புள்ளிமான் கதை

ஒரு காட்​டில் இரண்டு புள்ளி மான்கள் இருந்தன. பார்ப்பதற்கு இரண்​டும் ஒரே மாதிரி​யாக இருக்​கும். இணை பிரி​யாத நண்பர்க​ளாக இருந்தன. சேர்ந்தே சாப்பி​டும்.

எங்கு சென்றா​லும் சேர்ந்தே​தான் செல்​லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்க​ளால் விளை​யாட முடிய​வில்லை. மழை நின்ற பிறகு​தான் வெளியே செல்ல முடிந்தது. இன்​னும் மழை பெய்​யுமா என்று இரண்டு மான்க​ளும் மேலே பார்த்தன. அப்போது​தான் மேகத்​திற்​குள்ளி​ருந்து வெளியே வந்தது சூரியன். அப் ​போது மான்கள் இரண்​டும் சூரிய​னைப் பார்த்து,””சூரியனே, இன்​னும் மழை வருமா?” என்று கேட்டன. அதற்கு சூரியன், “”அது​தான் நானே வந்து​விட்​டேனே, இனி எப்படி மழை வரும்?” என்றது.பிறகு, சூரியன் மான்க​ளைப் பார்த்து சிரித்தது.ஒரு மான் கேட்டது, “”எங்க​ளைப் பார்த்து ஏன் சிரிக்கி​றாய் சூரியனே?”””நீங்கள் இருவ​ரும் ஒரே மாதிரி​யாக இருக்கி​றீர்கள்! அது​தான் எனக்​குச் சிரிப்பு வந்து​விட்டது! தவ​றாக எடுத்​துக்​கொள்​ளா​தீர்கள். நீங்கள் யார்?”””நாங்கள் ​தான் அழ​கான இரண்டு புள்ளி மான்​கள். நாங்கள் இருவ​ரும் நண்பர்கள்.  நாங்கள் எப்போ​தும் ஒற்றுமையாகத்​தான் இருப்​போம்” என்றன புள்ளி மான்கள்.சூரியன் கேட்டது: “”மிக​வும் நல்​லது! உங்க​ளில் யார் திறமை மிக்கவர்கள்?”””நாங்கள் இருவ​ருமே திறமையானவர்கள்​தான்!” புள்ளி மான்கள் சிரித்தப​டியே கூறின. சூரியன் சற்று யோசித்தது. பிறகு சொன்னது: “”சரி, அப்படி​யென்​றால் நான் ஒரு போட்டி வைக்கி​றேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். நீங்கள் இருவ​ரும் ஓடிப்​போய் அந்த மரத்​தைத் தொடுங்கள். யார் முத​லில் தொடு​கி​றார்களோ அவர்கள்​தான் திறமையானவர்கள். இந்தப்​போட்டி​யில் வெற்றி பெற்றவர்க​ளுக்கு நான் ஒரு பரிசு தரு​வேன்.”சூரியன் பரிசு தருவதாகச் சொன்ன​தும் இரண்டு மான்க​ளும் உடனடி​யாக ஓடத்தொடங்​கின. மான்கள் மரத்தை நெருங்​கின. ஆனால் மரத்​தைத் தொடாமல் அப்ப​டியே நின்று​கொண்டி​ருந்தன. சூரியன் கேட்டது: “”ஏன் மரத்​தைத் தொடாமல் அப்ப​டியே நின்று​கொண்டி​ருக்கி​றீர்கள்?”””நான் என் நண்ப​னுக்கு விட்​டுக்கொ​டுத்து விட்​டேன்” என்றது ஒரு புள்ளி​மான். இன்​னொரு புள்ளிமா​னும், “”நானும் என் நண்ப​னுக்கு விட்​டுக்கொ​டுத்து​விட்​டேன்” என்று சொன்னது. இ​தைக் கேட்டு பெரி​தும் மகிழ்ச்சிய​டைந்தது சூரியன். அது சொன்னது:””அழ ​கான இரண்டு புள்ளி மான்​களே! உங்கள் ஒற்றுமை​யைப் பார்த்து நான் பெரி​தும் மகிழ்ச்சியடைகி​றேன். நீங்கள் இருவ​ரும் கடைசிவரை இப்ப​டியே இருக்க​வேண்​டும். உங்க​ளுக்கு நான் ஒரு வான​வில்லை பரி​சாகத் தருகி​றேன். நீங்கள் எப்​போது விரும்புகி​றீர்களோ அப்போ​தெல்​லாம் “வான​வில்லே வருக’ என்று சொன்​னால் போதும்.​ அப்​போது வானத்​தில் அழ​கான வான​வில் ஒன்று தோன்​றும். நீங்கள் அதைப் பார்த்து ரசிக்க​லாம்.”பிறகு சூரியன் விடை​பெற்​றுப் போனது. மான்கள் இரண்​டும் சந்தோஷம​டைந்தன. அவற்​றிற்கு விருப்ப​மான நேரத்​தில் வான​வில்லை அழைக்​கும்.​ வானத்​தில் தோன்​றும் அற்புத​மான வான​வில்​லைப் பார்த்​துப் பார்த்து ரசிக்​கும்.

ஒரு காட்​டில் இரண்டு புள்ளி மான்கள் இருந்தன. பார்ப்பதற்கு இரண்​டும் ஒரே மாதிரி​யாக இருக்​கும். இணை பிரி​யாத நண்பர்க​ளாக இருந்தன. சேர்ந்தே சாப்பி​டும். எங்கு சென்றா​லும் சேர்ந்தே​தான் செல்​லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்க​ளால் விளை​யாட முடிய​வில்லை. மழை நின்ற பிறகு​தான் வெளியே செல்ல முடிந்தது. இன்​னும் மழை பெய்​யுமா என்று இரண்டு மான்க​ளும் மேலே பார்த்தன. அப்போது​தான் மேகத்​திற்​குள்ளி​ருந்து வெளியே வந்தது சூரியன். அப் ​போது மான்கள் இரண்​டும் சூரிய​னைப் பார்த்து,””சூரியனே, இன்​னும் மழை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *