தோமஸ் அல்வா எடிஷன் ( ஒருபக்க வரலாறு)

அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால், பாறைகளில் இருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கும் கண்டுபிடிப்பில், 1897-ம் வருடம் இறங்கினார் எடிசன். அவரது கண்டுபிடிப்பைச் செயல்படுத்த பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடுசெய்து சொந்தமாகத்
தொழிற்சாலை தொடங்கினார் எடிசன்.


மலைகளை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க, கற்களை மணலாக்க, மணைலப் பிரிக்க என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் இயந்திரங்களை நிறுவினார். ஒரு டன் இரும்புத் தாது ஆறரை டொலருக்கு
விற்பனையான நேரத்தில், நான்கு டொலர் அடக்க விலையில் எடிசன் உற்பத்தி
செய்தார். விற்பனை தொடங்கிய நேரத்தில் அமெரிக்காவின் மிசாபா மலைப்
பகுதிகளில் உயர் ரக இரும்புத் தாது பெருமளவு இருப்பது கண்டுபிடிக்கப்படவே, இரும்பு விலை மடமடவென ஒரு டன் மூன்று டொலராகக் குறைந்தது. நஷ்டமடைவது தவிர வேறு வழியில்லை எனத் தெரியவந்ததும், உடனே தொழிற்சாலைய மூடினார்.

எடிசனிடம் அவரது நண்பர்கள், ‘‘சிலருடன் கூட்டு சேர்ந்திருந்தால், ஒரேய‌டியாக நஷ்டமடைந்து இருக்க வேண்டியதில்லையே’’ என்றார்கள். ‘‘நஷ்டம் ஏற்படும் ஒரு வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே! தோல்வி என்பது வீழ்ச்சியல்ல…படிப்பினையே!’’ என்றபடி மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார் எடிசன். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கொங்கிரீட் கலவையைக் கண்டுபிடித்து, உடனே தயாரிப்பில் இறங்கி, மூன்றே வருடங்களில் இழந்த சொத்தைவிட அதிகமாகச் சேர்த்தார்.

அமெரிக்காவில் சாமுவேல் எடிசன் மற்றும் நான்ஸி எலியட் தம்பதியின்
நான்காவது மகனாக, 1847-ம் வருடம் பிறந்தார் தோமஸ் ஆல்வா எடிசன்.
தலை பெரிதாக இருந்ததால், ‘மண்டு, மூளைவளர்ச்சி குறைந்தவன்’ என
ஆசிரியரும் மாணவர்களும் கிண்டல் செய்யவே, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுத்தாயிடமே பாடம் பயிலத் தொடங்கினான் சிறுவன் தோம‌ஸ். ஊரில் விளையும் பொருட்களை புகை வண்டியில் நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தும், நகரத்தில் இருந்து பத்திரிகைகள் வாங்கி வந்து மற்ற ஸ்டேஷன்களில் விற்பனை செய்தும் சம்பாதித்தான்.

உள்நாட்டுப் போர் காரணமாக, பத்திரிகைகளுக்கு நல்ல வரேவற்பு இருப்பதை
அறிந்து, ரெயில்வெ அதிகாரிகளின் உதவியுடன் புகை வண்டியிலேயே
இயந்திரத்தை வைத்து, நகரத்துச் செய்திகளை அச்சடித்து ‘வீக்லி ஹெரால்ட்’
பத்திரிகையை விற்கத் தொடங்கினான். ஆசிரியர், அச்சடிப்பவர், விற்பைனயாளர் என எல்லா வேலையையும் செய்த எடிசனுக்கு அப்போது வயது 15. எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-ல் பதிவு செய்த ‘வாக்குப்பதிவு இயந்திரம்’ அரசினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங்களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும், உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோகிராஃப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே ஒளியையும் பதிவு செய்ய முடியும் என ‘சினிமாவைக் கண்டுபிடித்ததும், ‘கண்டு பிடிப்புகளின் தந்தை’ எனப் புகழாரம் கிடைத்தது!

1914-ம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து
ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, ‘‘தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்… ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில்
கலந்துவிட்டேன் என்பைத, 67-வது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த
தோல்வியும் எனக்குப் படிப்பினையே’’ என்றார் எடிசன் சிரித்தபடி.
தனது 81-வது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புக்களை எடிசன்
பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத
இவரது தன்மையே!

————————————————————————————-

via: http://valaakam.blogspot.com

அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால், பாறைகளில் இருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கும் கண்டுபிடிப்பில், 1897-ம் வருடம் இறங்கினார் எடிசன். அவரது கண்டுபிடிப்பைச் செயல்படுத்த பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடுசெய்து சொந்தமாகத் தொழிற்சாலை தொடங்கினார் எடிசன். மலைகளை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க, கற்களை மணலாக்க, மணைலப் பிரிக்க என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் இயந்திரங்களை நிறுவினார். ஒரு டன் இரும்புத் தாது ஆறரை டொலருக்கு விற்பனையான நேரத்தில், நான்கு டொலர் அடக்க விலையில் எடிசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *