பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்பு

அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவேண்டும் ; வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளை தோற்கடிக்கவேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்பு

புதுடெல்லி,செப்:பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் அனைத்து  பிரிவினரும் அமைதியும், நல்லிணக்கவும் பேண வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “இவ்வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து   சட்டத்தின் ஆட்சியை தகர்க்க நினைக்கும் முயற்சிகளை அரசு ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாப்ரி மஸ்ஜித் நில உரிமைத் தொடர்பான பிரச்சனை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்வு ஏற்படாது எனவும் இவ்விவகாரத்தில் தேவையான சட்டம் இயற்றவேண்டும் என்ற சில வகுப்புவாத பாசிச அமைப்புகள் விசித்திரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது .
கடந்த அறுபது ஆண்டுகளாக  அவர்களே பங்கேற்ற நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் நிலைப்பாடுதான் இது.
தங்களுக்கு ஆதரவான தீர்ப்பை வெளியிட நீதிமன்றத்திற்கு நிர்பந்தத்தை ஏற்படுத்துவதும், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதும் இந்த முயற்சியின் பகுதியாக காணமுடிகிறது.
முஸ்லிம்களுக்கு தேசத்தின் நீதிக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது.
1949 முதல் பாப்ரி மஸ்ஜிதில் நுழைவது தடுக்கப்பட்டு 1992 ஆம் ஆண்டு மதவெறி பாசிஸ்டுகளால் அது தகர்க்கப்பட்ட பொழுதும் சாட்சியம் வகித்த முஸ்லிம்கள் நீதிமன்ற தீர்ப்பிற்காக இத்தனை ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
பாப்ரி மஸ்ஜித் நிலைப் பெற்றிருந்த அதே  இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கும்வரை அமைதியான வழியில் சட்டரீதியான, ஜனநாயகரீதியான போராட்டங்களை முஸ்லிம்கள் தொடர்வார்கள்.” இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவேண்டும் ; வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளை தோற்கடிக்கவேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்பு புதுடெல்லி,செப்:பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் அனைத்து  பிரிவினரும் அமைதியும், நல்லிணக்கவும் பேண வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “இவ்வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *