BTMJ Family Gathering 2016
பஹ்ரைன் தேங்காய்பட்டனம் முஸ்லிம் ஜமாஅத்
“ஓன்றுகூடல் நிகழ்ச்சி”
வரலாற்றில் முதன்முறையாக நம் பிறந்த மண்ணிற்கு தேங்காய்பட்டணத்துக்கு விழா எடுத்து சிறப்பாய் நடத்தி முடித்தது BTMJ நிர்வாகம்.
BTMJ தலைவர் ஜனாப். முஹம்மது மாஹீன் வரவேற்புரை நிகழ்த்தினார், விழாவில் கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்ளப்பட்டது, கலந்துகொண்ட குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்பட்டது.
பட்டணம் மக்களும் அவர்தம் குடும்பத்தினரும் திரளாய் கலந்து கொண்டு சிறப்பித்தனர், சகோதரிகள் முதன்முறையாக தங்கள் வீடுகளில் செய்த பட்டணத்து பலகாரவகைகளின் அணிவகுப்பு நடத்தி அனைவரின் பாரட்டையும் பெற்றனர்.
குழந்தைகள் பேச்சு, கிராஅத், பாட்டு என விழாவினை தம் பங்கிற்கு சிறப்பித்தனர்.
பட்டணத்தைப் பற்றி ஜனாப். தாசீம் பாடிய பாடல்கள் விழாவில் பாடப்பட்டது.
கவிஞர் தாஹா ஹுசைனின் பட்டணத்தின் தென்றல் நம்மை பட்டணத்திற்கே கொண்டு சென்றது.
ஜனாப் M.A.M. ஷரபுதீன் குடும்பமற்ற தனி வாழ்க்கை என்னும் தலைப்பிலான பேச்சு தனித்து வாழ்வோரின் தவிப்பை சொன்னது.
ஜனாப். குறிஞ்சியாரின் அன்னை தேசத்திலிருந்து எண்ணெய் தேசத்திற்கு என்னும் தலைப்பிலான பேச்சு வளைகுடா நாட்டைப் பற்றிய மாயையினை கோடிட்டு காட்டியது.
ஜனாப். நசீர் ஆலிம்ஷா பட்டணத்தின் சிறப்புக்கள் பற்றியும் பட்டணத்து மக்களாய் பிறந்த பெருமை பற்றி பேசினார்.
முத்தாய்ப்பாக குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு போன்றவற்றின் பிரச்னைகளை அணுகும் முறை பற்றி ஜனாப் செய்யது பக்ருதீன் தங்ஙள் பேசினார்,
நன்றியுரை ஜனாப். ஸபூர், BTMJ’s Secretary வழங்கினார், வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சிகளை தொகுத்து சிறப்பாக வழங்கிய ஜனாப். முத்தலிப் அவர்களையும் பாராட்டப்பட்டது.
பஹ்ரைன் தேசிய தினம் கொண்டாடும் இவ்வேளையில் ஒரு பட்டணம் விழா. ஆஹா என்ன பொருத்த்ம். இனி கடைசி பட்டணத்துக்காரன் பஹ்ரைனில் உள்ள நாள் வரை இது நினைவிருக்கும். இன்ஷா அல்லாஹ்.
இந்நாளில் பட்டணம் விழா கொண்டாடி பஹ்ரைன் தேசிய தினத்துக்கான ஆதரவை தெரிவிக்கும் வகையில் குறூப் போட்டோ எடுக்கப்பட்டது.
இரவு விருந்துடனும் விழா இனிதே முடிவுற்றது.
BTMJ