பாங்கு சப்தம்

விசாலமற்ற மண்ணறையே
விலாசங்களாக மாற
மக்கிப்போன ஆடைகளினூடே
மரத்துப்போன என் தேகம்.
புழுக்களின் பிரவேசத்தில்
புழுக்கங்களின் பிரதேசத்தில்
புற்றாகிப்போன வெற்றுடல்.
ஊர்வனங்களின் ஊர்வலத்தில்
ஊர்வலமாய் வந்த நான்
கூறுகளாகி குதறியபிண்டமாய்
குரூரத்தின் சிதறலில்
உதிரங்கள் உறைந்து
உதிர்ந்தொழுகும் சடலமாகி
புரண்டுபடுக்கவும் நாதியற்று
அழுகும் நாற்றங்களில்
அசுத்தங்களே சுவாசங்களாக
பூச்சியின் கடைவாயில்
என் சின்னச் சின்ன
சதைத் துண்டுகள்.
நீட்டவும் மடக்கவும்
ஆட்டவே முடியாமல்
அசைவற்றுப் போன
நீர்த்துப்போன காற்றுப்பை.
கறையான்களுக் கிரையாகி
மேனியாவும் தீனியாக
கரைந்துருகும் மாமிசம்.
மயான பூமியில்
மணலரிப்புகளுக்கு ஏனோ
அவகாசமே இல்லாத
தலைபோகும் அவசரங்கள்.
இடைவெளி குறைந்து
எலும்புகள் நொறுங்க
துர்மணத்தின் வீச்சத்தில்
செத்த உடல்மீது
தத்தம் பணிகளை
நித்தம் புரியும்
சிற்றுயிர்கள்
சற்றே தளர்த்த
என்ன காரணமென
அண்ணாந்து நோக்க

‘சுபானல்லாஹ்’
ஆகாயத்தில் ஒலித்தது
“அல்லாஹு அக்பர்” என்ற
அழைப்புச் சப்தம்.

விசாலமற்ற மண்ணறையேவிலாசங்களாக மாறமக்கிப்போன ஆடைகளினூடேமரத்துப்போன என் தேகம்.புழுக்களின் பிரவேசத்தில்புழுக்கங்களின் பிரதேசத்தில்புற்றாகிப்போன வெற்றுடல்.ஊர்வனங்களின் ஊர்வலத்தில்ஊர்வலமாய் வந்த நான்கூறுகளாகி குதறியபிண்டமாய்குரூரத்தின் சிதறலில்உதிரங்கள் உறைந்துஉதிர்ந்தொழுகும் சடலமாகிபுரண்டுபடுக்கவும் நாதியற்றுஅழுகும் நாற்றங்களில்அசுத்தங்களே சுவாசங்களாகபூச்சியின் கடைவாயில்என் சின்னச் சின்னசதைத் துண்டுகள்.நீட்டவும் மடக்கவும்ஆட்டவே முடியாமல்அசைவற்றுப் போனநீர்த்துப்போன காற்றுப்பை.கறையான்களுக் கிரையாகிமேனியாவும் தீனியாககரைந்துருகும் மாமிசம்.மயான பூமியில்மணலரிப்புகளுக்கு ஏனோஅவகாசமே இல்லாததலைபோகும் அவசரங்கள்.இடைவெளி குறைந்துஎலும்புகள் நொறுங்கதுர்மணத்தின் வீச்சத்தில்செத்த உடல்மீதுதத்தம் பணிகளைநித்தம் புரியும்சிற்றுயிர்கள்சற்றே தளர்த்தஎன்ன காரணமெனஅண்ணாந்து நோக்க ‘சுபானல்லாஹ்’ஆகாயத்தில் ஒலித்தது“அல்லாஹு அக்பர்” என்றஅழைப்புச் சப்தம்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *