எதற்கொரு தனி நாள்?

Written by shuhaib m haneefa on . Posted in poems

ஆண் மகன் நான்....

தடம் பதிக்கிறேன் குழந்தையாய்
தாங்கிப் பிடிக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் தாயின் வடிவில்

வளர்ந்து வருகிறேன் பாலகனாய்
கூடி விளையாட காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் அக்காவின் உருவில்

படித்து வருகிறேன் மாணவனாய்
வழிகாட்டி உயர்த்தக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் ஆசிரியரின் வடிவில்

வலம் வருகிறேன் சுமைதாங்கியாய்
ஊன்றுகோலாய்த் தாங்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மனைவியின் உருவில்

உறைந்துபோய் இருக்கிறேன் பாறையாய்
உருக்கி மனிதனாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மகளின் வடிவில்

ஓய்ந்துபோய் இருக்கிறேன் முதியவனாய்
மீண்டும் குழந்தையாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் பேத்தியின் உருவில்

எங்கும் அவள்
எதிலும் அவள்
எல்லாமே அவள்
எல்லா நாளுமே அவள்

பிறகு ஏன் இந்தநாள்?
அவளுக்கென
தனியே ஒரு நாள்!

By: shuhaib

Comments   

0 #1 sameer.a 2011-10-14 18:07
எல்லாம் காதலில்....

ஒரு சொல்லில் மரணத்தையும்
மறுசொல்லில் ஜனனத்தையும் ருசித்ததுண்டா?
இல்லையென்றால்
காத்திருக்கும் கலக்கத்தையும்
கண்டபின் குதூகலத்தையும் ஒரு சேர அனுபவித்ததுண்டா ?

காதல்.... இது ருசிக்கவும் வைக்கும்
மனம் மரிக்கவும் வைக்கும்...

முதலில் உடலிலே உயிர் மாறும்
உருவத்தில் மெருகேறும்
கன்னி முகம் வெண்ணிலவாகும்
கவிதைக்கும் கால் முளைக்கும்.....

காலையில் கண்ணாடி காதலியாகும்
இரவினில் தலையணை தலைவியாகும்
எதிர்ப்பார்ப்புகள் ஏணியாகும்
எடைக்குறைவு தொடச்சியாகும்.. ...

தூக்கங்கள் தூரமாகும்
இரவுகள் பாரமாகும்
தனிமை நரகமாகும்
நினைவுகள் சொர்க்கமாகும்.. ...

புல்லும் புல்லாங்குழலாகு ம்
புத்தகம் தூதுவாகும்
கருவிழி வழியே கடலும் பிறக்கும்
ஒளிவிழி சுடரில் வெண்ணிலவும் உதிக்கும்....

பெண் இவளின் புன்னகைக்கு
போர் வாளும் பொடிந்துவிடும் என்றால்
என் இதயம் என்னவாகும் சுந்தரியே.....

பூவிழியின் ஓரப்பார்வைக்கு
பூலோகமும் தவமிருக்கும்
வெண்ணிலவும் வெட்கப்படும் கன்மணியே.....

விரைந்தோடிய சமயங்களில்
இதயம் விரும்பி துடித்த நிமிடங்களும்... .
உரையாடிய பொழுதுகளில்
என்னை களவாடிய தருணங்களும்....

நடமாடிட பாதைகளில்
நகராமல் நின்ற பாதங்களும்....
கவி பாடிட கவிதைகளில்
உயிர் உருகிய தேடல்களும்....

நீ அழைக்கும் ஒலியலையில்
நாள் முழுவதும் உன் நினைவலைகள்
ஒலியே உன் ஒளிமுகம் காட்டிவிடு....

உயிர் துடிக்கும் உன் நினைவில்
உன்னை காணும் அந்த நொடியில்
உயிர் சாந்தம் அடையும் உன் மடியில்...

பெருமழையில் நாம் ஒரு குடையிலும்
பேருந்து பயணத்தில் அருகருகிலும்
கைக்கோர்த்துக்கொண்டு சிறுவழியிலும்
கைக்குட்டையாக உன் கையிலும்....

கண்கள் மூடாமல் வரும் நேச கனவிலும்
நனையாமல் பொழியும் மாய மழையிலும்
ஓர் இரவு உன் அறையிலும்
உறங்காமல் உன் மடியிலும்....

எத்தனை ஆசைகள் உன்னால்
அத்தனையும் இன்று அசைவில்லாமல்
வெறும் கனவுகளாய்...

உனக்காக யாவும் செய்கின்றேன்
உன்னை காண உயிர் பூத்து வருகின்றேன்
காரணம் சொல்லாமல் நீயும்
காதலை கொல்லாமல் நானும்...

உன் நிழலைக் கூட
என் விரல் தீண்டவுமில்லை
நாம் காதல் எல்லைக்கோட்டை
இதுவரை தாண்டவுமில்லை.. ..

கன்னியின் இறுதி ஊமைப்பேச்சு
காதல் இல்லை என்ற வெற்றுப்பேச்சு
காதலின் பிறவிக்குணம்
கல் நெஞ்சிலும் காயம்படும்....

நெஞ்சம் நிறைந்த ஆசைகளோடு
அவள் முன் நின்றேன்
கஞ்சனாய் அல்ல
ஊமையாய்...

சொல்லாத சொல்லும் இங்கே
சொல்லாமல் வாழும்
சொன்னால்தான் காதல் சொற்கள்
கொல்லாமல் சாகும்....

என் கவிதைக்கும் கண்கள் உண்டு
அதனால்தான் அவள் அழுவதற்கு முன்
அது அழிந்து விடுகிறது...

என் கவிதைகளை வாசிக்க தவறாதவள்
என் கண்ணீரை நேசிக்க தவறிவிட்டாள்
கண்ணீர் அவளிடம் பேச வேண்டும்
கவிதைக்கும் ஏனோ கல்லறை மீண்டும்....

நம் காதல் பொய்யல்ல
காதலின் வலியும் இரண்டல்ல
கண்ணீர் துளியும் தீரும் ஊற்றல்ல
காலம் கடந்தும் காதல் வளருதே....

காணும் கனவெல்லாம் கண்ணீரின் சாபங்கள்
தூங்காத இரவெல்லாம் தூயவளின் துயரங்கள்
கல்லறை பூக்களாய் மரணத்தின் உணர்வுகள்
காகித கடிதத்தில் கவிதையாய் உணர்ச்சிகள்....

உள்ளம் சிலிர்த்த உத்தமியின் அன்பை
மரணத்தின் விளிம்பிலும் மறக்காது என் மனம்......

-அல்ஹம்துலில்லா ஹ்
கவிதை ஆக்கம்; சமீர்.அ, தேங்கை...
Quote

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh

We have 70 guests and no members online