காய்கள் பழமாவது எப்படி?

பழங்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்தானே! இயற்கை நமக்களித்த வரம்தான் பழங்கள். பழங்களில்தான் எத்தனை விதங்கள், எத்தனை நிறங்கள்! கல்லால் அடித்து   வீழ்த்தித் தின்னும் புளியங்காய்களுக்கும், மாங்காய்களுக்கும் தனி ருசிதான் அல்லவா!

÷பொதுவாக காய்கள், இனிப்பாகவோ அல்லது கசப்பாகவோ இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். மேலும், காய்கள் பெரும்பாலும் கடினமாகவும், பச்சை நிறத்திலும் இருக்கும். அவை அப்படி இருப்பதற்குக் காரணம் என்ன?
÷சாதாரணமாகக் காய்களில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் ஆகிய கரியமில அமிலங்கள் அதிகமிருக்கும். அத்துடன், பாலிசாக்கரைடுகள் எனப்படும் கூட்டுச் சர்க்கரை என்ற மாவுப் பொருளின் (கார்போஹைட்ரேட்) பெரிய மூலக்கூறுகளும், சிறிதளவு புரதப் பொருளும் இருக்கும். இந்தக் கலவையால்தான் காய்கள் கடினத் தன்மையுடன் இருக்கின்றன. காய்களின் பச்சை நிறத்திற்குக் காரணம் அவற்றில் உள்ள நிறமி (இஏகஞதஞடஏவகக) தான்.
÷பறிக்கப்பட்ட காய்களில் இயற்கையாகவே உருவாகும் எதிலீன் வாயு, பழுக்கும் செயல்பாட்டைத் தூண்டிவிடுகிறது. பழுக்கும் நடைமுறையை விரைவுபடுத்தும் இந்த வாயு  மாற்றங்கள் அதிவிரைவில் நிகழக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக, காய்களின் மேற்புறம் உள்ள பச்சையம் மறைந்து, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற நிறமிகள் தோன்றுகின்றன. ஆந்தோசயனின், காரோட்டினாய்டு போன்ற வேதிப்பொருட்கள்தான் பழங்களுக்கு இப்படி வேறுபட்ட நிறங்களைக் கொடுக்கின்றன. அப்போது பாலிசாக்கரைடு என்ற சர்க்கரைக் கூட்டுப் பொருள் உடைக்கப்பட்டு, சிறிய சர்க்கரைப் பொருளாக்கப்பட்டு விடுகிறது. இந்தச் சர்க்கரை காரணமாகத்தான் பழங்கள் இனிக்கின்றன. மேலும் அவை மென்மையாகவும் மாறிவிடுகின்றன.
÷காய்கள் பழுக்கும்போது இயற்கையாகவே எளிதில் ஆவியாகக்கூடிய வாயுக்களைச் சுரக்கின்றன. இதன் காரணமாக, ஒவ்வொரு பழத்திற்கும் மாறுபட்ட மயக்கும் நறுமணம் தோன்றுகிறது.÷தன் சந்ததியைப் பெருக்குவதற்காகத்தான் மரம் இவற்றையெல்லாம் செய்கிறது.
÷பழத்தின் நறுமணத்தால் ஈர்க்கப்படும் பறவைகளும், விலங்குகளும் அவற்றைச் சாப்பிட்டுவிட்டு விதையைப் பரப்பும். இதன் காரணமாக, அந்த மரம் பல இடங்களில் வளரும். இதுதான் இயற்கைச் சுழற்சி.

பழங்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்தானே! இயற்கை நமக்களித்த வரம்தான் பழங்கள். பழங்களில்தான் எத்தனை விதங்கள், எத்தனை நிறங்கள்! கல்லால் அடித்து   வீழ்த்தித் தின்னும் புளியங்காய்களுக்கும், மாங்காய்களுக்கும் தனி ருசிதான் அல்லவா! ÷பொதுவாக காய்கள், இனிப்பாகவோ அல்லது கசப்பாகவோ இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். மேலும், காய்கள் பெரும்பாலும் கடினமாகவும், பச்சை நிறத்திலும் இருக்கும். அவை அப்படி இருப்பதற்குக் காரணம் என்ன? ÷சாதாரணமாகக் காய்களில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் ஆகிய கரியமில அமிலங்கள் அதிகமிருக்கும். அத்துடன், பாலிசாக்கரைடுகள் எனப்படும் கூட்டுச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *