கல்லூரி

Written by SHUHAIB on . Posted in poems

 

சீருடை முத்திரைகள்
இங்கு தான்
முதன் முறையாக
நிராகரிக்கப்படுகின்றன
இவற்றின் நுழைவுத் தகுதி
பொருளாதார ரீதியிலும்
சாதி சமய அடிப்படையிலும்தான்
வழங்கப் படுகிறது.
மூக்குக்கண்ணாடியில்
முகம்பார்த்து
திருப்தியடைந்தவர்கள்
இங்குதான்
நிலைக் கண்ணாடியின் முன்
நிறுத்தப் படுகின்றனர்.
புதுப் புது
வர்ணனைச் சொற்களின்
அகராதிகள்!
தொடுக்கப்படுவதும்
இங்கேதான்.
அரைகுறை நாகரிகங்கள்
அரங்கேற்றப்படுவதும்
இந்த
ஆற்றங்கரைகளில்தான்.
‘படிக்கவரும் பெண்களுக்கு
அடுப்பெது’
என்று
பெண்களின் நிலையை
உயர்த்தியதும் இங்கேதான்.
அரசியல்வாதிகளும்
அறிவியலாளர்களும்
உருவாக்கப் படுவதும்
இதன் சுவர்களுக்கிடையேதான்.
பாதாள அறையில்
பத்திரப் படுத்தப்பட்ட
பல்கலைகளும்
இங்கே
பகிரங்கமாய் பரிமாறப்படுகின்றன.
இந்த வாடகை வீடுகளில்
குடியிருமைபெற்று!
சொந்தம் கொண்டாடுபவர்கள்
காலடி வைத்த
மூன்றே ஆண்டுகளில்
கட்டாயமாக
காலிப் படுத்தப் படுகின்றனர்.
பாடிக்களித்து
ஆட்டம் போட்டவர்கள்
பாசாகாமல்
அடுத்தடுத்த ஆறுமாதங்களுக்குள்
ஆஜராகும்
ஆயுள் கோர்ட்!
இந்த மேம்பாலங்கள்
இறுதியில்
வேலையில்லா திண்டாட்டம்
எனும்
வேதனைச்சாவடியில்
கொண்டு
தவிக்க விடுகின்றன.
இந்த காவல்துறைகள்
காலை முதல் மாலை வரை
மழை வெயில் பாராமல்
குறித்த நேரம் முடியும் வரை
கல்விக் கைதிகளை
கட்டிக்காகின்றன.

Comments   

0 #1 Rashid.. 2010-08-14 17:19
when reading this my college first day memories are running through my mind.

i am going to out by this year...

my sweetest days are my college days only...

shuhaib you made again... rocking
Quote

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh

We have 91 guests and no members online