தேச்சு குளியும் தேங்காப் புண்ணாக்கும்
புதன், சனி ஆகிய தினங்களில் எண்ணைய் தேய்த்து குளிக்கும் வழக்கம் பட்டணத்தில் பழக்கத்தில் இருந்து வந்தது. அப்பழக்கத்தினை இப்போதும் சிலர் பின்பற்றி வருகின்றனர். அப்படி எண்ணைய் தேய்த்து குளிக்க வலியாற்றுக்கு செல்லும் போது சிரட்டையில் தேங்காய்ப்புண்ணாகை (செக்கு புண்ணாக்கு) ஊற வைத்து உடன் கொண்டு செல்வர். சோப்பு தேய்க்கும் முன்னர் புண்ணாக்கை உடம்பில் தேய்த்து எண்ணைய் வழுக்கை மாற்றிய பின் சோப்பு தேய்த்து குளிப்பர். வாப்பாவுடன் கையில் புண்ணாக்கு சிரட்டையுடன் ஆற்ற்க்கு குளிக்க சென்ற நினைவுகள் இப்போதும் பசுமையாக உள்ளது.
-MN Hameed
Add new comment