கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை

கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்ற படும் போது

M.ஷாமில் முஹம்மட்

இன்று 3.3.2010 இதே திகதியில் 3.3.1924 ஆம் திகதி திங்கள் கிழமை காலை வேளையில்

கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்த பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது முதல் சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்களிடம் தேற்றவர்கள் இரண்டாம் சிலுவை யுத்தத்தின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜியத்தை வெற்றி கொண்டனர் இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த சாம்ராஜ்யம் தேசிய வாதம் என்ற மேற்கின் விஷம் ஏற்றபட்டு முஸ்லிம் உம்மாஹ் கோமா நிலையில் போடப்பட்டு குற்றுயிரும் குறைஉயிருமாக துடித்துக்கொண்டு இருக்கிறது இந்த வேலையில் முஸ்லிம் உம்மாஹ் கிலாபத்தை இழந்து இன்றுடன் 86 வருடத்தில் கால் எடுத்து வைக்கின்றது.

மேற்கு தனது நாசகார மந்திரமான “ஒற்றுமையை பிரிவினையாக உருவாக்கி தேசத்தை கை பற்று” என்ற மந்திரத்தை தனது கிருஸ்தவ மிஷனெரிகள் மூலமும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமும் தேசியவாதம் என்ற கொடியின் கீழ் வெற்றிகரமாக செயல்படுத்தி முஸ்லிம் தேசத்தை துண்டுகளாக உடைத்து, உடைக்கப்பட்ட பகுதிகளை மேற்கு தனது இராணுவ ,மற்றும் நாகரீக கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்தது பல மான கட்டமைப்பை உடைந்தது முஸ்லிம்கள் பலம் இழந்தனர் முஸ்லிம் உம்மாஹ் தேசிய வாதம் என்ற கொடிய விஷம் ஏற்றபட்ட சமூகமானது. விரிவாக பார்க்க1,2

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் ஆகிவிட்டது மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மாஹ்வை பலவீன படுத்தி முஸ்லிம் உம்மாஹ்வின் முதுகில் ஏறி ருத்ர தாண்டவம் ஆடுகிறது 3.3.1924 ஆம் ஆண்டு துருகியில் முஸ்தபா கமால் அதாதுர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகியை பயன்படுத்தி ஐரோப்பியர் 13 நூற்றாண்டுகளாக உலகில் நிலை பெற்ற இஸ்லாமிய கிலாபத்தை விழ்த்தினர் , அழித்தனர் இதற்கு முன்னர் 1908ல் மேற்கின் ஆதரவுடன் துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது இவர்கள் இஸ்லாம் என்ற அடையாளத்தை முதன்மை படுத்தாமல் மேற்கின் தேசிய வாதத்துக்கு முன்னுரிமை வழங்கி துருக்கியில் கலகம் செய்ய மேற்கு சக்திகளால் உருவாக்கப்பட்டனர் இந்த கலகத்தில் இவர்களின் கை ஓங்கியது நிர்பந்தங்களின் காரணமாக கிலாபத் அரசு ஒப்பந்தங்களுக்கு இணங்கியது ஒப்பந்தங்களின் ஊடாக துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு கிலாபத் அரசாங்க நிர்வாகத்தினுள் புகுந்தது இவர்களின் செல்வாக்குடன் துருக்கி தேசியம் என்ற குறும் தேசிய விஷம் முஸ்லிம் சமுகத்தினுள் புகுந்தது.

துருக்கி நிர்வாகத்தினுள் புகுந்த இவர்கள் 240 உறுபினர்களை கொண்ட ஒஸ்மானிய மந்திரி சபையில் கலீபா இரண்டாவது அப்துல் ஹமீது என்பவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தீர்மானம் ஒன்றை கொண்டுவர அழுத்தங்களை பிரயோகித்தனர் ஏற்கனவே பல வெளிநாட்டு கிலாபத்தின் எதிரிகளின் படை எடுப்பால் திட்டமிட்டு சிதைக்கப் பட்டுகொண்டிருந்த கிலாபத், மேற்கு வெளிநாட்டு முகவர்களின் உள்நாட்டு சதிகளால் 27 ஏப்ரல் 1909 இல் கலீபா அப்துல் ஹமீது கலீபா பதவியில் இருந்து அகற்றபட்டார் இந்த தீர்மானத்தை கொண்டுவர பிரதான காரணமாக அமைந்தவர்கள் மேற்கின் உருவாக்கமான துருக்கி தேசிய வாலிபர் அமைப்புத்தான் இந்த அமைப்பில் யூதர்கள் பலர் துருக்கி தேசிய வாலிபர் அமைப்பின் நிர்வாக பிரிவில் இருந்தார்கள் என்பது குறிபிடதக்கது .

1901 இல் கலீபா அப்துல் ஹமீதின் கிலாபத்தின் போது யூதர்கள் பொருளாதார பலத்தை பண்படுத்தி பலஸ்தீனத்தின் நிலங்களை அபகரித்து கொண்டிருந்த போது இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட சுல்தான் அப்துல் ஹமீது யூதர்களுக்கு நிலங்களை விற்பதை தடை செய்து கட்டளை வெளியிட்டார் . சியோனிஸ கனவுக்கு தடையாக அமைந்ததை கண்ட யூதர்கள் தமது யூதர்களின் பலம் பொருந்திய குழு ஒன்றின் ஊடாக கலீபா அப்துல் ஹமீதை சந்திக்க முற்பட்டனர் ஆனால் அவர்களை கலீபா சந்திக்க மறுத்து விட்டார் எனிலும் இவர்கள் தமது கோரிக்கையை வேறு வழியில் முன்வைத்தனர் இதன் படி குறித்த சட்டத்தை விலக்கிக் கொண்டு ஜெருசலத்தில் யூதர்கள் வாழ்வதற்கு இடம் கொடுத்தால் சாம்ராஜியத்தின் அத்தனை கடன்களையும் அடைத்து விடுவதாகவும் வட்டி இன்றி பொருளாதார உதவிகளை அளிப்பதாகவும் கூறினர் அதற்கு கலீபாவின் பதில் இவ்வாறு இருந்தது ‘பலஸ்தீனம் என்னுடைய பரம்பரை சொத்தல்ல, நான் நினைத்த மாதிரி கொடுப்பதற்கு, இது முஸ்லீம்களின் தேசம் கலீபா உமர் காலத்தில் இருந்து முஸ்லிம்களின் பரம்பரை தேசம் . இந்த பகுதி முழுவதும் முஸ்லீம்களின் குருதி சிந்தி இருக்கிறது . பலஸ்தீன மண்ணில் ஒரு பகுதியை கொடுப்பதை விட என் சதையின் ஒரு பகுதியை வெட்டி கொடுப்பது எனக்கு எளிதாக இருக்கும். என்னுயிர் உள்ள வரை கட்டளை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது’ என்று தெளிவாக சொன்னார்கள்.

இந்த சம்பவம் யூதர்களுக்கு மேலும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு எதிராக மேற்குடன் சதி நாச வேலைகளை செய்யவும் மேற்கு இவர்களை பயன்படுத்தவும் எதுவாக அமைந்தது என்று குறிபிடலாம் 27 ஏப்ரல் 1909 இல் கலீபா அப்துல் ஹமீது கலீபா பதவியில் இருந்து அகற்ற பட்டார் இந்த தீர் மானத்தை கலீபா முன் சென்று நான்கு நபர்கள் வாசித்தனர் இவர்களில் இருவர் முஸ்லிம்கள் மற்ற இருவரில் ஒருவர் எமானுவேல் கரசா என்ற யூதன் இந்த கட்டம் மிக தெளிவாக மேற்கினதும் யூதர்களினதும் சதியை காட்டுகின்றது இது யூதர்களின் பலி வாங்கும் சந்தர்பமாக இருந்தது கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்ட பின்னர் பிரிட்டன் அதிபர் பெல்பௌர்- belfour- 1917 இல் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க பிரிட்டன் ஆயத்தங்களை செய்வதாக பிரகடனபடுத்தினான் என்பது குறிபிட தக்கது இது யூதர்கள் இஸ்லாமிய சாம்ராஜியத்தை அழிக்க உதவியதற்கு நன்றிகடனாக இருக்கலாம்.

27 ஏப்ரல் 1909 இல் கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்ட பின்னர் துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு தனது பிடியை படிப்படியாக இருக்க தொடங்கியது 240 உறுபினர்களை கொண்ட ஒஸ்மானிய மந்திரி சபை அப்துல் மஜீத் என்ற கலீபாவை 1922 இல் நியமித்தது இவர்தான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இறுதி கலிபாவாக பார்க்க படுகின்றார் முஸ்தபா கமால் என்ற மேற்கின் பொம்மை துருக்கி நாட்டின் அதிகாரத்தினை கையில் எடுத்தவுடன் மிகவும் வேகமாக கிலாபத் அழிப்பை தொடங்கியது , 1924 கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்டார் இறுதியாக இருந்த கிலாபத் 3.3.1924 உலகில் இருந்து அகற்றபட்டது கிலாபத் கலைக்க பட்டதாக அறிவிக்கப்பட்டு அதே நாள் கலீபா குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் 3.3.1924 அன்று மேற்கின் சதி நாச வேலைகளால் கிலாபத் அழிக்கப்பட்ட பின்னர் அன்றைய பிரிட்டிஷ் வெளிநாட்டு செயலாளர் லோர்ட் குர்சொன் – Lord Curzon- பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் இப்படி கூறினான் “இந்த விவகாரத்தில் முக்கிய விடையம் என்னவென்றால் துருக்கி அழிக்கபட்டுகொண்டிருகின்றது அது மீண்டும் ஒரு போதும் எழுச்சி பெறாது காரணம் துருக்கியின் ஆத்மாத்த பலமான கிலாபத்தையும் , இஸ்லாத்தையும் நாம் அழித்து விட்டோம்” என்றான்
கிலாபதின் இறுதி அழிப்புபை செய்தவன் முஸ்தபா கமால் என்ற துரோகி இவன் வெறும் கிலாபத் அழிப்புபை மட்டும் செய்யவில்லை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் புதிய சந்ததியை இஸ்லாம் என்றால் என்ன என்று கேட்க வைக்கும் அளவிற்கு முஸ்லிம் சமுகத்தில் இருந்து இஸ்லாத்தை மிகவும் அந்நியபடுத்த தேவையான மேற்கில் இருந்து இறக்குமதியான திட்டங்களை அமுல்படுத்தினான் .

கிலாபத் கலைக்கபட்டதாக அறிவிக்கப்பட் பின்னர் முஸ்தபா கமால் இஸ்லாத்துக்கு எதிரான அத்தனை சட்டங்களையும் அமுலுக்கு கொண்டு வந்தான் நாடு பூராவும் அரை நிர்வாண முழு நிர்வாண பெண்களின் நடன விடுதிகளை ஆரம்பித்தான் இதை எதிர்த்து கருத்து சொன்ன ஒரு புத்திஜீவியை தனது கை தடியால் அடித்து துரத்தியதுடன் அல் குர்ஆன் பிரதி ஒன்றாலும் அவர் மீது வீசி எறிந்தான் அரபு மொழியை முழு அளவில் தடை செய்தான் , அரபு கற்க முற்பட்டால் தேச துரோகமாக அறிவித்தான் , அரபு மொழியில் பாங்கு சொல்வதை தடை செய்தான் இஸ்லாமிய உடையை தடை செய்தான் , எதிர்க்கும் மனிதர்களை , கொலை செய்தான் சிறையில் அடைத்தான், நாடு கடத்தினான் எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் என்று சொல்வதை தடை செய்தான் அல்லாஹ் என்று சொல்லுக்கு பதிலாக “தன்றி” -Tanri-என்ற சொல்லை அறிமுகபடுத்தினான் அல்லாஹு அக்பர் என்று சொன்னதுக்காக பலரை சிறையில் அடைத்தான் ஒரு சமயம் மஸ்ஜிதின் மினாரா ஒன்றில் இருந்து வந்த பாங்கு தனது இசை நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்தாதாக கூறி அந்த மஸ்ஜிதின் மினாராவை இடித்து தகர்த்தான்.

அரபு எழுத்துகளை பாவிப்பதை தடை செய்தான் , ஒரு தடவை தான்தான் இறைவன் என்று கூட கூறினான் முஸ்லிம் பெண்களை ஐரோப்பிய வெறியர்கள் முன் நிர்வாணமாக ஆட விட்டு ரசித்தான் பெண்களை காம நடன நங்கைகளாக உருவாக்க பாடசாலைகளை உருவாக்கினான் மேற்கு காம நடன ஆசான்கள் இவர்களுக்கு கற்பித்தனர் பால் கவர்ச்சியை தூண்டும் உடைகளை உடுத்தவும் தைக்கவும் மேற்கு ஆசான்கள் கொண்டுவரபட்டனர் இஸ்லாத்துக்கும் அடுத்த சந்ததிக்கும் உள்ள அணைத்து தொடர்பு களையும் மேற்கின் உதவியுடன் துண்டித்தான் ஒரு தடவை இவன் தனது இராணுவ சிப்பாயை பார்த்து who is God where does he live ? இறைவன் யார் அவன் எங்கு இருக்கின்றான் என்று கேட்டான் அதற்கு அந்த இராணுவ சிப்பாய் முஸ்தபா கமால் பாஷா இறைவன் அவர் அங்கோர வில் இருக்கின்றார் என்று பதில் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது.

இங்கு கவனிக்க பட வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது முஸ்தபா கமால் பாஷா தான் அதிகாரத்துக்கு வரமுன்னர் ஐந்து வேலை தொழுபவனாக , நோன்பு நோற்பவனாக , ஹஜ் செய்பவனாக, அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவனாகவும் இருந்தான் அதிகாரம் கைக்கு வந்தவுடன் நேர் மாறாக மாறினான் இந்த சடுதியான மாற்றம் இவனின் உண்மையான உருவத்தை வெளிக்காட்டியது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

இவன் இஸ்லாத்தை தழுவியவர்கள் போல் நடித்த அல்லது இஸ்லாத்தில் சில பகுதிகளையும் யூத மதத்தில் சில பகுதிகளையும் பின் பற்றும் ஒரு யூத கோத்திரம் ஒன்றை சார்ந்தவன் இவனில் கோத்திரம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த சலோனிக்க Salonika என்ற தேசத்தை சேர்ந்தது இவர்களில் 1913 இல் 300 யூத குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவியதாகவும் அவர்கள் இஸ்லாத்தை தழுவினாலும் யூத மத வழிபாடுகளை தொடர்ந்தும் செய்து வந்ததாகவும் வரலாறு கூறுகின்றது இவர்கள் முஸ்லிம்களால் திம்மிகள் Doemeh-என்று அழைக்க பட்டதாகவும் , முஸ்லிமகள் போன்று இஸ்லாமிய கடமைகளில் முனைப்பாக இருந்ததாகவும் ஆனால் முஸ்லிம் பெண்களை இவர்கள் கண்டிப்பாக திருமணம் முடிக்க கூடாது என்ற யூத கொள்கையில் இருந்ததாகவும் வரலாறு கூறுகின்றது முஸ்தபா கமால் பாஷா மற்றும் நிதித் துறை அமைச்சராக அதிகாரத்தில் இருந்த ஜாவிட் பெய்யும் – Djavid Bey- இந்த யூத திம்மி – Doemeh-பிரிவை சார்ந்தவர்கள் என்பது வரலாறு இப் போது சில விடையங்கள் உறவு முறைகள் தெளிவாக தெரிகின்றது – The Secret Jews by Joachim Prinz 1973,pp. 111-122-

இது யூத சியோனிச வாதிகள் எப்போதும் மிகவும் கடமை உணர்வுடன் யூத தேசத்துக்காக இயங்கிகொண்டிருந்ததைதான் காட்டு கின்றது யூதர்கள் மேற்குலகுடன் இணைந்து தாம் நினைத்ததை சாதித்தார்கள் இன்றும் மேற்கு உலகின் சிந்தனையை தீர்மானிக்கும் சிந்தனை சாரதிகளாக உருவாகியுள்ளனர் நாம் கிலாபத்தை இழந்து ௮௬ வருடங்களை அடைந்தும் கிலாபத்துக்கு என்ன நடந்தது என்பதை பாடசாலையில் உயர்தர வகுப்பில் இஸ்லாமிய நாகரிகம் என்ற பாடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூறப்படும் சம்பவங்களை பற்றி மட்டும் தெரிந்துகொண்டு இஸ்லாமிய கிலாபத் தின் வரலாற்றை தவறாக விளங்கி கொள்கின்றோம் அல்லது அவை எமக்கு எந்த உணர்வு பூர்வமான அறிவையும் தராமல் வெறும் சில தகவல்களை அதுவும் முஸ்லிம்களின் ஒற்றுமை இன்மை பற்றிய செய்திகளை மட்டும் எமக்கு போதிக்கும் பாடமாக இருக்கிறது

கிலாபத் இன்றி முஸ்லிம்கள் சறுகுகளை போன்று எந்த பலமும் இன்றி இருகின்றனர் முஸ்லிம்கள் தொகையில் அதிகம் , வளத்தில் அதிகம் , பணத்தில் அதிகம் ஆனால் ஒரு தலைமைத்துவம் இன்றி சறுகுகளை போன்று எந்த பலமும் இன்றி இருகின்றனர் எங்கும் அடிவாங்கும் வரலாறு எதிலும் பின்னடைவு

உலக மக்கள் தொகையில், 19.2 வீதம் முஸ்லிம்கள் எனவும், 17.4 வீதம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வத்திகான் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

இன்று உலகில் யூதர்கள் 140 லட்சம் பேர் இந்தோனேசியாவில் மட்டும் முஸ்லிம்களின் தொகை 19 கோடி. இதுதான் உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு ,உலகில் முஸ்லிம்கள் தொகை 1500 லட்சம் பேர் உள்ளனர் அதாவது ஒரு யூதருக்கு 107 முஸ்லிம்கள் என்ற கணக்கில் இருக்கிறார்கள் உலகளவிலும் இந்திய அளவிலும் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறான் முஸ்லிம் நாடுகள் காம்பியாவில் இருந்து இந்தோனேசியா வரை 55 நாடுகள் உள்ளன

சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். (CNN) இந்த தகவலை தெரிவிப்பதாக ஒரு அறிக்கை குறிபிடுகின்றது

முஸ்லிம் நாடுகளில் உள்ள எண்ணை வளம் 74% வீதமாகும் இது முழு உலக எண்ணை உற்பதியின் வீதமாகும் இன்றைய நாளைய உலகை இயக்கும் பலம் என்று குறிபிடலாம் காஸ் எரிவாயு இது அமெரிக்க , ஐரோப்பா , சீனா போன்ற நாடுகளின் மொத்த வளத் தொகையுடன் ஒப்பிடும்போது 57% வீதமான காஸ் எரிவாயு முஸ்லிம் நாடுகளில் தான் அதிகம் இருக்கிறது தங்கம் விளையும் பூமியாக வும் 1 ட்ரில்லியன் தங்க சேமிப்பை கொண்ட நாடுகளாகவும் முஸ்லிம் நாடுகள்தான் இருக்கிறது இந்த 1 ட்ரில்லியன் தங்க சேமிப்பு அமெரிக்க , ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகளை விடவும் முஸ்லிம் உம்மாஹ் விடம்தான் அதிகமான தங்க வளம் இருக்கிறது , இராணுவ துறையை எடுத்துகொண்டால் 47லச்சம் ஆயுத படை வீரர்கள் முஸ்லிம் நாடுகளில் இருகின்றார்கள் இது அமெரிக்க , ஐரோப்பா , இந்தியா போன்ற நாடுகளின் மொத்த ஆயுத படை வீரர்களை விடவும் மிகவும் அதிகமானது என்று ஒரு ஆவணம் குறிபிடுகின்றது இது சரியாக ஆராயப்படவேண்டியது எனிலும் ஒரு ஒப்பீட்டுக்கு இதை எடுத்துகொள்ள முடியும்.

ஆனால் எங்களிடம் இஸ்லாம் கடமையாக்கிய கிலாபத் இல்லை இதுதான் இன்றைய எமது பிரதான பலவீனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் ‘அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்’ -ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378-
கிலாபத் உதையமாகும் காலம் மிகவும் அண்மிப்பதை போல் உணர முடிகின்றது கிலாபத் மீண்டும் ஏற்படுத்த பட்ட வேண்டும் அது தான் முழு மனித சமுகதுக்குமான விடுதலையாக அமையும்.

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்ற படும் போது M.ஷாமில் முஹம்மட் இன்று 3.3.2010 இதே திகதியில் 3.3.1924 ஆம் திகதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்த பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது முதல் சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்களிடம் தேற்றவர்கள் இரண்டாம் சிலுவை யுத்தத்தின் மூலம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *