இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
சகோதர சகோதரிகளே

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக





நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
என்னுடைய ஆசிரியர் சொன்னதை இங்கு நினைவு கூற ஆசைப்படுகிறேன். அதாவது “அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்”. இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என்ற சிந்தனைக்கு போகாமல் நம்முடைய தலைப்புக்கு வருவோம். சமீபத்தில் அப்படி தாறுமாறாக நிதானம் இழந்து தன்னுடைய துணையிடம் பேசியதை இண்டெர்நெட்டில் கேட்டு விட்டு அதிர்ந்து விட்டார் ஒரு நண்பர். அதை அவருடைய துணையிடம் சொல்லி நக்கீரனில் புகார் கொடுக்க சொல்லியிருக்கிறார். அது சம்பந்தமாக நக்கீரனில் வெளிவந்திருக்கும் செய்தி தொகுப்பு:

“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நக்கீரன்தான் காப்பாத்தணும்’’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.

“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது…?’’ என நாம் முடிக்கும் முன்பே…

“”இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..”’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்..

“சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்குறதுதானே… இதில் என்ன பிரச்சினை?’’ என்றோம்.

அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.

“அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்… இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி… எங்களுக்கே தெரியாமல்… எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி… இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு… அதிர்ந்துபோய்… எனக்குத் தகவல் சொன்னார். கூடவே “நக்கீரன்ட்ட உதவி கேள்’னும் சொன்னார். அதான் வந்தேன்”’என்று நம்மை அதிரவைத்த வர்… அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்… அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித்தோம்.

கணவன்- மனைவிகள், காதல் ஜோடிகள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்… அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு… பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்… அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.

உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா? என திகைத்துப்போன நாம்…

நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.

பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ… ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு… “”இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு.

முதல் வகை… நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா… யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க… நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.

மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், “உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்’னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்”’என்றார் விரிவாக.

பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். “”பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந்தப்ப… “எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்’னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டிருந்த ஒருத்தியைப்… படத்தைப் பார்த்தே… கிளுகிளு உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே “என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு’ என்றவள்…. தன் உடல் பாகங்களை வர்ணித்து… அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத்தரப்பும் தொலை பேசித்தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி… பணத்தை அந்த ஆபாசக் கும்ப லிடம் பறிகொடுத்துக் கிட்டு இருக்காங்களோ”’ என்றார் எரிச்சலாக.

வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் “”சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித்தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ… அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா… அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்… இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்… அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்” என்றார் கவலையாக.

சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது…”மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமாயிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக்கிறோம்”’ என்றார் உறுதியான குரலில்.

மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்…. உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.

இது சம்பந்தமாக சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வ கேட் ராஜேந்திரனோ… “”வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு. காதலர்கள் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், கள்ளக் காதலியிடமோ, கள்ளக் காதலனிடமோ கிளுகிளுப்பாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா… டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல்.

ஆக,

ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை “செக்’ பண்ணணும்.
நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம்… ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ,
நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே “டெலிவர்டு’ ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும்.

சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து “லாக்’ பண்ணிவிட வேண்டும்.” என்று உஷார்படுத்துகிறார் அவர்.

நன்றி : நக்கீரன்


சகோதர சகோதரிகளே, நம்மில் பலரும் இது போன்ற செயல்களை தினமும் செய்து கொண்டிருக்கிறோம். இது எங்கோ நடக்கிறது, நமக்கேன் கவலை என்று இருந்து விடாதீர்கள். இதை எச்சரிக்கையாக எடுத்து உங்கள் வாழ்க்கையில் முதலில் கடைபிடியுங்கள். தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) எல்லை மீறி நிதானம் இழந்து மனைவி தானே என்றி நினைத்து அந்தரங்க விஷயங்களை எக்காரணம் கொண்டும் பேசாதீர்கள், அப்படி பேசுமாறு உங்கள் மனைவியோ / காதலியோ / நிச்சயமுடிக்கப்பட்ட பெண்ணோ உங்களை வற்புறுத்தினால் விஷயத்தின் விபரீதத்தை சொல்லி புரிய வையுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் சொல்லி புரிய வையுங்கள். திருமணமான புதிதில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை தான், ஆனால் நாம் உஷாராக இல்லாது போனால் நம்முடைய அந்தரங்கமும் இணையதளத்தில் வெளிவந்து அதன் பின் வருத்தப்பட நேரிடும்.

Regards,
Thengai navas (navas shahul)
An Expert 3 star analyst on Shares in

http://www.moneyvidya.com?referral=REF06881
and
Generated by Twitlogo!

www.tradevidya.co.cc

இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்சகோதர சகோதரிகளேஉங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம்.…

0 Comments

  1. Beware of Net theives.Bedroom talks should not come to public.I remember the saying” walls have ears”.So one should better keep his amorous coversation with his partner in the bedroom only.

    Thengai priyan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *