BTMJ General Meeting (பொதுக்குழு) 2015
எல்லாம் வால்லா அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) 33வது பொதுக்குழு 30/01/2015 (Centurry Anarath Hall-Bahrain)ல் வைத்து சிறப்பாக நடந்தது. அல்ஹம்துலில்லாஹ்...
சென்ற வருடம் தேர்ந்தெடுக்கபபட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வில் ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முதலில் Irfan Koya Thangal S/o Najumudeen Koya கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது.
BTMJ President, S. Mohamed Maheen அவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் சென்ற வருடம் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். அதற்கு உறுதுணையாக செயல்பட்ட செயற்குழு உறுப்பினர்களையும், அதற்காக வேண்டி பண உதவியும், பொருளுதவியும் ஏற்பாடு செய்து தந்த எல்லா உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.