61ல் ஹுஸைன்

இப்னு அலி(ரலி) அவர்களும் அவர்கள் குடும்பத்தினர்கள் ஆதரவாளர்கள் என்று பலரும்

கர்பலா எனுமிடத்தில் நடந்த ஒரு போரில் மரணமடைந்தது மிகவும் சோகமான ஒரு நிகழ்சி

என்பதில் இருகருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் அதற்காக மார்க்கம் அனுமதிக்காத

விதத்தில் செயல் பட அனுமதியில்லை என்பதையும் மறக்ககூடாது. ஒருவர் மரணித்தால் அதற்கு எவ்வாரு எத்தனை நாள் துக்கம் அனுஷ்டானிப்பது என்பதற்கும் இஸ்லாம் மூன்று நாட்கள் என்று வரையரை வைத்துள்ளது. அதற்கு மாறாக ஆண்டுதோரும் இப்படி செயல்படுவது நபி வழியில்லை என்பதை உணர வேண்டும்.

 

முஹர்ரம் எனும் மாதத்திற்கென்று நபி(ஸல்) அவர்களால் காட்டிதரப்பட்ட ஒன்பதாவது மற்றும்

பத்தாவது நாளில் விசேஷமான ஆஷுரா எனும் நோன்பை கடைபிடிக்க தவறுவதும் , அதன்மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மையை இழக்க செய்யும் அளவில் தான் இன்று முஹர்ரம் எனும் இந்த மாதத்தை பற்றி நாம் அறிகிறோம் என்றால் மிகையாகாது. சிலர் இந்த ஆஷுரா நோன்பையும் ஹுசைன் (ரலி) அவர்களுடன் இணைத்துவிடுவதையும் பார்க்க முடிகிறது.

 

இன்னும் சிலர் இந்த பத்து நாட்கள் விசேஷ தண்ணீர் பந்தல் அமைப்பது அதற்காக விசேஷமாக பயான் எனும் பெயரில் மேடைகள் அமைத்து அழுது புலம்புவதும் அதற்கு பணம் வசூலிப்பது , முஹர்ரம் பத்து அன்று சர்பத் என்று குளிர் பானம் விநியோகிப்பது என்றும் பஞ்சா எடுத்தல் என்று ஊர்வலம் எடுத்து கோஷங்களுடன் மார்க்க ஆதாரமற்ற பித்தத்தான நூதன காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இவற்றிர்க்கு அறவே மார்க்க அங்கீகாரம் இல்லை. என்பதையும் உணரவேண்டும் .

 

இது இஸ்லாமிய அடிப்படைகளாகிய குர் ஆன் மற்றும் நபிவழிக்கு மாற்றமாக செயல்படுவது ஆகும். இதனால் நமக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்பதை இதில் ஈடுபடுபவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும். முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளும் அதன் அமல்களும் என்ன என்பதை அறிந்து அதனை மட்டும் செயல்படுத்தி பயனடைய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் நமக்கு மார்க்கத்தை போதிக்க , கற்று கொடுக்க அனுப்பப்பட்டனர் அவர்கள் மூலம் அல்லாஹ் நமக்காக இந்த தூய இஸ்லாம் மார்க்கத்தை அவர்கள் மூலமே அவன் முழுமை ஆக்கிவிட்டான் என்று குர் ஆன் 5:3 ல் அல்லாஹ் கூறுகின்றான் ,

 

ஆகையால் நபி(ஸல்) அவர்கள் காட்டிதராத அவர்கள் மரணத்தின் பின்னர் உருவாக்கப் பட்ட எந்த ஒரு புது சடங்கும் மார்க்கமாக அல்லாஹ்வினால் ஏற்று கொள்ளப்படாது. பார்க்க குர் ஆன் 3:85.

 

இது மறுமையில் நம்மை மிகப்பெரும் நஷ்டத்தில் சேர்க்கும் என்றும் அல்லாஹ் எச்சரித்துள்ளான். எந்த ஒரு வணக்கமும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு 2 நிபந்தனைகள் அவசியமாகும்.

1 அல்லாஹ்வுக்காகவே மட்டும் (இக்லாஸாக) செய்யவேண்டும்.

 

2 நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப் படி செய்யவேண்டும்.

நமது மார்க்கத்தில் இல்லாத ஓன்றை யார் புதிதாக (மார்க்கமாக) ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள். ஆதாரம்: புகாரி , முஸ்லிம்.

இன்று முஸ்லிம்களில் பலர் இந்த நாட்களில் பல தவறுகளைச் செய்கின்றார்கள். அதாவது குறிப்பிட்ட உணவுப்பண்டங்களை சமைப்பது , உடம்பில் இரத்தத்தை ஓட்டுவது , மக்களை ஒன்று கூட்டி குறிப்பிட்ட சில வணக்கங்களை செய்வது , இன்னும் இது போன்ற எத்தனையோ செயல்களை செய்கின்றார்கள். இவைகள் அனைத்தும் பித்அத் என்னும் பாவமான செயலாகும். மேலே கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு மாற்றமானதுமாகும். இப்படிப்பட்ட வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளாதிருப்பது மட்டுமல்லாமல் நாளை மறுமையில் தண்டனையும் வழங்குவான்.

 

 

முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். புஹாரி : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி).

MUHARRAM FASTING 15th & 16th Dec 2010 (Wednesday & Thursday) in UAE     இந்த நோன்பு ஏற்படுத்தப் பட்டதற்குரிய காரணம் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு சென்ற நேரம் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டு இது என்ன நோன்பு என வினவினார்கள். அதற்கு அவர்கள் இது நல்ல நாள் , இந்த நாளில்தான் பனூ இஸ்ராயீல்களை அவர்களின் பகைவ (ஃபிர்அவ்) னிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்தான் , அந்த நாளில் மூஸா (அலை)…

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *