Funny events in Thomas alwa edison life

பள்ளிக்கு சென்று பாடம் படிக்காத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், சுயமாக படித்து முன்னுக்கு வந்தார். மிக அதிக எண்ணிகையில் புதிய கண்டறிதவர் என்ற பெருமை எடிசனுக்கு மட்டுமே உண்டு.
அவர் வாழ்வில் நடந்த சில சுவையான நிகழ்வுகளை இங்கு பகிர்த்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

மின் விளக்குக்கு எந்த உலோக கலவை இழை சரியாக இருக்கும் என்று கண்டறிய கிட்டத்தட்ட ஆறாயிரம் முறை வெவ்வேறு உலோக இழைகளை கொண்டு போராடினார். இது குறித்து எடிசன் கூறும் போது, ” முதல் சோதனையே எனக்கு வெற்றி தான். ஏனெனில் அது தான் இரண்டாவது சோதனையை செய்ய தூண்டியது. விளக்குக்கு சரியான மின்னிழையை கண்டுபிடிக்க எனக்கு ஒரு முயற்சி தான் தேவைப்பட்டது. ஆனால் அதற்கு எந்தெந்த உலோக இழைகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கு தான் 5999 முறை தேவைப்பட்டது. மேலும் 5999 உலோக இழைகளை பயன்படுத்த முடியாது என்பதையும் கண்டுபிடித்துளேன்” என்றார்.

இன்னொரு நிகழ்வு :

ஒரு சமயம் ஒரு விருந்தினரின் வீட்டில் நடைபெற்ற தொடர் நிகழ்ச்சியை பார்க்கும் படியான கட்டாயம் ஏற்பட்டது.அது அவருடைய மனதை கவரவில்லை என்பதால் பெருதும் சலிப்புற்றார்  எடிசன். அவர் வெளியே செல்லும் முயற்சி செய்யும் போதெல்லாம் யாராவது ஒருவர் அவர் கையைப் பிடித்து பேசியபடி ஹாலுக்குள் அழைத்துச் சென்றபடி இருந்தனர். ஒருவழியாக கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி இறுதியில் கதவோரமாக இருத்த நாற்காலியில் அமர்ந்தார்.

அப்போது மிகவும் உற்சாகமாக வந்த ஒருவர் எடிசனிடம், ” நீங்கள் இங்கே வந்திருப்பது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுடன் இருப்பது எங்களுக்கு நீங்கள் அளித்த கவுரவம். அடுத்து நீங்கள் என்ன கண்டுபிடிக்கக்  போகிறிர்கள்” என்றார்.

அதற்கு ” இங்கிருந்து  எப்படி வெளியேறுவது என்று கண்டுபிடிக்கவிருக்கிறேன் !!!” என்று சட்டென பதில் கூறினார் எடிசன்.

பள்ளிக்கு சென்று பாடம் படிக்காத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், சுயமாக படித்து முன்னுக்கு வந்தார். மிக அதிக எண்ணிகையில் புதிய கண்டறிதவர் என்ற பெருமை எடிசனுக்கு மட்டுமே உண்டு. அவர் வாழ்வில் நடந்த சில சுவையான நிகழ்வுகளை இங்கு பகிர்த்து கொள்ள ஆசைப்படுகிறேன். மின் விளக்குக்கு எந்த உலோக கலவை இழை சரியாக இருக்கும் என்று கண்டறிய கிட்டத்தட்ட ஆறாயிரம் முறை வெவ்வேறு உலோக இழைகளை கொண்டு போராடினார். இது குறித்து எடிசன் கூறும் போது, ” முதல் சோதனையே எனக்கு வெற்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *