தேங்காய்ப் பட்டணம் செல்வோமா?

தேங்காய்ப் பட்டணம் சுற்றிப் பார்க்க
நடராஜா வண்டியில் நாங்கள் ஏறினோம்!

கல்லாம்பொத்தையில் காலைக்கடகளை
எல்லாம் முடித்து சுத்தமாய் சென்றோம்!

வலியாத்து நீரில் நீந்திக் குளித்தோம்
வள்ளத்தில் ஏறி பொழியைக்கடந்தோம்!

ஆனப் பாறையை ஏறிப் பார்த்தோம்
ஆத்துப்பள்ளியில் இறையைத் தொழுதோம்!

கடப்புற மணலில் களிப்புற அமர்ந்தோம்
மணல்வீடு கட்டிய ஞாபகம் உணர்ந்தொம்!

சேண்டை பாறையை ஏறிப்பார்த்தோம்
ஊசிக்கிணற்றின் கதையைக்கேட்டோம்!

குளத்துப்பள்ளியில் தொழுகை முடிதோம்
அரசுப் பள்ளியில் பாடம் படித்தோம்!

கபறடி அருகே கடந்து சென்றோம்
கல்லடி தோப்பை கண்டு களித்தோம்!

ஜின்னா திடல் வழி திரும்பி வந்தோம்
ஸம்ஸம் தெருவின் அடுத்து வந்தோம்!

முஹம்மது முஸ்லியார் நினைவைக் கூறும்
மவ்லவித் தெரிவை அடைந்தோம் நாங்கள்!

மாலிக் தீனார் மகுமையைக் காட்டும்
வலியப் பள்ளியில் வணங்கினோம் இறையை!

சாப்புக்கடை வழி தொடர்ந்தோம் பயணம்
ஆற்றின் கரை வழி நடந்தோம் கடந்தோம்!

வாளவிளாகம் வழியாய் வந்தோம்
வாழும் மக்கள் நலன்கள் உணர்ந்தோம்!

ரிபாய் தெருவை நெருங்கிய நாங்கள்
ரிபாய் பள்ளியில் தொழுகை முடிதோம்!

முஹ்யித்தீன் பள்ளியின் அருகில் சென்றோம்
முதல்வனை வேண்டி பயணம் முடித்தோம்!

தேங்காய்ப் பட்டணம் செல்வோமா? ——

via: BTMJ 26th souvenir 2008

தேங்காய்ப் பட்டணம் சுற்றிப் பார்க்க நடராஜா வண்டியில் நாங்கள் ஏறினோம்! கல்லாம்பொத்தையில் காலைக்கடகளை எல்லாம் முடித்து சுத்தமாய் சென்றோம்! வலியாத்து நீரில் நீந்திக் குளித்தோம் வள்ளத்தில் ஏறி பொழியைக்கடந்தோம்! ஆனப் பாறையை ஏறிப் பார்த்தோம் ஆத்துப்பள்ளியில் இறையைத் தொழுதோம்! கடப்புற மணலில் களிப்புற அமர்ந்தோம் மணல்வீடு கட்டிய ஞாபகம் உணர்ந்தொம்! சேண்டை பாறையை ஏறிப்பார்த்தோம் ஊசிக்கிணற்றின் கதையைக்கேட்டோம்! குளத்துப்பள்ளியில் தொழுகை முடிதோம் அரசுப் பள்ளியில் பாடம் படித்தோம்! கபறடி அருகே கடந்து சென்றோம் கல்லடி தோப்பை கண்டு…

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *