User Submitted Articles

மறக்க முடியுமா?

Written by mnhameed on . Posted in user submitted

பழைய பள்ளிகூடம்

 

எத்தனை வயதிருக்கும் இந்த பள்ளிக்கூடத்திற்கு?  நூற்றாணடை கடந்திருக்குமா?

இதன் முதல் மாணவர் யார்? இதன் ஆரம்ப கால சரித்திரம் அறிந்தவர் யாரேனும் இப்போது பட்டணத்தில்உண்டா?

புதிய பள்ளிகூடம் வந்ததால் ’பழைய பள்ளிகூடம்’ என பெயர் பெற்றிருக்குமோ?

இந்த பழைய பள்ளிகூடம்இதுவரை எத்தனை பேருக்கு எழுத்தறிவித்திருக்கும்?

 

பழைய பள்ளிகூடத்தை பற்றி நினைக்கும் போது முத்தையனைப் பற்றியும் பீருக்கண் காக்காவைப் பற்றியும் நினைக்காமல் இருக்க முடியுமா? முத்தையன் சத்துணவு சமையல்கர்ரராக, துப்புரவுகாரராக, பியூனாக,எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்களின் நல்ல நண்பனாக - பன்முக பரிமாணத்தில், மரணம் வரைஇப்பள்ளியிலேயே பணியாற்றியவர்.  தனது பொக்கை வாய் சிரிப்பால் மாணவர்களின் உள்ளம் கவர்ந்த இவர்,வார/ வருடாந்திர விடுமுறைகளில் பொட்டக்குளத்தில் கயிறு திரிக்கும் பணியில் ஈடுபடுவதுண்டு.

பள்ளிக்கூடத்திற்கு எதிரிலேயே கடை வைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையானஅனைத்தையும் எந்த நேரமும் வினியோகம் செய்தவர்.  மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமு இன்முகம்காட்டி எத்தனை தடவை கடன்கேட்டாலும் முகம் சுளிக்காமல் கொடுத்துதவியவர். இப்போது பஹ்ரைன்தேசத்தில் பழக்கடை நடத்திவரும் இவர் இப்போதும் பள்ளிகூடம் பீருக்கண் காக்கா என்றே அறியப்ப்டுகின்றார்.

 நான் இப்பள்ளியில் சேரும் போது யார் தலைமை ஆசிரியர் என நினைவில்லை.  என் நினைவில் வரும் முதல்தலைமை ஆசிரியர் ஜனாதிபதியிடமிருந்து நல்லாசிரியர் விருது பெற்ற முன்சிறை நீலகண்ட பிள்ளையும்,அதன் பின்னர் தர்மராஜும் ஆவர்.   நீலகண்டபிள்ளை சாருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தையொட்டிபாரட்டுவிழா நடத்தப்பட்டது.  .என்னை பயிற்றுவிதத ஆசிரியர் நினைவில் நிற்பவர்கள்: ஞானமுத்து,தூத்துக்குடி சார் (இயற்பெயர் தெரியாது), அண்ணாமலை, அம்சி ராமசாமி, புதுக்கடை ராமசாமி, ஆபேல்,றசல்ராஜ், வேலுக்கண், அரபி ஆசிரியர் அஹ்மது (குளச்சல்) ஆகியோர்.  இவர்களில் வேலுக்கண், அம்சிராமசாமி, புதுக்கடை ராமசாமி ஆகியோர் இப்பள்ளியில் நீண்டகாலம் பணியாற்றிவந்தனர். பல ஆசிரியர்களின்பெயர் நினைவில்லை.  சில ஆசிரியர்களின் வட்டப்பெயர் மட்டுமே தெரியும்.  கண்ணியம் கருதி அவைகளைதவிர்க்கின்றேன்.

அடிக்கடி வகுப்புகள் புதிய பள்ளிகூடத்திற்கும், அங்குள்ள மாணவர்கள் பழைய பள்ளிகூடத்திற்குமாகமாற்றப்படுவதுண்டு. மரத்தடி வகுப்புகளும் நடப்பதுண்டு. அறுபதுகளில் நான் இப்பள்ளியில் படித்தப்போது  Lவடிவில் நடுநிலைப்பள்ளியாக இருந்த பள்ளிகூடம் இன்று  கை ஒடிந்த L  ஆக உள்ளது. தென்னைஒலைகளாலான கூரையும் மண்ணால் (அல்லது சாணியால் - சரியாக ஞாபகம் இல்லை) மொழுகப்பட்ட்தரையினையும் கொண்டிருந்தது. வகுப்பு நடக்கும்போதே ஒலைக்கூரை வழியாக வந்துவிழும் சூரியஒளிக்கற்றையினை புத்தகத்தில் பிடித்து விளையாடுவதுண்டு.  தமிழ் மலையாள வகுப்புக்கள் ஒன்றாகவேநடத்தப்பட்டது. நோட்ஸ் மட்டும் தனித்தனியாக தமிழிலும் மலையாளத்தில் கொடுக்க்பட்டது.

என்னோடு பயின்ற பள்ளித்தோழர்களில் சிலர்:  N.S. பசீர், உபைதுல்லா (ஷாஜி ஹோட்டல்) ஷாகுல் ஹமீது(பேப்பர்) முத்தலிப் (வாழவிளாகம்) பரீது (வக்கீல்) பசீர் (இனயம்) பகவதி பெருமாள், பாரூக் (பலத்தடி)ஜஹாங்கீர், மீரான் மலுக்கு (டிரைவர்), தொண்டு மைதீன், ஹனீபா, பீருக்கண் (நூல்காரர் வீடு), அலிககண் (பருஎலப்பை), ஷாபி, அப்துல் ரகீம் (தேங்காய் வியாபாரி) ஆகியோர்.  காயல்பட்டணத்தை சேர்ந்ந்த மாணவர்ஒருவரும் (பெயர் ஞாபகமில்லை)  ஒரு சில மாணவியரும் என்னோடு பயின்று வந்தார்.

விடுமுறையில் வரும்போதெல்லாம் இப்பள்ளிகூடத்தின் வழியாக சென்று பசுமை நிறைந்த நினைவுகளைபுதிப்பதுண்டு. இப்போது அந்த பள்ளிக்கூடத்தில் உள்ள ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ என்னைதெரியாது என்றாலும் எனக்கும் இந்த பள்ளிகூடத்திற்குமான தொப்புள் கொடி உறவை நான்மறக்கவில்லை. எனக்கு இந்த பள்ளிக்கூடத்தை தெரியும்.

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh

We have 55 guests and no members online