கடலரிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் மீனவர் விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம்

on 22 November 2010

நாகர்கோவில் : கடலரிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாகர்கோவிலில் நடந்த குமரி மாவட்ட மீனவர் விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குமரி மாவட்ட அனைத்து மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட மீனவர் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடந்தது. நிகழ்ச்சிக்க தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார்.

 

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர், மற்றும் இடிமின்னல்தாக்கி இறந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், மானியவிலையில் மண்ணெண்ணை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, குளச்சல், தேங்காப்பட்டணம் ஆகிய பகுதிகளில் மீன்பிடிதுறைமுகம் அமைக்க நிதி ஒதுக்கீடும், முட்டம், ராஜாக்கமங்கலம் ஆகிய ஊர்களில் துறைமுகம் அமைக்க அனுமதியும் வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கடற்கரை மண்டல ஓழுங்காற்று விதிமுறைகளை சட்டமாக்கி, அதில் உள்ள 25- திருத்தங்களையும் பின்வாங்க கோருவது, கடலரிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோருவது,கடல் அரிப்பு தடுப்புச்சுவர்கள் அமைக்க கோருவது, 60 வயதை கடந்தவர்களுக்கு மாதந்திர ஓய்வூதியம் வழங்க கோருவது, கடற்கரையில் சுற்றுலா மையங்கள், தொழிற்சாலைகள் அமைப்பதையும், தனியார் ஆக்கிரமிப்புகளை தடை செய்வதோடு, கடற்கரையில் இருந்து ஆயிரம் மீட்டர் வரையுள்ள இடங்களை நிரந்தர மீனவர் குடியிருப்புப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

மீனவர் கிராமங்களை தனித்தனி கிராமபஞ்சாக மாற்றி, ஆணை பிறப்பித்து, அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்த கோருவது, கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க அதிவிரைவு விசைப்படகுகள், ஹெலிகாப்டர் வசதிகள், இந்திய கடல் எல்லையை தாண்டும் மீனவரின் உயிருக்கும், உடமைக்கும் தீங்கு நேராமல், பாதுகாத்திடவும், கடல் எல்லையினை தெரிந்து கொள்ள ஒளிரும் மிதவைகள் அமைக்ககோருவது, ஒவ்வொரு மீனவ கிராமங்களில் மீன்வள பாங்க் துவக்கி, மீன்பிடித்தொழில் கருவிகள் வாங்க மானிய கடன் மற்றும் குறைந்த வட்டியில் கடன் வழங்க கோருவது, இயற்கை சீற்றத்தால் இழப்பு ஏற்படும் போது நஷ்ட ஈடு வழங்க கோருவது, மாணவர்களுக்கு பாங்க்குகள் உயர்கல்விக்கு நிபந்தனையற்ற கல்விக்கடன் வழங்க கோருவது, மீன்பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க கோருவது, மீன்வளம், காலநிலை, நீரோட்டம் குறித்து ஆய்வுகள், தெரிந்துகொள்ள தகவல் பலகை அனைத்து கிராமங்களிலும் அமைக்க கோருவது, தேங்காப்பட்டணம்- இரயுமன்துணை,அழிக்கால்-ராஜாக்கமங்கலம்துறை, குறும்பனை- மிடாலம் போன்ற ஊர்களுக்கு இணைப்பு சாலை உடனடியாக அமைக்க கோருவது, உள்நாட்டு மீனவர்களை, மீனவர் பட்டியலில் சேர்த்தும், உள்நாட்டு ஆண், பெண் மீனவர்களை கடற்கரை மீனவர்களை போல் முழுநேர மீன்தொழிலாளர்களாக அறிவிக்க கோருவது, ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் அணைகளில் மீன்பிடிக்கும் உரிமையை கடலோர வம்சத்தாரின் வழியினரான உள்நாட்டு மீனவர்களுக்கு மட்டுமே வழங்க கோருவது, தொழில் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்க கோருவஆ, மீனவ கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சுயநிதி பிரிவில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அரசு ஊதியம் வழங்க கோருவது, சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ், மீனவர் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் அரசு ஒதுக்கீடு செய்த பணத்தை, மீனவர் நலத்திட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்த கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பணியாளர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மையம் சார்பில் ஒருங்கிணைத்து இருந்தனர்.

Source:

http://kanyakumari.com/news/?p=1748

on 22 November 2010 நாகர்கோவில் : கடலரிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாகர்கோவிலில் நடந்த குமரி மாவட்ட மீனவர் விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குமரி மாவட்ட அனைத்து மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட மீனவர் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடந்தது. நிகழ்ச்சிக்க தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார்.   நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர், மற்றும் இடிமின்னல்தாக்கி இறந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *