User Submitted Articles

Free Thengapattanam Calender 2014

Written by abdul rashid on . Posted in user submitted

Comments   

+1 #5 Zulfikar 2014-02-08 16:44
சுவர்க்கத்தின் கனவோடு…
---------- அறபி


லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
மேககூட்டத்தை சிதறடித்து
இறையின்
நேசத்திற்குள் மறைகிறது
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்


தியாகத்தில் பொதிந்த உலகம்
மீண்டும் மீட்டி
பரீட்சித்துப் பார்க்கிறது
கஹுபாவின் தேசத்தில்பிஞ்சுக் கால்களின்
அழுகுரல்
அணைக்கட்டுகளில் சிக்காமல்
அகிலம் நிறைத்து
ஷம் ஷமாய் பருகுகிறது

ஓர் இறை ஓரிறை ஒன்றே இறை
இந்த சத்தியம் உச்சத்தில் ஒலித்திட
கண விடுதலையின்றி
ஹஜரல் அஸ்வத்திற்கும்
மூச்சு முட்டுகிறது


காருண்யனின்
கட்டளை சரிதமாகி
மக்காமே இபுறாஹீம்
ஜனத்திரளிற்குள் திணறுகிறது


தாகத்தில் கதறி வறண்ட
ஷபா மர்வா மலைக்குளிரில்
ஹஜராக்களின்
கண்ணீர் நிறைக்கும் கரங்கள்அன்னை ஹலிமாவின்
அமுது ருசித்த
என் கண்ணின் மணி
ஹாஜிகளின் சுவாசமாகி
உயிரில் நிறைகிறது
எங்கள் வள்ளலின்
பாதம் பதிந்த
முகவரி தேடி
அழுதபடியே அசைகிறது
ஹஜ்

யார் பயணிப்பர்
இந்த பாலை தேசத்திற்கு
அன்னை ஆமினா
பூக்காதிருந்தால்

எவர் போவார்
இந்த காட்டரபி கோட்டைக்கு
எங்கள் கோமான்
கடைக்கண் படாதிருந்தால்நொறுங்கிப் போகிறோம்
அரபிகளின் கடிவாளத்தில்
எப்படி சாதித்தார் எந்தன் பூமான்
வயிற்றின் மேல்
கற்களை புசித்தபடி


விசித்திரம் அரபாவிற்குள்
தாங்குகிறது இலட்சங்கள்
அது
மதீனத்துல் உறையும்
மன்னரின் உருக்கம்


இருபத்து மூன்றிக்குள்
அகிலத்தையே புரட்டிய
சமாதான நெம்புகோல்
எந்தன் மாணிக்க நபி


பிறக்குமுன் தந்தையிழந்து
தவழுமுன் அன்னையிழந்து
நடப்பதற்கு
இறையின் கரம் பற்றிய
ஏந்தல் நபி


பசிதனில் வாழ்ந்து
குர்ஆனாய் நிறைந்து
மனிதத்தை சொன்ன
வேந்தர்க்கரசு


உறவுகளைப் பிரிந்து
ரியாத்தில் பிழிந்து
புறப்படும் மனிதம்
மக்கா தேசத்திற்கு
நபியின் நேசத்திற்காய்


அட்சய பாத்திரங்களும் வற்றிப் போகும்
மொழிகளெலாம் காணாமல் மறையும்
நாயகமே
உங்களை சொல்ல புகுந்தால்


லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
மேககூட்டத்தை சிதறடித்து
இறையின் நேசத்திற்குள் மறைகிறது
சுவர்க்கத்தின் கனவோடு
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
Quote
+1 #4 Zulfikar 2014-02-08 16:44
ரமழான் கவியணி.....
------ அறபி (சுல்பிகார் நம்பாளி)

குன்
ஆகுக எனும்
அணுத்துகள் ஓசையில்
அண்டங்களை அணியாக்கி
அன்பளிப்பால் நிறைந்தவனே

ஒரு தாய் அரவணைப்பில்
திணறிப்போய் வாழும் எமை
பல தாய் நேசத்தில்
வாஞ்சையுடன் நிறைப்பவனே

தீமைக்கே தலை தாங்கி
தினம் நூறாய் அசைபோடும்
மக்களில் மாக்களை
மன்னித்தே மன்னிக்கும்
யா அல்லாஹ் காத்திடுவாய்

உருவிய வெறியுடன்
சிரம் அறுக்க விரைந்தவரை
கலிமா சொல்ல வைத்து
கலீபாவாக்கிய நாயகமே
எந்தன் சலாம்
கருத்த மனதினை
வெள்ளை திரையாக்கிய
மருத்துவம் ரமழான்

இருள் காட்டினில்
தொலைந்து போன நேசம்
இங்கு
தூசு தட்டப்படுகிறது

ஒன்றிற்கு எழுபது என்ற
புதிய கணக்கு
எந்த பொன் கணக்கிற்கும்
இங்கு தோல்விதான்

விலங்குகளாகிப்போன வாழ்க்கை
சில தினங்கள்
மனிதமாகிறது

முகமூடிகளில் ஒளிந்து போனவர்களை
இங்கு தான்
நிஜத்தில் சந்திக்கலாம்
சிலந்திப் புற்றுகளால்
சோரம் போன மனசு
சற்றே நின்று
சமாதானத்தை பரிச்சயம் செய்கிறது

வெள்ளைப் புறாக்களின்
இராஜ ஊர்வலம்
மனதிற்குள் தரிசனம்
இது ரமழானின் மகத்துவம்

ஏகனின் பாசம்
நாயகத்தின் பயிற்சி
இதுதான்
முஸ்லிமின் பல்கலைக்கழகம்

இங்கு புடம் போட்ட மனசு
சைத்தான்களால் காயப்பட்டாலும்
இப்லிசையும் சிறை வைக்கும்
வலிமையுடன் எழுகிறது

போலி மினுக்கங்களின் பாசியால்
நாகரீகக் கண்ணாடிபோல்
சிதைந்து சிதறியவர்களை
ஒட்ட வைக்கும் மந்திரம் ரமழான்

வீதியோரங்களின்
முகவரியான பட்டினியை
பஞ்சணைகளும் பரீட்சிக்கிறது
பரிசு நிச்சயம்
அல்லாஹ்

விலங்கிடப்பட்ட ஓணான் மனது
ரமழானின் புனித வீதியில்
விமோசனம் வேண்டிடும் பயிற்ச்சியில்

இருப்பதில் ஈகை
மழையென அன்பு
துறந்திடும் பகைமை
களைந்திடும் சினம்
ஆசானாய் ரமழான்

இந்த மரகதத் தடாகத்தில்
மூழ்கி எழுந்தால்
பாவச்சுமைகள்
சிவகாசி சிதறல்களாய்
புஸ்வாண மேடையில்
கண்களுக்கு கடிவாளமிட்டு
ஹூருலீங்களுக்கா ன தவம்
இது
ரமழான் பயிற்றுத் தந்த வித்தை

பாவத்தாங்கிகளாய
கல்லினுள் தேரை
ரமழானின் கதிர்வீச்சால்
குழந்தையாய் பிரவேசம்

நோன்புக் கஞ்சி
எம்மோர் பலருக்கு
பதினொரு மாத
பட்டினியின் விடை

நோன்பு வந்தால்
தெருவிழாதான்
டொயொட்டொவின் பென்ஸ் கனவால்
கையேந்தும் கூட்டங்கள்
வாழையடி ஏழையாய்

விம்மி வெடிக்கின்ற
ஏழைக் குமரிருக்க
செல்வ மகளுக்காய்
பல கோடியில் தங்க மலை

பள்ளியில் நிக்காஹ்
மெல்லத்தான் கசிகிறது
வலிமா உடை வாங்க
சிங்கப்பூர் சென்ற கதை

திருமண மண்டபம் நாடி
நிலவிற்கு செல்வோரே
ஏழைக்கு கல்வி கொடுங்கள்
நீங்கள் வெல்வீர்கள்

கடனுக்கே கடனாகி
அணு உலைக்குள் சுவாசிக்கும்
முகவரிகள் தேடுங்கள்
விளம்பரம் நாடாமல்
விடுதலை தாருங்கள்

கணுக்காலில் புண் வைத்து
பிறர் கையில் குறை கண்டால்
சமுதாயம் வாழ்வதெப்போது
பிரார்த்தனைகள் பலிப்பதெப்படி
Quote
+1 #3 Zulfikar 2014-02-08 16:43
முகமூடி...
------ அறபி (சுல்பிகார் நம்பாளி)
குன்
ஆகுக என்றே
அகிலத்தை தந்தவனே
உன்
நாமத்தில் தானே என் உயிர்ப்பு

ஹிந்தாவையே மன்னித்த
அமைதிக்கடலே
மக்கத்து மாமணியே
எந்தன் சலாம்

ஒரு பலகை
அச்சிட்ட தாள்
அங்கே தான்
வரதட்சணை ஒழிப்பியக்கம்

மவுலான சாரம்
அத்தரில் குளித்த தொப்பி
கை நிறைய தாயத்து
அவர் சொன்னார்
முஸ்லிம்
தவ்பா செய்தால்
பாவங்கள் மன்னிக்கப்படும்
சொல்லி சொல்லி
கேட்கிறார் தவ்பா

வட்டி வாங்குதல் ஹறாம்
நேற்றுத்தான்
வங்கியில் கட்டினார்
வைப்பு முதல்


சுவரொட்டிகள் கண்சிமிட்ட
காவலர் வழிகாட்ட
எங்கள் ஊரில் கொண்டாட்டம்
ஆமாம்
பெரிய வீட்டில்
ஷக்காத் விநியோகம்

பட்டங்கள் வாங்கவில்லை
ஒ எல்லும் தாண்டவில்லை
போய் வந்தார் மக்கா
பெயருக்கு முன்னால்.....
அல்ஹாஜ்

நிக்காஹ் ரிஜிஸ்டரில்
இருபது பவனாம்
ரகசியம் கூவியது
மாமியாரின் அன்பளிப்பு
மகளுடன் லேன்ட் ரோவரின் சாவியாம்


வாப்பா உம்மா ஓடாய் தேய
சகோதரிகள் முப்பதில் கன்னியாய்
இவரோ
விமான நிலையத்தில்
பதினெட்டாவது உம்றாவாம்எட்டு பனிரெண்டு
இருபது என
மட்டை தூக்கி நின்றோம்
எங்கிருந்தோ வந்தவை
இருத்தலுக்கே தீ வைத்தும்
இன்னும் நாம் அடிதடியில்

நகையும் வீட்டு பத்திரமும்
வங்கியில் பத்திரமாய்
விளம்பரத்தின் வர்ணத்தில்
கையேந்துகிறார் கஹுபாவில்

பழரசங்கள் புதினப் பெயர்களில்
பொரித்தவைகள் இப்தாரின் அணியில்
தம்பி சொன்னான்
வருடமுழுவதும்
நோன்பு வைப்போமேஇப்தார்
மூவேளை சாப்பாட்டின் ஒரே நாமம்
நம் தோல் பானை
அதற்க்கு சான்று

பட்ஜெட் பட்டியல் எகிறிக்குதிக்கி றது
மாரடைப்பும்
ராமதானில் அதிகமாம்
மருத்துவமனைகள் ஒப்பம் வைத்தன

நோன்பு
பசியின் ருசியறிய
ஆனால் இன்றோ
சமையல் புத்தகத்தின்
செய்முறை பயிற்சியில்

பழவத்தல் சுக்குகஞ்சி
என் தாயோடு போனது
மேசை நிறைக்கும் பொரியல்
சீதனமாய் வந்ததுரமழான்
இறையின் அன்பளிப்பு
தேடுவதற்கான சுரங்கம்
வழங்கி மகிழும் நேசம்
பசிக்கும் வயிற்றுடன் அறிமுகம்
லைலதுல் கதிரெனும் மாணிக்க குவியல்
இது சகோதரத்தின் உச்சம்ரய்யான்
திறந்தே வரவேற்கும் சுந்தரக் கதவு
நாம்
எந்த கனிகளுடன்
இறைவனை தரிசிப்போம்

ஆமாம் விளம்பரம்
அச்சிட்ட தாள்
இங்கே நடக்குது
அரங்கேற்றம்
Quote
+2 #2 Abdul Rashid.. 2013-12-28 16:29
The Complete Postal Address with Mobile number is required for Calender Dispatch
Quote
+2 #1 Peer Navas 2013-12-27 21:23
Thengai Nanban
Quote

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh

We have 88 guests and no members online