பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவணிக்கவேண்டியவை?(online indian Passport Office

(to read in big font , please press Control key and scroll your mouse page scroll button)

 

இறைவனின் பெயரால்!!!

நண்பர்களே தற்போது பாஸ்போர்ட்(passport) எடுக்க எந்த இடைதரகரும் இல்லாமல் நாமே ஆன்லைனில் பாஸ்போர்டுக்கு விண்ணபிக்கலாம் ,இப்படி நாமே நேரிடையாக வின்னபிப்படால் எளிதில் கிடைபதோடு மட்டும்மல்லாமல் பணமும்  மிச்சபடுத்தலாம்,

என் பழைய பதிப்பில் ஏற்கனவே இது பற்றி எழுதி இருந்தாலும் சில நண்பர்கள் எப்படி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது என்று கேட்டு இருந்தார்கள் அவர்களுக்காகவே இந்த வெளியிடு.

இந்திய அரசாங்கத்தின்  அதிகார பூர்வ பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்  வலை தலமாகிய இத்தளத்தில் கிளிக் செய்தால் கிழே வுள்ள படத்தி வருவதை போல் ஒரு தளம் திறக்கும்.

இதில் இடது பக்கம் கிழே நான் மார்க் செய்து இருக்கும் இடத்தில் கண்டினிவ்(Continue)என்று இருக்கும் இடத்தி சொடுக்கவும்,சொடுக்கியவுடன் நீங்க பூர்த்தி செய்யவேண்டிய பாஸ்போர்ட் விண்ணப்ப படிவம்  காட்சிதரும் கீழே இருபதைபோல்.

இந்த  விண்ணப்ப படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்று பாப்போம்,,,,,
passport office ………… என்ற இடத்தில் வுங்களுக்கு அருகாமையில் வுள்ள பாபோர்ட் அலுவலகத்தை தேர்ந்து எடுக்கவும்,

District:………. உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்

Service Desired:,,,,,,,, என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname ………..: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)

First Name: ,,,,,,,,,,,,உங்களது பெயர்

உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து

Previous Name :,,,,,,,,,,,,,, உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth:,,,,,,,,,,,,,,,, பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth:,,,,,,,,,,,,,,, பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification:,,,,,,,,,,,,,,,,,,,, உங்களது படிப்பு

Profession:,,,,,,,,,,,,,,,,,,,,,,, தொழில்

Visible Mark:,,,,,,,,,,,,,,,,,,,,,, உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms):,,,,,,,,,,,,,,,,,,,,, உயரம்

Present Address:,,,,,,,,,,,,,,, தற்போதைய முகவரி

Permanent Address:,,,,,,,,,,,,, நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தொலைபேசி எண்

Mobile No :,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மொபையில் எண்

Email Address: ,,,,,,,,,,,,,,,,,,,,இமெயில் முகவரி

Marital Status:,,,,,,,,,,,,,,,,,,,,, திருமணமான தகவல்

Spouse’s Name: ,,,,,,,,,,,,,,,,,,கணவர்/மனைவியின் பெயர்

Father’s Name:,,,,,,,,,,,,,,,,,,,, தந்தை பெயர்

Mother’s Name:,,,,,,,,,,,,,,,,,,,, தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

( * இப்படி நச்சத்திர குரிவுள்ள கட்டங்கள் கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்)

அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
■ரேசன் கார்டு

■குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

■தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

■மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

■கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

■வாக்காளர் அடையாள அட்டை

■வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

■துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)
■1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

■பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்

■கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்
■10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

■உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

■பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

இப்போது நான் எழுதி இருக்கும் வழிமுறைகளை அரசாங்க இணைய தளத்தின் மூலம் பார்க்க விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்து ஆங்கிலத்தில் பார்க்கவும் இன்னும் அதிக தகவல்கள் தெரிந்து கொல்லலாம்.

தொடக்கத்திலேயே பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் தளம் தந்து இருந்தேன் மேலே செல்ல கஷ்டமாக இருக்குமெனில் இங்கு கிளிக் செய்து  ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்.

(என் பழைய பதிப்பிலும் ஆன்லைனில் பாஸ்போர்ட் எடுக்க(online indian Passport Office)  எழுதி இருந்தேன் பார்க்க நினைபவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்)

 

via: http://majeedhse.blogspot.com/2010/06/online-indian-passport-office.html

(to read in big font , please press Control key and scroll your mouse page scroll button)   இறைவனின் பெயரால்!!! நண்பர்களே தற்போது பாஸ்போர்ட்(passport) எடுக்க எந்த இடைதரகரும் இல்லாமல் நாமே ஆன்லைனில் பாஸ்போர்டுக்கு விண்ணபிக்கலாம் ,இப்படி நாமே நேரிடையாக வின்னபிப்படால் எளிதில் கிடைபதோடு மட்டும்மல்லாமல் பணமும்  மிச்சபடுத்தலாம், என் பழைய பதிப்பில் ஏற்கனவே இது பற்றி எழுதி இருந்தாலும் சில நண்பர்கள் எப்படி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது என்று கேட்டு இருந்தார்கள் அவர்களுக்காகவே இந்த…

0 Comments

  1. yeah i got this thru google.
    this is useful
    it taught me how to get passport thru trivhy passport office.
    easy tutorials.

  2. திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ‘பாஸ்போர்ட்’ தொடர்பான விளக்கங்கள் பெற 3 தொலைபேசி எண்கள் – பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க தனி ஊழியரும் நியமனம்

    திருச்சி, அக்.20
    திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் தொடர்பான விளக்கங்கள் பெற 3 தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பொதுமக்களின் சந்தேகங்களுக்கு இந்த எண்களில் பதில் அளிப்பதற்காக ஒரு ஊழியரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாஸ்போர்ட் அலுவலகம்
    திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் திருச்சி மரக்கடை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 வருவாய் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
    விண்ணப்ப படிவத்தில் கையால் எழுதி பூர்த்தி செய்து புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை மாற்றப்பட்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்து பிரிண்ட் அவுட் எடுத்து, பாஸ்போர்ட் அலுவலகம் கொடுக்கும் தேதியில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று அதனை உரிய ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பம் செய்யும் முறை தற்போது அமலில் உள்ளது.

    விண்ணப்பம் செய்வது எப்படி?
    ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு பாஸ்போர்ட் அலுவலக வளாகத்திலேயே முன்னாள் ராணுவத்தினர் முகாமிட்டு உள்ளனர். அவர்களிடம் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யலாம். இல்லை என்றால் வெளியில் எந்த இடத்திலும் உள்ள பிரவுசிங் சென்டர், அல்லது இன்டர்நெட் இணைப்பு வைத்து இருந்தால் வீட்டிலோ, அல்லது கணினி இருக்கும் இடத்தில் இருந்தோ விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் வசதி உள்ளது. இது பற்றி அவ்வப்போது பாஸ்போர்ட் அலுவலகத்தின் சார்பில் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
    சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணமாக ரூ.1000ம், தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணமாக ரூ. 2,500ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ராணுவத்தினரிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கட்டணம் ரூ.50 மட்டுமே. இது போன்ற அடிப்படை விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவும், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை பற்றி விளக்கங்கள் அளிப்பதற்காகவும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் 3 தொலைபேசி எண்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    3 தொலைபேசி எண்கள்
    இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் கூறியதாவது:
    பாஸ்போர்ட் தொடர்பான அடிப்படை விவரங்களை தெரிந்து கொள்வதற்காக திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் 0431 2707203, 2707404, 2700699 ஆகிய 3 தொலைபேசி எண்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தனி ஊழியர் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்.

    வேலை நாட்களில் அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த தொலை பேசி எண்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிப்பார்கள். இந்த எண்களில் பேசுவதற்கான இணைப்பு கிடைத்ததும் அதற்கான ஊழியர் ‘ஹலோ பாஸ்போர்ட்‘ என கூறி தனது பேச்சை தொடங்குவார்.

    ஏமாற வேண்டாம்
    கணினி, இன்டர்நெட் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரும் முன்னர் இந்த எண்களில் பேசி உரிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும்படியும், புரோக்கர்கள் பிடியில் சிக்கி ஏமாறவேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    புரோக்கர்களை ஒழிக்க…
    புரோக்கர்களை ஒழிப்பதற்காக பாஸ்போர்ட் அதிகாரி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் ஆங்காங்கே நின்று கொண்டு இருக்கும் புரோக்கர்கள் போதிய விவரங்கள் இன்றி வரும் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை கறந்து விடுவதாகவும், மோசடிகள் செய்வதாகவும் ஏராளமாக புகார்கள் வருகின்றன. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்தின் முன் பகுதியில் தற்போது போலீசார் சார்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தொலைபேசி எண்கள், பாஸ்போர்ட் அலுவலகத்தின் எண்கள் எழுதப்பட்டு அவர்களிடம் புரோக்கர்கள் மிரட்டினால் உடனடியாக தொலைபேசி மூலம் புகார் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *