கல்லூரி

 

சீருடை முத்திரைகள்
இங்கு தான்
முதன் முறையாக
நிராகரிக்கப்படுகின்றன
இவற்றின் நுழைவுத் தகுதி
பொருளாதார ரீதியிலும்
சாதி சமய அடிப்படையிலும்தான்
வழங்கப் படுகிறது.
மூக்குக்கண்ணாடியில்
முகம்பார்த்து
திருப்தியடைந்தவர்கள்
இங்குதான்
நிலைக் கண்ணாடியின் முன்

நிறுத்தப் படுகின்றனர்.
புதுப் புது
வர்ணனைச் சொற்களின்
அகராதிகள்!
தொடுக்கப்படுவதும்
இங்கேதான்.
அரைகுறை நாகரிகங்கள்
அரங்கேற்றப்படுவதும்
இந்த
ஆற்றங்கரைகளில்தான்.
‘படிக்கவரும் பெண்களுக்கு
அடுப்பெது’
என்று
பெண்களின் நிலையை
உயர்த்தியதும் இங்கேதான்.
அரசியல்வாதிகளும்
அறிவியலாளர்களும்
உருவாக்கப் படுவதும்
இதன் சுவர்களுக்கிடையேதான்.
பாதாள அறையில்
பத்திரப் படுத்தப்பட்ட
பல்கலைகளும்
இங்கே
பகிரங்கமாய் பரிமாறப்படுகின்றன.
இந்த வாடகை வீடுகளில்
குடியிருமைபெற்று!
சொந்தம் கொண்டாடுபவர்கள்
காலடி வைத்த
மூன்றே ஆண்டுகளில்
கட்டாயமாக
காலிப் படுத்தப் படுகின்றனர்.
பாடிக்களித்து
ஆட்டம் போட்டவர்கள்
பாசாகாமல்
அடுத்தடுத்த ஆறுமாதங்களுக்குள்
ஆஜராகும்
ஆயுள் கோர்ட்!
இந்த மேம்பாலங்கள்
இறுதியில்
வேலையில்லா திண்டாட்டம்
எனும்
வேதனைச்சாவடியில்
கொண்டு
தவிக்க விடுகின்றன.
இந்த காவல்துறைகள்
காலை முதல் மாலை வரை
மழை வெயில் பாராமல்
குறித்த நேரம் முடியும் வரை
கல்விக் கைதிகளை
கட்டிக்காகின்றன.

  சீருடை முத்திரைகள்இங்கு தான்முதன் முறையாகநிராகரிக்கப்படுகின்றனஇவற்றின் நுழைவுத் தகுதிபொருளாதார ரீதியிலும்சாதி சமய அடிப்படையிலும்தான்வழங்கப் படுகிறது.மூக்குக்கண்ணாடியில்முகம்பார்த்துதிருப்தியடைந்தவர்கள்இங்குதான்நிலைக் கண்ணாடியின் முன் நிறுத்தப் படுகின்றனர்.புதுப் புதுவர்ணனைச் சொற்களின்அகராதிகள்!தொடுக்கப்படுவதும்இங்கேதான்.அரைகுறை நாகரிகங்கள்அரங்கேற்றப்படுவதும்இந்தஆற்றங்கரைகளில்தான்.‘படிக்கவரும் பெண்களுக்குஅடுப்பெது’என்றுபெண்களின் நிலையைஉயர்த்தியதும் இங்கேதான்.அரசியல்வாதிகளும்அறிவியலாளர்களும்உருவாக்கப் படுவதும்இதன் சுவர்களுக்கிடையேதான்.பாதாள அறையில்பத்திரப் படுத்தப்பட்டபல்கலைகளும்இங்கேபகிரங்கமாய் பரிமாறப்படுகின்றன.இந்த வாடகை வீடுகளில்குடியிருமைபெற்று!சொந்தம் கொண்டாடுபவர்கள்காலடி வைத்தமூன்றே ஆண்டுகளில்கட்டாயமாககாலிப் படுத்தப் படுகின்றனர்.பாடிக்களித்துஆட்டம் போட்டவர்கள்பாசாகாமல்அடுத்தடுத்த ஆறுமாதங்களுக்குள்ஆஜராகும்ஆயுள் கோர்ட்!இந்த மேம்பாலங்கள்இறுதியில்வேலையில்லா திண்டாட்டம்எனும்வேதனைச்சாவடியில்கொண்டுதவிக்க விடுகின்றன.இந்த காவல்துறைகள்காலை முதல் மாலை வரைமழை வெயில் பாராமல்குறித்த நேரம் முடியும் வரைகல்விக் கைதிகளைகட்டிக்காகின்றன.

0 Comments

  1. when reading this my college first day memories are running through my mind.

    i am going to out by this year…

    my sweetest days are my college days only…

    shuhaib you made again… rocking

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *