ஒரு குழந்தையின் ஏக்கம் …

எனக்கு ஆட்டோ வரும்

முன்பே …

உனக்கு பேருந்து வருகிறதே

அம்மா…

ஒவ்வொரு நாளும்!

பள்ளியிலிருந்து

வீடு திரும்புகையில்

யாருமே இல்லாத

வீட்டைப் பார்க்கையில்…

எதுவுமே இல்லாதது போன்று

தோன்றுகிறது எனக்கு…

இரவு ஒன்பது மணிக்குள்

எப்பவும் வந்துவிடும்

உன்னையும்

பதினோரு மணிக்குள்

வந்து விட முயற்சிக்கும்

அப்பாவையும்

பள்ளிக்கூடத்தில்

நினைக்கையில்

சற்று மங்கலாதான்

ஞாபகம் வருகிறது !

இப்போதெல்லாம்

டாம் அண்ட் ஜெரி தெரியும்…

போகப் போக டிவியும்

புளித்துவிட்டது…

ஃபிரிஜ்ஜில் ஸ்னேக்ஸும்

செல்போனில் உன் குரலும்

அலுத்துவிட்டது…

வரவேற்ப்பறயினை

அலங்கரிக்கத் தெரிந்த

உனக்கு – உன் ஸ்பரிசங்களுக்கு

ஏங்கும் என்னை

ஏனம்மா

புரிந்து கொள்ள முடியவில்லை…?

வீட்டு வேலைகளை

ஞாயிற்றுக் கிழமைகளுக்கு

தள்ளிப்போடும் உன்னைப் போலவே

ஏக்கங்களைத் தள்ளிப்போட

எனக்கும் தெரிந்து விட்டது…

அன்பான வார்த்தைகளுக்கு

தற்காலிக தாயாகி விடுகிறாள்

வேலைக்கார ஆயா…

அப்போதெல்லாம்

தோன்றுகிறது

எனக்கு…

அவளுக்கே நான்

பிள்ளையாயிருக்கலாம் என்று…

உன் பிள்ளையென

உணர்த்த நான்

நன்றாக படிப்பதாக

மாற்தட்டுகிறாய்…

என் அம்மாவானெ

உணர்த்த

என்னச் செய்யப் போகிறாய்

நீ?

 

எனக்கு ஆட்டோ வரும் முன்பே … உனக்கு பேருந்து வருகிறதே அம்மா… ஒவ்வொரு நாளும்! பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில் யாருமே இல்லாத வீட்டைப் பார்க்கையில்… எதுவுமே இல்லாதது போன்று தோன்றுகிறது எனக்கு… இரவு ஒன்பது மணிக்குள் எப்பவும் வந்துவிடும் உன்னையும் பதினோரு மணிக்குள் வந்து விட முயற்சிக்கும் அப்பாவையும் பள்ளிக்கூடத்தில் நினைக்கையில் சற்று மங்கலாதான் ஞாபகம் வருகிறது ! இப்போதெல்லாம் டாம் அண்ட் ஜெரி தெரியும்… போகப் போக டிவியும் புளித்துவிட்டது… ஃபிரிஜ்ஜில் ஸ்னேக்ஸும் செல்போனில் உன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *