மார்க்க அறிஞருக்கு பாரட்டு விழா

Written by Administrator on . Posted in news

அஸ்ஸலாமு அலைக்கும்,
 
அஹ்லு பைத் அங்கமும், பன்மொழி புலமை பெற்ற மார்க்க அறிஞரும், சமூக ஆர்வலருமான தேங்காய்பட்டணம் பக்ருதீன் செய்யது பூக்கோய அல்பாபக்கி தங்ஙள்  அவர்தம் 30 ஆண்டுகளுக்கு மேலான மார்க்க பணிக்காக பஹ்ரைன் சமஸ்த கேரள சுன்னி ஜமாஅத்தால் கௌரவிக்கப்பட்டார்கள்.
 
அண்மையில் பஹ்ரைன் விஜயம் செய்த சமஸ்த கேரள ஜம்மியத்துல் உலமா தலைவர் ஷெய்க்குனா கோயாக்குட்டி முஸ்லியார் மனாமா பாகிஸ்தான் கிளப்பில் வைத்து நடந்த விழாவில் தங்ஙள் அவர்களை பாரட்டி கேடயம் வழங்கி கௌரவித்தார்.  விழாவிற்கு  பஹ்ரைன் சம்ஸ்த கேரளா சுன்னி ஜமாஅத் தலைவர் செய்தலவி முஸ்லியார் தலைமை தாங்க, கேரள S.Y.S. செயலாளர் அப்துல் ஸமது பூக்கோட்டூர் சிறப்புரையாற்றினார்.
 
தங்ஙள் அவர்கள் எல்ல நலனும் பெற்று நீண்ட ஆயுளுடனும் நிறைவான ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு மார்க்க பணியும் சமூக பணியும் ஆற்ற இறையருள் வேண்டி இறைஞ்சுகின்றோம்.
 
M.N. HAMEED - BAHRAIN - TEL: (973) 39386654

Comments   

0 #2 Guest 2013-04-08 13:53
dear admin,i`ve a doubt?? is he is from ahlu sunnah or ahlu baith? did he following the shia cult?
Quote
0 #1 Guest 2013-03-31 08:05
எல்லாம் வல்ல அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களை இம்மையிலும் மறுமையிலும் கண்ணியபடுதுவானா க ஆமீன்
Quote

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh